செவ்வாய், 18 நவம்பர், 2025

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #7

 


நம் வாழ்வில் நம் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கற்பனையில் வாழக் கூடாது. இதைப் புரிந்துகொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். 

உதாரணமாக, நீங்கள் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள். கனவை நிறைவேற்ற வேலை செய்யும்போது உங்கள் உடல் உழைப்பைக் கொண்டு உங்கள் கனவுகளுக்கான வேலையைச் செய்கிறீர்கள். 

அதாவது, நீங்கள் கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் கற்பனை உங்கள் உடல் உழைப்பை விட கடனாக மட்டுமே இருக்கும் தொகையை பெறுவதன் மூலமாகவோ அது மற்றவர்களின் செயல்கள் மூலம் மட்டுமே நீங்கள் முன்னேற வேண்டும் என்ற தவறான சமூக பணம் சம்பாதிக்கும் கருத்தை உங்களுக்குள் உருவாக்குவதன் மூலமாகவோ தோல்வியின் அடிமட்டத்துக்கு சென்று நின்றுகொண்டு இருப்பதை உணரலாம்.

ரஜினி முருகன் படத்தில் வரும் அந்த நகைச்சுவை காட்சியைப் போலவே, உங்கள் வளர்ச்சியை ஊரே நின்று வேடிக்கை பார்க்கும் என்பது போல மக்கள் கவனிப்பார்கள். அதனால்தான் நாம் நம் வாழ்க்கையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கற்பனையுடன் அல்லாமல் சரியான அறிவோடு எடுக்க வேண்டும்.

நமக்கான பழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, பயந்து கொண்டிருக்கும் இடத்தில் துணிவாக பேசுதல் என்பது ஒரு பழக்கம். அதே போல உங்களுடைய கால்களுக்கு அதிக பலம் கொடுப்பது போல உட்கார்ந்து எழுந்திருக்கும் ஒரு பயிற்சியை செய்வது உங்களுடைய உடற்பயிற்சி.இது போன்ற விஷயங்களை நீங்கள் செய்யாமல் தத்துவங்களை தத்துவங்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்தால் கடைசிவரையில் எழுதப்பட்ட டெக்ஸ்ட்டாக மட்டுமே அந்த விஷயங்கள் உங்களுக்கு இருக்குமே தவிர்த்து உங்களுடைய நடப்பு வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்காது.

மோட்டிவேஷன் கருத்துக்களே நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் ட்ரெய்லரை பார்த்துவிட்டு படத்தை பார்க்காமல் தியேட்டரிலிருந்து திரும்புவதற்கு சமமானதாக இருக்கும். இன்னும் நிறைய கருத்துக்கள் பேசலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் இந்த வலைப்பூவில் ! உங்களுக்காக ஒரு தமிழ் வலைப்பூ TAMILNSA-BLOGSPOT-COM ! 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #7

  நம் வாழ்வில் நம் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கற்பனையில் வாழக் கூடாது. இதைப் புரிந்துகொள்வது உங்களுக்...