சனி, 22 நவம்பர், 2025

GENERAL TALKS - கவனமாக இருக்க வேண்டும் மக்களே !

 




"There's nothing wrong with it if it's good for four people."

இந்தப் பதிவு, இப்போதெல்லாம் ஆன்லைனில் நிறைய பண மோசடிகள் நடப்பதைப் பற்றியது. நீங்கள் இவை அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இங்கே பஞ்சாயத்து என்னவென்றால் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்யை நிறைய நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தலாம் ஆனால் இவர்களோ ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எந்த வகையில் மோசமாக பயன்படுத்த வேண்டுமோ அந்த அந்த வகையில் மோசமாக பயன்படுத்திக் கொண்டு பண மோசடிகளை ஈடுபடுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுடைய மொபைல் நம்பர் இணைப்பு DE-ஆக்டிவேட் செய்யப்படப்போகிறது. உடனடியாக பணம் கொடுங்கள் என்பது போன்ற மிரட்டல்களிலிருந்து.நீங்கள் உங்களுடைய.அடையாள அட்டையோடு ஒரு போதை பொருள் பார்சல் விமான நிலையத்துக்கு வந்துள்ளது. இந்த கேஸில் இருந்து நீங்கள் வெளியே வர வேண்டுமென்றால் நீங்கள் பெரிய பணத்தை அபராதம் கட்டவேண்டும் என்பது போன்ற நிறைய விஷயங்களை போன் மூலமாக மிரட்டி வாங்குவதற்காக ஒரு தனி கும்பல் வெளியே இருந்து கொண்டு இருக்கிறது.

இதனைக் கூட விட்டு விடுங்கள். இதனை விடவும் மோசமான காரியங்கள் எல்லாம் நடந்துள்ளது. உதாரணத்துக்கு நீங்கள் ஆன்லைனில் கிளுகிளுப்பான படத்தை பார்த்து இருக்கிறீர்கள். இது சட்டப்படி குற்றமாகும். ஆகவே நீங்கள் பெரிய அளவில் அபராதத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றெல்லாம்  மிரட்டல்களை விடுத்துள்ளார்கள்.

இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மக்களின் பணமும் சொத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்த வலைப்பதிவின் சார்பாக ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - படிப்பு நமக்காக நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்காது !

  நம் எண்ணங்கள் நம்முடையவை, ஆணவம் வெற்றிபெற செய்யும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கக்கூடாது. இருப்பினும், அது எப்போதும் ஆபத்தானது. இருப்பினும்...