வெள்ளி, 28 நவம்பர், 2025

SPECIAL TALKS - உங்கள் திறன்கள் மேலே உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா ?

 



இணையதளத்தில் இருந்து எடுத்த ஒரு கருத்து பகிர்வு : மேத்யூ மெக்கானஹி ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர். ஆரம்பத்தில் அவர் பெரும்பாலும் சட்டையை கழற்றி தனது அழகான உடல் அமைப்பை வெளிப்படுத்தும் சீனியர் “சாக்லேட் பாய்” கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் காலப்போக்கில், சீரியஸான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் அதிகரித்தது. இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் அவரை எட்டவில்லை. “நீ சட்டையை கழற்றி, காதல் காட்சிகளில் ஜாலியாக நடிததால் போதும், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று ஸ்டூடியோ நிர்வாகிகள் வற்புறுத்தினர்.   ஒரு கட்டத்தில், இப்படியாக தொடர்வது பயனில்லை என்று உணர்ந்து, மனைவியுடன் டெக்சாஸில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று தங்கினார். இனி ரொமான்டிக் காமெடி படங்களில் நடிக்க மாட்டேன் என்ற அவரது முடிவை ஹாலிவுட் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 


மாதங்கள் கடந்து போனது. வேலை இல்லாமல் வீட்டில் இருப்பது அவருக்கு சிரமமாக இருந்தது. “நல்ல வாழ்க்கையை நாமே கைவிட்டோமோ” என்ற எண்ணம் மனதில் தோன்றியது.   அடுத்து என்ன செய்வது என்று பல யோசனைகள் வந்தன - பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கலாமா, சட்டம் படிக்கக் கல்லூரியில் சேரலாமா, அல்லது சுற்றுலா வழிகாட்டியாக முயற்சி செய்யலாமா என்று பல சிந்தனைகள் அவரை வாட்டின. ஆறு மாதங்கள் எட்டாக, எட்டு பன்னிரெண்டாக, காலம் உருண்டோடி 18 மாதங்கள் கடந்தும் எந்த சினிமா வாய்ப்பும் அவரை தேடி வரவில்லை. “திரையுலகம் என்னை மறந்துவிட்டது” என்று அவர் நம்பத் தொடங்கிய நேரத்தில், அவரது ஏஜென்ட் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தின் திரைக்கதை அனுப்பினார். அதற்காக தயாரிப்பு நிறுவனம் 80 லட்சம் டாலர் சம்பளமாக தர முன்வந்தது.  

ஆனால் மேத்யூ யோசிக்காமல் அந்த திரைக்கதையைத் திருப்பி அனுப்பினார். தயாரிப்பு குழுவும் விடாமல், சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியது. அதற்கும் அவர் மறுத்தார். பின்னர் 1.2 கோடி, 1.45 கோடி டாலர் என சம்பளத்தை இரட்டிப்பு அளவுக்கு உயர்த்தினார்கள். 18 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகையுடன் வந்த வாய்ப்பை மறுப்பது எளிதல்ல. ஆனால் மேத்யூவுக்கு தான் நிச்சயமாக சீரியஸ்சான கதைகளையும் நடிக்க முடிந்த திறமை உள்ள மனிதர் என்பதால் காத்திருக்கலாம் என்ற அந்தத் துணிவு இருந்தது. காரணம் இது உண்மையில்  தனது திறமையின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை.  

அவரது உறுதியான மறுப்பை ஹாலிவுட் இப்போது புரிந்துகொண்டது. இனி மெக்கானஹி ரொமான்டிக் காமெடிகளில் நடிக்க மாட்டார் என்று அனைவரும் நம்பிய தருணத்தில், அவருக்கு நல்ல வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதில் முதன்மையானது டாலாஸ் பையர்ஸ் கிளப். அந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. அந்தப் படத்திற்கான சம்பளம் வெறும் 2 லட்சம் டாலர் மட்டுமே.  

ஆனால் பின்னர் அவர் நடித்த இன்டர்ஸ்டேல்லார் மற்றும் தி ஜென்டில்மேன் போன்ற படங்களுக்கு தலா 2 கோடி டாலர் சம்பளம் பெற்றார். 1994 ஆம் ஆண்டு அவர் நடித்த ஏஞ்சல்ஸ் இன் தி அவுட்ஃபீல்ட் படத்திற்கான சம்பளம் 50,000 டாலருக்கும் குறைவாக இருந்தது.  

பணத்தைப் பொருட்படுத்தாமல், தனது முடிவில் உறுதியாக நின்று “முடியாது” என்று சொன்னதால்தான், ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. திறமைசாலிகள் தங்கள் விதியைத் தாங்களே தீர்மானிக்கிறார்கள்.  - இந்த தகவல் இணையத்தில் இருந்து எடுத்தது ! 

கருத்துகள் இல்லை:

இப்போது சமீபத்தில் சென்றுகொண்டு இருக்கும் தெருநாய்கள் பாதுகாப்பு பிரச்சனை ! - STREET DOGS ISSUE TAMIL #2

  நாய்கள் மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி கொண்டவை. அவற்றின் அன்பும், உற்சாகமும், நம்மை மனச்சோர்விலிருந்து மீட்க உதவுகிறது. இருந்தாலும் இந்த வ...