நமது வாழ்க்கையில் எப்போதுமே நம்முடைய வெற்றி மட்டும்தான் பெரிய வெற்றி என்று கருதக்கூடாது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய 1000 பேரை சொந்த செலவில் லண்டன் வரையில் சுற்றுலா அனுப்புவதைப் பற்றி முடிவு செய்து வைத்திருக்கிறது.
காரணம் என்னவென்றால் எப்பொழுதுமே மற்றவருடைய உழைப்பு இல்லாமல் நம்முடைய முன்னேற்றம்.அடையாது நமக்காக நம்முடைய உழைப்பை கொடுக்க கூடிய ஒரு நல்ல மனிதர்கள் அமைப்பு நமக்காக வேலை பார்க்கும் சொந்தங்களாக கிடைத்தால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நல்ல விஷயங்களை நடத்த வேண்டும்.
இருந்தாலும் இத்தகைய நல்ல மனிதர்களை சந்திப்பது என்பது மிகவும் கடினமானது. நம்முடைய வாழ்க்கையில் நம்மிடத்தில் நடிக்க கூடியவர்கள் தான் கவனமாக நடிக்கிறார்கள். இதனால் தான் நாம் நிறைய நேரங்களில் ஏமாந்துவிடுகிறோம்
இந்த வகையில ஏமாற்றங்களை நாம் சந்திக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையே மிகவும் கடினமான பாதையாக மாறிவிடுகிறது. நாம் எப்போதுமே தோற்றுப் போன நமது இந்த பதிப்பை நம்முடைய அடையாளமாக நம கருதுகிறோம். அதுவே நமக்கு மிகப் பெரிய பாரமாகவே அமைந்து விடுகிறது.
ஆனால், நம் வாழ்வில் இதுபோன்ற கடினமான விஷயங்களை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள முடியும். இதைப் பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டங்களில் முன்னேறுவதற்குப் பதிலாக, இழந்ததைப் பற்றி வருத்தப்படுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது.
கடந்த காலம் கடந்த காலம்தான் என்பது வாழ்க்கை முடிவு பண்ண விஷயம் இது முடிந்து போன விஷயம் என்பதால் இனி வருங்காலம் குறித்து நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
எனவே நம்முடைய வாழ்க்கையில சந்தோஷத்தையும் பாசிட்டிவிட்டியையும் ஆப்டிமிஸத்தையும் உருவாக்கிக் கொள்வதுதான் மிகவும் சிறப்பான காரியம். நமக்காக நம் வாழ்க்கை வாழ்ந்து கொடுக்காது நம்முடைய வாழ்க்கைக்காக தான் நாம் மாற வேண்டும் என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக