ஞாயிறு, 23 நவம்பர், 2025

நீங்காத நினைவுகளோடு ஒரு வலைப்பூ - #2

 


நடுத்தர வர்க்கக் கதைகள். அதாவது, நாம் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் மக்களாக இருந்தால், அந்தக் காலகட்டத்தில் வெளியான பல படங்களில், பணக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற வில்லத்தனமானkadhaikalai, நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் இப்படித்தான் இருக்க வேண்டும், பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இருப்பதைப் பார்ப்போம். இதுவுமே ஒரு வகை அரசியல்தான். சினிமாவில் இருப்பவர்கள் சினிமா அரசியலை வலைக்குள்ளே போட்டுக்கொண்டு ஏழைகளுக்கு இடம்கொடுக்க கூடாது என்ற நோக்கம்தான் பணக்காரர்களை மோசமான மனிதர்களாக காட்டும் இந்த போக்கு !


இந்த வகை படங்களில் பெரும்பாலும் பணக்காரர்கள் தான் வில்லன்களாக இருப்பார்கள். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் ஹீரோக்களாக இருப்பார்கள். எங்கேயோ இருந்து நமது கதாநாயகனுக்கு, கதாநாயகியின் மேல் காதல் வந்துவிடும். அந்த காதலுக்காக சொத்து பதவி என்று பெரிய பெரிய விஷயங்களில் எல்லாம் நமது கதாநாயகன் கைவைத்து வம்பை விலைக்கு வாங்கி வங்கிகணக்கில் போட்டுக்கொண்டு கதாநாயகன் தவித்து கொண்டிருப்பான். 

ஆனால் எப்படியோ கதாநாயகனுக்கு கதாநாயகியோடு டூயட் பாடுவதற்காக படத்தில் மூன்று நான்கு இடங்களில் சான்ஸ் கிடைத்து விடும். இந்த உயர் இடத்தில் இருப்பவர்கள் வில்லன்கள் என்று சொல்லும் காட்சிகள் ஒரு பிரிவை உருவாக்கி ஏழைகள் முன்னேற வேண்டும் என்று நினைக்கும்போது இந்த பிரிவுகளை சுட்டிக்காட்டி இவை அனைத்துமே வாழ்க்கையின் ஒரு பகுதியே என்றுதான் அந்த காலத்து படங்கள் அனைத்துமே சொல்லுகிறது. 

ஆனால் உண்மையில், பணக்காரர்களை கெட்டவர்களாகவும், ஏழைகளை நல்லவர்களாகவும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பணம் சம்பாதிப்பது அவர்களின் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. ஏழைகள் எந்த வகையிலும் செழித்தாலும், அவர்களிடம் திறமை அல்லது நல்ல அணுகுமுறை இல்லாவிட்டால், அவர்களால் வெற்றி பெற முடியாது. 

இதுதான் இந்த உலகத்தின் உண்மையான, யதார்த்தமான கருத்து. ஆனால் திரைப்படங்களில், ஏழைகளின் இதயங்களைக் கவர, நம் ஹீரோ ஒரு ஆட்டோ ஓட்டுநராக, பால் கறப்பவராக, கடின உழைப்பாளியாக அல்லது சவால்களை வென்று வெற்றி பெறக்கூடிய ஒருவராகக் காட்டப்படுகிறார். 

ஆனால் உண்மையில், அந்த ஹீரோவாக நடிக்கப்படும் நடிகர் சொந்த வாழ்க்கையில் எப்படி வாழ்கிறார் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் நிலைமையையும் சிந்தியுங்கள். உண்மையைச் சொன்னால், அந்த நடிகர் உங்கள் நிலைமையை நீங்கள் மேம்படுத்த விரும்புகிறார். 

நடுத்தர வர்க்கத்தினராகவும் ஏழையாகவும் இருப்பது சிறந்தது என்று கூறும் எந்த திரைப்படத்தையும் ஒருபோதும் நம்பாதீர்கள். அனைவருக்கும் பணக்காரர் ஆகும் திறமை உள்ளது. 

ஆனால் மன அமைதி மற்றும் மனநிறைவு போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் இந்த படங்கள், மக்களின் ஆசைகளை ஒரு கனவைச் சொல்லி, அவர்களை வாழ வைத்து, அந்தக் கனவிற்குள் பணம் சம்பாதிக்க வைக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தால், இந்த வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறலாம். அதுதான் அனைவருக்கும் அன்பையும் ஆதரவையும் அளிக்கக்கூடிய இலக்கணம் என்றால், இந்த வாழ்க்கையில் நீங்கள்தான். மற்றவர்களின் சுயநலத்தால் நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் அதை நம்ப மறுத்தாலும், இதுதான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம். 

கருத்துகள் இல்லை:

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...