நீங்கள் இந்த குறிப்பிட்ட கருத்துக்கு என்ன வேண்டுமென்றாலும் மாற்று கருத்து சொல்லலாம். ஆனால் உண்மையில் கடந்த கால பெருமைகளை மற்றும் பேசிக்கொள்வது என்பது நிறைய நேரங்களில் மக்களுக்கு எதிர்பார்ப்பை விட குறைவான அளவுக்குதான் முன்னேற்றத்தை கொடுத்துள்ளது.
ஒரு தமிழக மண்ணில் பிறந்ததில் பெருமை அடைகிறோம். தமிழகத்தில் இருக்கக்கூடிய கலாச்சாரங்கள் மற்றும் வரலாற்று பெருமைகள் என்பது நிறைய உள்ளது என்று சொல்லிக் கொள்வது நமக்கு போதுமான சந்தோஷத்தை கொடுக்கலாம்.
ஆனால் நாம் தமிழ்நாட்டுக்கு தமிழனுடைய முன்னேற்றத்துக்கு நம்முடைய தமிழ்மொழியின் பெருமைக்கு என்ன செய்தோம் என்பதை கவனமாக யோசிக்க வேண்டும்.
நாம் எத்தனை நிறுவனங்களை ஆரம்பித்து எத்தனை பேருக்கு வேலை கொடுத்தோம். எத்தனை மாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் தலைவர்களாக வாழ்ந்து இருக்கிறோம்.?
கடந்த கால தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களின் கதைகளைச் சொல்வது இப்போது நமக்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால் நாம் அவர்களின் பாதையைப் பின்பற்றி, அவர்களுக்கு இணையாக சாதித்து முன்னேறினால் மட்டுமே, அவர்களைப் பற்றி நாம் உண்மையிலேயே பெருமைப்படுவோம்.
பண்டைய தமிழ் புத்தகங்களைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். ஆனால் எந்தக் காலத்தில் தமிழ் அரங்கிற்கு வந்த புதிய எழுத்தாளர்களை நாம் ஆதரித்திருக்கிறோம்? எந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறோம்? புத்தகங்களை எழுதவும் முயற்சித்திருக்கிறோம்.
பல தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் தமிழை முறையாகக் கற்பிப்பதில்லை என்ற புகார்கள் அதிகம். ஆனால், இந்த விஷயங்களை எல்லாம் எப்போது முன்னெடுத்துச் சென்று நிர்வாகத்திடம் பேசி, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைப் பாதுகாத்துள்ளோம்?
சாதனைகள் நாம் நம்மை சரியாக வழிநடத்தப்படும் போது தான் நமக்காக கிடைக்க கூடிய விஷயங்கள் சாதனைகள் என்பது கடந்த காலத்தின் விஷயங்களாக மட்டுமே இருக்கக்கூடாது என்பதை இந்த வலைப்பூவின் நோக்கம் நிகழ் காலத்தில் நாமும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே இந்த கருத்துக்களின் சாராம்சம் என்றும், இந்த வலைப்பூவின் பதிவு வாயிலாக கம்பெனியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக