ஒரு சில நேரங்களில் நம்மிடம் இருக்கும் பணம் மட்டும் குறைந்து போனால் போதுமானது. நம்மை ஒரு காலத்தில் நேசித்த மனிதர்களை இப்பொழுது நாம் எல்லாம் ஒரு ஆளே இல்லை என்பது போல நினைப்பார்கள்.
இது தான் வாழ்க்கையில் மிகவும் தர்ம சங்கடமான விஷயம். பணம் இருக்கும் வரையில் தான் மனிதர்கள் வாழ்க்கையில் மதிக்கிறார்கள். பணம் இல்லை என்றால் மனிதர்கள் எப்படித்தான் கீழே போட்டு நசுக்கும்வார்கள் என்று கற்பனை கூட பண்ணிப் பார்க்க இயலாது.
நாமும் நமக்கான உண்மையான உறவுகள் இவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டிருப்போம். நம்முடைய நட்பு வட்டமும் மிகவும் குறைவானதாக சிறியதாக இருக்கும். இத்தனை சிறிய வட்டாரத்தில் நமக்கு கிடைத்த உறவுகள் நம்மோடு நிரந்தரமாக இருக்கும் என்றும் நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ளும் என்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையில் நடப்பதே வேறு. இங்கே எல்லாமே வங்கிக் கணக்குதான். மக்களே ! வங்கிக் கணக்கு நன்றாக கொழுத்து இருந்தால் நம்முடைய வாழ்க்கையின் பிரச்சனைகளை சரி செய்யலாம்.
மற்றவருடைய வாழ்க்கையின் பிரச்சனைகளை சரி செய்ய முடியக் கூடியவரை நமக்கு சக்தி இருந்தால் மற்றவர்கள் நம்மை மதித்து கொண்டிருப்பார்கள். நம்மிடத்தில் அந்த சக்தி இல்லை என்றால் நம்மிடம் இருக்கக்கூடிய அந்த மதிப்பு தானாகவே பரலோகம் சென்றுவிடும்.
சரியான நேரத்தில் சரியான விஷயம் இதுதான் என்று நாம் சொல்லுவோம். ஆனால் மற்றவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். இதுதான் நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய தர்மசங்கடமாக இருக்கும்.
இந்த பிரச்சனையை சரி செய்யவேண்டும் என்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தால் மட்டும் தான் முடியும் என்று உலகம் ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த உலகத்தின் பாதையில் தான் நாம் சென்று கொண்டு இருக்க வேண்டுமே தவிர்த்து நமக்காக இந்த உலகம் வளைந்து கொடுக்கும் என்று கருதக்கூடாது.
அப்படி நீங்கள் கற்பனையை வைத்துக் கொண்டு உலகம் ஒரு நாள் உங்களுக்காக வளைந்து கொடுக்கும் என்று வாழ்ந்து கொண்டிருந்தால் நீங்கள் தான் கடைசியில் டிக்கெட் வாங்கிக்கொண்டு சொர்க்க பதவி அடைவீர்கள் , நீங்க நம்பலேனாலும் அதுதான் நெஜம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக