காதல் பெரும்பாலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலமும் ஏற்றுக்கொள்வதன் மூலமும் அடையப்படுகிறது என்பது எல்லாம் சினிமா கருத்துக்கள் மக்களே !
உண்மையில் காதலில் வெற்றி என்று சொல்லக்கூடிய அனைத்தையும் அடைய ஒருவரை ஒருவர் தங்களுடைய குறைகளை கருதாமல் ஏற்றுக்கொள்கின்ற இந்த சினிமா காட்சிகள் எல்லாம் லவ் டுடே படத்தை பார்த்து கெட்டுப் போகக்கூடிய விஷயமாக எடுத்துக் கொள்ளுங்கள்
ஒருவரை ஒருவர் தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயங்களை வைத்து ஏற்றுக்கொள்வதை கொடுப்பதன் மூலமாக தற்காலிக தீர்வு தான் உங்களால் அடைய முடியும்.நிரந்தர தீர்வை உங்களால் அடைய முடியாதே !
இவ்வாறு காதலுக்கு ஒரு தற்காலிக தீர்வைக் கொடுப்பதற்குப் பதிலாக, காதலர்கள் தங்களை ஒரு குடும்பத்தின் கணவன் மனைவியாகக் கருதி, தங்கள் வாழ்க்கைக்கு சரியான திட்டங்களை வகுப்பதைப் புரிந்துகொள்வதே நிரந்தரத் தீர்வாகும்.
என்னப்பா இது காதலிக்கும் நாட்களிலேயே இது போன்ற பொறுப்புகளை எடுத்துக் கொள்வதா ? கொடுமையிலும் கொடுமை ! இது சலிப்பு தட்டக்கூடிய விஷயமாக மாறாதா ? என்று இளம் காதலர்கள் மனதுக்குள் பொங்குவது எங்களது வலைப்பூவில் கேட்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இது போன்ற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் தான் திருமணம் மற்றும் குழந்தைகள் நிறைந்த உங்களின் நிரந்தர வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
மறுபடியும் சொல்கிறேன். காதல் என்பது தற்காலிகமான வாழ்க்கை. அந்த நேரங்களில் இருக்கும் உணர்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். திருமணம் என்பதுதான் நிரந்தரமான வாழ்க்கை. திருமணத்தின் பின்னால் வாழ்க்கையை சரியாக அமைவதற்காக அனைத்து விஷயங்களையும் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக