“மரணத்திற்கு பின் நாம் எங்கே செல்வோம்?” என்ற கேள்வி யானை, எறும்பு, மனிதன் என எல்லா உயிர்களுக்கும் பொருந்துகிறது. இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிருக்கும் சம மதிப்பு இருக்கிறது.
எறும்பு இறந்த பின் சொர்க்கம், நரகம் இல்லை என்றால், மனிதனுக்கும் இல்லை. மனிதன் நல்லது செய்தால் சொர்க்கம், கெட்டது செய்தால் நரகம் என்று மதங்கள் கூறுகின்றன. ஆனால் பிற உயிர்களுக்கு அந்த விதி இல்லை. அப்படியானால், மனிதர்களுக்கே மட்டும் இந்த “சிறப்பு” ஏன்? படைப்பாளர் மனிதன் தவறு செய்வான் என்று முன்கூட்டியே தெரிந்து நரகத்தை உருவாக்கியிருந்தால், அது அவருடைய படைப்பின் பிழையை ஒப்புக்கொள்வது போல ஆகும் அல்லவா ?
மேலும், சொர்க்கம் என்பது உண்மையில் குடும்பம், உறவுகள், நண்பர்கள், அன்பு, சமூகம் இவற்றை சரியாக பயன்படுத்த உதவும் படிப்பு, வேறு உலகில் கிடைக்கும் சுகபோகங்கள், ரம்பா, ஊர்வசி, மேனகை போன்ற கற்பனைகள் இவை அனைத்துக்கும் கற்பனை கொண்டு பிரச்சனைகளை சமாளிக்கும் யோசனைகளை காரணம் !.
பெண்கள் பூமியில் நல்லது செய்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு என்ன சுகபோகம்? இதை யாரும் விளக்கவில்லை. இஸ்லாம், கிறித்துவம், இந்து போன்ற மதங்கள் சொர்க்கம் நரகம் என்ற கருத்தை கொண்டுவந்தது மக்கள் நலமாக வாழத்தான் மக்களே ? உண்மையில் அப்படியானால், ஒவ்வொரு மதத்திற்கும் தனி கிரகம் கொடுத்திருக்கலாமே? இந்த பிரபஞ்சத்தில் கிரகங்களுக்கு பஞ்சமில்லை. ஆகவே, சொர்க்கம், நரகம் கதைகளை ஒரு வயது வந்தபின் நம்புவது தேவையற்றது. உண்மையில், மனிதன் இறந்த பின் எங்கும் செல்லவில்லை; வெற்றிடம் மட்டுமே.
வாழ்க்கையில் பெரும்பாலும் துன்பம், அதை நாம் தலையில் சுமந்து கொண்டிருப்பதால் தான் வருகிறது. “வாழ்க்கைப் பயணம் இனிமையாக அமைய, மனதில் உள்ள சுமைகளை குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சி கூடும்” என்பது உண்மை. இங்கே துறவிகள் இருவர் மழையில் நின்று கொண்டிருந்தனர்.
மழை நின்றதும், ஒரு இளம்பெண் சாலையை கடக்க முடியாமல் தவித்தாள். இளம் துறவி அவளைத் தூக்கி உதவினார். ஆனால் மூத்த துறவி கோபமாக இருந்தார்: “நாம் துறவிகள், பெண்ணை எப்படி தொட்டீர்கள்?” என்றார். அதற்கு இளம் துறவி, “நான் அவளை அப்போதே இறக்கி விட்டேன், நீங்கள் தான் இன்னும் மனதில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.
இதுவே வாழ்க்கையின் பாடம்: பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் சுமக்காமல் விட்டால், வாழ்க்கை இனிமையாகும். அன்பை மட்டுமே நேசியுங்கள். தேவையற்ற குப்பைகளை மனதில் சேர்த்துக் கொண்டால், வாழ்க்கை பாரமாகும். அந்தக் குப்பைகளை தூக்கி எறிந்துவிட்டால், மனம் தெளிவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக