இணையதளத்தில் இருந்து எடுத்த அட்வைஸ் : ஒரு பெண் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் எடுத்தார். அதே தூரத்தை ஒரு ஆண் கடக்க ஒன்றரை மணி நேரம் எடுத்தார். யார் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று கேட்டால், உடனே அந்த பெண் தான் என்று நாம் சொல்லுவோம். ஆனால், அந்த பெண் சீரான சாலையில் நடந்தார் என்றும், அந்த ஆண் கடினமான, கரடுமுரடான பாதையில் நடந்தார் என்றும் தெரிந்தால், நம்முடைய முடிவு மாறும். இப்போது அந்த ஆண் தான் வேகமானவர் என்று சொல்வோம். மீண்டும், அந்த பெண்ணுக்கு 50 வயது என்றும், அந்த ஆணுக்கு 25 வயது என்றும் தெரிந்தால், நம்முடைய கருத்து மறுபடியும் மாறும். இப்போது அந்த பெண் தான் வேகமானவர் என்று சொல்லுவோம். மேலும், அந்த ஆணின் எடை 140 கிலோ என்றும், அந்த பெண்ணின் எடை 65 கிலோ என்றும் தெரிந்தால், மீண்டும் நம்முடைய முடிவு மாறும். இப்போது அந்த ஆண் தான் வேகமானவர் என்று சொல்லுவோம். இதுபோல, ஒருவரைப் பற்றிய நம்முடைய தீர்மானம் அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும் போது மாறிக்கொண்டே இருக்கும். வாழ்க்கையிலும் இதே நிலை. நாம் மிக விரைவாகவே மற்றவர்களைப் பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம். அவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோம். இதனால் நமக்கே தீங்கு விளைவிக்கிறோம். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் வேறுபட்டவை. ஒவ்வொருவரின் அறிவும், செல்வமும் வேறுபட்டவை. ஒவ்வொருவரும் சந்திக்கும் சிரமங்கள் வேறுபட்டவை.
அதற்கான தீர்வுகளும் வேறுபட்டவை. எனவே, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்க வேண்டாம். நீங்கள் உயர்ந்தவர்கள். நீங்கள் சிறந்தவர்கள். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள். எப்போதும்: ஆரோக்கியமாக இருங்கள்
அமைதியாக இருங்கள் திருப்தியுடன் வாழுங்கள் புன்னகையைப் பரப்புங்கள் மனம்விட்டு சிரிக்க பழகுங்கள் இது உங்களுக்காக மட்டுமல்ல, சமுதாயத்திற்கும், இந்த தேசத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக