நமது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்று கொஞ்சம் விஷயங்கள் இருக்கிறது. அதாவது நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதுமே நமக்காக ஒரு மோட்டிவேஷன் கிடைக்கும் என்று காத்திருக்க கூடாது.
நாம் தான் வாழ்க்கையில் தகவல்களை எடுத்துக் கொண்டு வேலையில் இறங்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி நாம் தொடர்ந்து புகார் செய்தால், நாம் ஒருபோதும் முன்னேற முடியாது. புகார் செய்வதற்குப் பதிலாக, அவற்றைச் சரிசெய்ய முடியுமா ? அல்லது அவற்றைச் சரிசெய்ய நாம் என்ன செய்ய முடியும் ? என்பதைப் பார்க்க வேண்டும். இல்லையென்றால், அவற்றைப் புறக்கணித்து விட்டுவிட வேண்டும்.
நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அனைவரையும் மகிழ்விக்க நாம் எப்போதும் ஏதாவது செய்தால், அந்த வேலை சரியாக செய்யப்படாது.
நம் வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களில் எப்போதும் குறைபாடுகள் இருக்கும். அது நமக்காக இருந்தாலும் சரி, மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி, அதுதான் இயற்கையின் விதி. அதை யாராலும் மாற்ற முடியாது.
அதேபோல், நம் வாழ்வில் எப்போதும் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. நம் வாழ்வில் நம் சொந்த நிலையை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே, மற்றவர்களை விட சிறந்த இடத்தை அடைய முடியும்.
நம் நிலையை மேம்படுத்த, நாம் நமது சொந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை. அதேபோல், நம் வாழ்க்கையிலும், எல்லாவற்றையும் மிகத் துல்லியமாகவும், முழுமையாகவும் செய்யக்கூடாது,
இப்படி செய்ய அதிக முயற்சி எடுக்க வேண்டும். எனவே மேலோட்டமாகச் செய்தாலும், 100% சதவீதத்தில் 90% சாத்தியமானால் போதும். நீங்கள் துல்லியமான ரிசல்ட் பெற அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, ஒரு விஷயத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றால், அடுத்த சாதனைகளை அடைய உங்களுக்கு நேரம் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக