நான் எப்பொழுதுமே அளவுக்கு அதிகமாக செலவு செய்து நாம் மிகவும் பணக்காரராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையை வளர்த்துக் கொண்டு நம்முடைய உண்மையான வாழ்க்கையின் ஏழ்மை நிலையில் இருக்க கூடிய பிரச்சினைகளை சந்திக்க முயற்சி செய்யாமல் ரியாலிட்டில் இருந்து பிரிந்து வாழக்கூடாது. இப்படி இருந்தால், நம் பிரச்சினைகளை எதிர்கொள்ள முயற்சிக்கும்போது நமக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. பிரச்சனைகளில் இறங்குவதன் மூலம் மட்டுமே அவற்றை சரிசெய்ய முடியும். இவற்றைத் தவிர்த்து, மேலோட்டமாகச் செயல்பட்டு, பிரச்சினையைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது பெரும்பாலும் பிரச்சினையைத் தீர்க்காது. அதனால்தான் ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதாவது, உங்கள் வாழ்க்கையின் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். உங்கள் நிகழ்கால அணியுடன் களத்தில் இருங்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். நிகழ்காலத்தில் உங்கள் வளர்ச்சியைப் பற்றியும் எதிர்காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள் ? அதைப் பொறுத்து, நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்களை நீங்கள் மாற்றலாம். நிகழ்காலத்தில் நீங்கள் எந்த விஷயத்தையும் மாற்றப்போவதில்லை என்றால் எதிர்காலத்தில் நீங்கள் அனைத்துமே உங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று ஆசைப்படுவது நிறைய நேரங்களில் நடக்காது இந்த நிகழ்கால பிரச்சனைகளை இறங்கி சரி செய்வது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால் ரியாலிட்டி இதுதான். அந்த மரியாதைதான் உங்களைக் கட்டியெழுப்புகிறது. நிகழ்கால பிரச்சனைகளை இறங்கி சரி செய்பவர்களுக்கு மரியாதை பலம், சந்தோஷம் என்று எல்லாமே கூடுகிறது.அதுவே எதிர்கால கனவுகளில் மட்டுமே மிக அதிகமாக யோசனை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இவை அனைத்துமே கிடைப்பதில்லை. இந்தத் தொடரின் அடுத்த பகுதிகளை இந்த வலைப்பதிவில் படித்து மகிழ மறக்காதீர்கள். இந்த வலைப்பதிவில் உள்ள இடுகைகளைப் படிப்பதன் மூலம் சமூக மாற்றத்துக்கான நமது நிகழ்வை ஆதரிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக