இன்னைக்கு இருக்கும் ஜெனரேஷனிடம் முக்கியமாக விட்டுப்போவது பொறுமை , ஒரு விஷயத்தை பண்ணணும்னா அங்கே பொறுமை ரொம்ப முக்கியம் , இதுவே அவசரமாக பண்ணினால் அந்த விஷயத்தில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கடைசி வரைக்கும் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிடுவோம். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் , அது எல்லாமே உங்களால் செய்ய முடிந்தால்தான் அது வாழ்க்கை , இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. பொதுவாக இந்த ஜெனரேஷன் ரொம்ப போட்டி மனப்பான்மை நிறைந்தது. வேகமாக வேலைகளை செய்யாமல் நிதானமான முறையில் செய்தால் வாழ்க்கை ரொம்ப கடினமாக மாறிவிடும் என்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் சுயநலம் பிடித்த அதிகாரிகள் அவர்களுக்கு வேலை பார்க்கும் பணியாளர்களை எல்லாம் கடைசி வரைக்குமே எதுவுமே தெரியாதவர்களாகவே இருக்க வேண்டும் என்றும் அந்த பணியாளர்கள் எதுவுமே கற்றுக்கொள்ள கூடாது என்பதிலும் ரொம்ப கவனமாக இருப்பார்கள். தனக்கு கீழே வலை பார்ப்பவர்கள் தன்னை விடவும் பெரிய பொசிஷன்னில் இருக்க கூடாது என்பதை கவனமாக வைத்து இருப்பார்கள். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் அவர்களின் வெபினார் பார்க்கும்போது வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை பார்ப்பவர் கடைசி வரைக்கும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றும் எப்போதுமே யார் மேலும் கெட்ட எண்ணங்கள் இல்லாமல் இருந்தால்தான் ஒரு சேர கம்பெனியை மேலே கொண்டுபோக முடியும் என்றும் சொல்லப்பட்டு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதனால்தான் பொறுமையாக யோசித்து வேலை செய்யுங்கள் , இப்படி வேலை பார்ப்பதன் மூலமாக அவசர அவசரமாக வேலை பார்க்கும்பொது நடக்கும் சொதப்பல்களையும் தடுமாற்றங்களையும் நன்றாகவே தடுக்கலாம்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Thursday, November 30, 2023
CINEMA TALKS - MURAN 2011 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - KANNA LADDU THINNA AASAIYA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
GENERAL TALKS - இனிமேல் வாங்க வேண்டிய பொருட்களை கூட இப்போதே பிளான் போட வேண்டும் !
பொதுவாக ஒரு சில பேர் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் கடந்த காலம் நன்றாக இல்லை. இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டே வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனைகளை பண்ணாமல் விட்டுவிடுவார்கள், இந்த உலகத்திலேயே அக்சப்ட் பண்ணிக்கொள்ள ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா ? கடந்த காலத்தை நம்மால் மாற்றவே முடியாது என்பதுதான். ஒரு நாள் ஒரு நடுத்தர வயது குடும்பத்தலைவர் அவருடைய சம்பளம் வந்ததும் ATM ல இருந்து பணத்தை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கொண்டு பைக்கில் செல்லும்போது ஒரு 500 ரூபாய் நோட்டு தவறுதலாக ரோட்டில் விழுந்துவிடுகிறது. இப்போது அவருடைய பட்ஜெட்டில் 500 ரூபாய் நஷ்டம் ஆவது என்னவோ உண்மைதான் ஆனால் அதையே நினைத்து ஏங்கிக்கொண்டு இருப்பதானாலோ அல்லது பணத்தை காப்பாற்ற முடியவில்லை என்று அவமானப்பட்டாலோ அதனால் என்னதான் பிரயோஜனம் சொல்லுங்கள் ? அந்த குடும்பத்தலைவர் இப்போது நடப்பு நிகழ்காலத்தையும் பின்வரும் எதிர்காலத்தையும் மட்டுமே யோசித்தால்தான் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியும். இப்போது இன்னொரு விஷயத்துக்கு வருவோம். ஒரு விஷயம் நம்மை விட்டு சென்றுவிடும் என்று காலத்தில் விதிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக நம்மை விட்டு சென்றுவிடும். இதனை கடவுளே நினைத்தாலுமே தடுக்க முடியாது. மனிதனுடைய வாழ்க்கையில் மனிதன் எப்போது பொருளாதார நிறைவை அடைகிறானோ அப்போதுதான் மன நிறைவை அடைய முடியும். இன்னைக்கு தேதிக்கு சம்பளம் வாங்கும் ஆட்கள் , தொழில் பண்ணுபவர்கள் , விவசாயம் பண்ணுபவர்கள் எல்லோருக்குமே கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிரிகள்தான். இங்கே உங்க வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருந்தால் "காசு பணத்தை சேர்த்து வைப்பதில் என்ன சார் இருக்கு ?" என்று கேள்வி கேட்கலாம் , ஆனால் எதிரிகள் எல்லோருக்குமே இருக்கிரார்கள், உங்களுடைய பணத்தையும் , பொருட்களையும் , உடல்நலத்தையும் சேதப்படுத்த எல்லோருமே பின்னணியில் இருந்துகொண்டு வேலைப்பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த மாதிரியான கால கட்டங்களில் நாம் கவனமாக இருப்பதுதான் நமக்கு நல்லது. கடந்த காலத்தை யோசிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அதே நேரம் எதிர்காலத்துக்கான பிளான்களை போடுங்கள் , உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டால் நான் சொல்வது என்னவென்றால் "சிறப்பான வீடு , சூரிய ஒளி மின்சாரம் , வீட்டையே ஆபீஸ் போல மாற்ற கொஞ்சம் கம்ப்யூட்டர்கள், நிறைய டிஜிட்டல் சொத்துக்கள் , கொஞ்சம் கணக்கு காட்டும் பொருள் சொத்துக்கள் , அதிக பாதுகாப்பு , எலெக்ட்ரிக்கல் ஸ்கூட்டர் , பெட்ரோல் பைக் , மாதம் மாதம் தாராளமான பணம், இயற்கையான உணவுகள் , கொஞ்சமாக நிலம் , சிறப்பான கம்யூனிக்கேஷன் " அப்படின்னு உங்களுடைய வாழ்க்கைக்காக ஒரு தரமான திட்டத்தை போட்டு வைத்து இந்த பொருட்கள் இருந்தால் மட்டும்தான் முன்னேற முடியும் என்ற அடிப்படையான முன்னேற்ற திட்டத்தை போட்டுக்கொள்ளுங்கள், கார் என்றால் ரேனால்ட் க்விட் 1.0 , பைக் என்றால் ஹீரோ ஸ்பெலென்ட்டர் , முடிந்தால் ஒரு டி.வி.எஸ், மேலும் ஒரு ஆம்பெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் , லேப்டாப் என்றால் இன்டெல் அல்லது ஏ.எம்.டி உடன் தரமான ஹார்ட் வேர் என்று , ஒரே கூரை வீடு மேல் போர்ஷன் என்று இல்லை என்றாலும் பரவாயில்லை, இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோரேஜ்க்கு கணக்கு இல்லாமல் ஆப்ஷன்ஸ் இருப்பதால் பொழுதுபோக்கு தவிர்த்து டிவி என்று தனியாக செலவு பண்ண அவசியம் இல்லை. இந்த மாதிரி நான் வாங்க வேண்டிய பொருட்களை நான் செலேக்ஷன் பணனித்தான் வைத்து இருக்கிறேன். இது எல்லாமே அடைவது என்னுடைய டெஸ்டினேஷன் , இது எதுவுமே என்னுடைய வாழ்க்கையில் நிஜத்தில் நடத்திவிட முடியுமா என்றால் வாய்ப்புகள் குறைவுதான் ஆனால் முயற்சிகளை பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை என்ற விளையாட்டை நோ-நான்ஸன்ஸ்ஸாக விளையாட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுடைய பொருட்களை நீங்கள் இன்னுமே அதிகப்படுத்த வேண்டுமே தவிரத்து இருப்பதை இழந்து நிற்க கூடாது. கடைசியாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த உலகத்தில் காசு பணம் முக்கியம் இல்லை , பொருட்களை சேகரிப்பது முக்கியம் இல்லை என்று எல்லாம் கதை விடுவார்கள். நம்பாதீர்கள். இவைகள்தான் முக்கியம். கவனமான முறையில் செலவு பண்ணுவதும் ஒரு கலைதான் ஆனால் நிறைய பேருக்கு இந்த கலை கொடுத்து வைக்கவில்லை. இந்த தோல்வியடைந்த கூட்டத்தில் நீங்கள் சேர்ந்துவிடாதீர்கள். இணைப்பில் ஆன்ஸர் இன் பிராக்ரஸ் சேனல்லை இணைத்துள்ளேன். ரொம்ப பயனுள்ள யூட்யூப் சேனல். கண்டிப்பாக சப்ஸ்க்ரைப் பண்ணிவிடுங்கள் !
GENERAL TALKS - யோசிக்கணும் , எல்லமே யோசிக்கணும் - THINK FIRST ! PLAN EVERYTHING !
உங்களிடம் ஒரு இன்பினிட்டி அளவுக்கு பணம் இருந்தால் என்ன பண்ணுவதாக உங்களுக்கு திட்டம் இருக்கிறது ? குறிப்பாக இப்படி ஒரு நடக்காத சூழ்நிலையையும் நடந்ததாக நினைத்து அஸம்ஷன் பண்ணிவிட்டு அடுத்து என்ன பண்ணவேண்டும் என்று முடிவு எடுப்பதும் ஒரு வகையில் விஷுவல்லைஷேஸன் தான். இது இந்த விஷயத்தில் மட்டும்தான் என்று இல்லை. மெட்டமார்ஃபேஸிஸ் போல ஒரு நாள் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் என்ன பண்ணுவீர்கள் ? அடிப்படையில் நன்றாக யோசித்து அடுத்து அடுத்த வேலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி யோசிக்காமல் போனால் எதிரப்பாராமல் நிறைய தப்புகள் நடந்துவிடும். இங்கே யாருமே நிபந்தனைகள் அற்ற உண்மையான அன்பை கொடுப்பது இல்லை. அப்படி இருக்கும்போது இன்னைக்கு உங்களுடைய நாள் எப்படி இருக்கிறதோ அதே போலத்தான் நாளைக்குமே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால் மெடிக்கல் செலவுகளை எடுத்துக்கொள்ளலாம். உங்களுடைய மற்றும் உங்களை சார்ந்தவர்களின் மருத்துவ செலவுகளுக்கு எப்போதுமே உங்களுடைய சம்பாதியத்தில் இருந்து கொடுத்து உதவினால்தான் நன்றாக இருக்கும். இந்த உதவியை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்களின் சொந்த இல்லத்தில் கூட உங்களுக்கு மதிப்பு இருக்காது. இப்படி எல்லா வகையான அன்பும் பொருட்களின் அடிப்படையில் மட்டுமே சென்றுக்கொண்டு இருந்தால் எப்படித்தான் ஒரு அன்பை எப்போதுமே எதையுமே எதிர்பார்க்காமல் ஒரு கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இருக்கும் நிபந்தனைகள் இல்லாத அன்பு என்று சொல்ல முடியும். இந்த மாதிரி விஷயங்களில்தான் அஸம்ஷன்கள் கைகளை கொடுக்கிறது. நம்மிடம் சரியான அஸம்ஷன் இருக்கும்பட்சத்தில் நம்முடைய மூளை நடக்கப்போகும் சம்பவங்களுக்கு தயாரானதாக இருக்கும். இங்கே நான் மனது அளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைப்பது இல்லை என்று சொல்பவர்கள் அடிப்படையில் விஷுவல்லாக நடக்கப்போகும் சம்பவம் எந்த எந்த வகையில் முடிவுகளை கொடுக்கும் என்று யோசிக்கவும் வேண்டுமென்றே மறுத்துவிடுகிறார்கள். வாழ்க்கையின் முக்கியமான ஒரு திறனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். உண்மையான வாழ்க்கையில் ஒரு செயல் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் , இல்லையென்றால் நடக்கப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் நம்முடைய அறிவை பயன்படுத்தி எவ்வளவு நுணுக்கமாக உடைத்து ஆராய்ச்சி பண்ண முடியுமோ அந்த அளவுக்கு நிறைய ஆராய்ச்சி பண்ண வேண்டும் , அடுத்து இந்த செயல்தான் நடக்கும் என்று கணிப்பு பண்ண வேண்டும்! இயந்திரங்களுக்கு அறிவை கொடுத்து உயிர் இருக்கும் ஜீவன்களாக நடமாடவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த காலங்களில் யோசிக்கும் திறன் கூட இல்லாமல் இந்த நாளை போலவே அடுத்த நாளும் போகவேண்டும் என்று யோசிப்பவர்கள் நலமாக வாழவே முடியாது, தொடர்ந்து எல்லைகள் இல்லாமல் முன்னேறிக்கொண்டு இருக்க வேண்டும் !
Monday, November 27, 2023
CINEMA TALKS - BETWEEN TWO FERNS - THE MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
GENERAL TALKS - இந்த உலகத்தில் மாற்றம் அடையாத இரண்டு விஷயங்கள் !
பொதுவாக ஒரு விஷயத்தை ஆப்ரோச் பண்ணுவதில் இரண்டு விதமான கான்செப்ட் இருக்கிறது. முதல் விஷயம் , அந்த விஷயத்தை பாசிட்டிவ் ஆக அப்ரோச் பண்ணுவது. இந்த பாஸிட்டிவ் அப்ரோச் ரொம்பவுமே கடினமானது. உங்களிடம் போதுமான பணம் இருந்தால்தான் உங்களால் இந்த அப்ரோச்சை உங்கள் லைப்-ல பயன்படுத்த முடியும். இந்த விஷயம் பின்னதாக எக்ஸ்ப்ளைய்ன் பண்ணுகிறேன், இப்போது முதலாவது எக்ஸாம்பில் - இதுக்கு எதிர்ப்பதமாக விளையாடும் நெகட்டிவ் அப்ரோச்சை விளையாடிக்கொண்டு இருப்பவர்கள் எல்லோருமே எப்போதுமே பாசிட்டிவ் அப்ரோச்சை கொண்டு வர வேண்டும் என்று போராடுவார்கள். காரணம் என்னவென்றால் நெகட்டிவ்வாக விளையாடுபவர்களை யாருக்குமே பிடிக்காது. வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் கருப்பு வெள்ளை என்று இரு அணிகள். கருப்பு அணிதான் நெகட்டிவ்வில் விளையாடும் அணி, டேமன்ஸ் - இவர்கள் நெகட்டிவ்வாக பிரச்சனைகளை முடிப்பதில் சிறப்பானவர்கள். பிரச்சனைகள் வந்தால் ஒரு ஒரு முடிவையும் நெகட்டிவ்வாக எடுத்து அந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் யோசித்து வெற்றி அடைபவர்கள். இவர்களுடைய ஃபோகஸ் என்பது குறைவான மைனஸ் முதல் ஜீரோவில் முடித்தால் கூட நிறைவு என்றுதான் இருக்கும். இவர்களால் பாசிட்டிவ் லைன்னை தொட முடியாது. அப்படி தொடுவது அரிதானது. பாசிட்டிவ் லைன்னில் கொஞ்சம் நாட்கள் இருந்து சிஸ்டம்மை பாசிட்டிவ் சேனல்க்கு மாற்ற வேண்டும் என்று முயற்சிகளை எல்லாம் பண்ணுவார்கள் ஆனால் முன்னதாக குறிப்பிட்டது போல அவர்களிடம் பணம் இருக்காது. 6 இலக்க அளவுள்ள தொகை என்று ஒரு பெரிய தொகை இவர்களிடம் இருந்தால்தான் கொஞ்சம் நாட்களுக்காவது நெகட்டிவ் லைன்னில் இருந்து பாசிட்டிவ் லைன்னில் பயணிக்க முடியும். இவர்கள் பொதுவாக தோல்வி அடைபவர்களின் பக்கம் இருப்பார்கள். மெஜாரிட்டி சப்போர்ட் இருந்தாலும் சிஸ்டம் உறுதி மற்றும் பண வலிமை கொஞ்சமாக இருக்கும். இருந்தாலும் நெகட்டிவ் லைன்னில் இருந்து சண்டை போட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பதோடு மட்டுமே இல்லாமல் கஷ்டப்பட்டு ஒரு ஒரு சின்ன பிரச்சனைகளையும் அவர்களுடைய வாழ்க்கையில் சரிபண்ண வேண்டியது இருக்கும். இப்போது இதனுடைய இன்னொரு பக்கத்தை பார்க்கலாம். இரண்டாவது எக்ஸ்ஸாம்பில் - பாசிட்டிவ் அப்ரோச் - பாசிட்டிவ் அப்ரோச்சில் இருப்பவர்களுக்குக்கு எப்போதுமே அந்த அப்ரோச்சில் இருப்பவர்கள் எல்லோருமே சப்போர்ட் பண்ணுவார்கள். எண்ணிக்கையில் குறைவு என்ற மைனாரிட்டி என்றாலும் பணபலம் படைபலம் ரொம்ப அதிகமாக இருப்பதால் பாசிட்டிவ் அப்ரோச் இருப்பவர்கள் ரொம்ப கவனமான வெற்றியாளராக தொடர்ந்து ஜெயித்துக்கொண்டு இருப்பார்கள். வாழ்க்கை சதுரங்கத்தில் வெள்ளை அணியில் பாசிட்டிவ்வில் விளையாடும் அணிதான் இந்த அணி - ஏஞ்சேல்ஸ் - பணம் எப்போதுமே இருப்பதால் தேவைப்பட்ட பொருட்கள் எல்லாமே வாங்க முடியும். ஒரு பைக் வேண்டுமா ? வாங்கிவிடாலம் , ஒரு கார் வேண்டுமா ? வாங்கிவிடலாம் காமிரா வேண்டுமா வாங்கிவிடலாம் ? உயர் திறன் ஃபோன் ! - கவலையே வேண்டாம் ! கம்ப்யூட்டர் - பக்காவாக வாங்கிவிடலாம் , சொந்த வீடு - இன்னும் நம்பிக்கை இல்லையா ? சொந்த நிலம் - உங்களுக்காக மட்டுமே ! என்று எல்லா இடங்களிலும் பணத்தின் சந்தோஷத்தில் ரொம்ப ரொம்ப சந்தோஷ கடல் வாழ்க்கையை வாழும் இந்த பாசிட்டிவ்வில் விளையாடுபவர்கள் , தொட்டது எல்லாமே வெற்றிதான் , எல்லோருக்குமே இவர்களை பிடிக்கும் , இவர்கள் பேஸ் பாசிட்டிவ் வேல்யூவில் இருந்து அதிகபட்ச பாசிட்டிவ் வேல்யூவில் கேம் விளையாடுவார்கள். பூச்சியத்துக்கு செல்ல எல்லாம் வாய்ப்பு இல்லை. இந்த இரண்டு அப்ரோச்சும் சரிக்கு சமம். இதுதான் சரியான அப்ரோச் , இதுதான் தவறான அப்ரோச் என்று இரண்டையுமே பிரிக்க முடியாது, இங்கே இரண்டுக்கும் நடுவே இருக்கும் நியூட்ரல் என்று எதுவுமே கிடையாது. ஒரு குழந்தை பிறந்ததும் அது வளரும் இடம் மற்றும் அதனிடம் இருக்கும் பொருட்களை பொறுத்து நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் கோடுகளை தேர்ந்தெடுக்கிறது. நெகட்டிவ் கோடுகளில் இருக்கும் ஆபத்து என்னவென்றால் நெகட்டிவ்வாக செயல்பட்டதன் கர்மாவின் பாரம் ரொம்ப அதிகமாக இருக்கும். நெகட்டிவ்வை தொட்டவர்கள் வாழ்க்கையில் ஒரு தப்பு பண்ணினாலும் வாழ்க்கையில் ஒரு மோசமான கெமிக்கல் ரியாக்ஸன் நடந்து அவர்களுடைய நிறைய பாயிண்ட்களை குறைத்துவிடும் , அதுவே பொசிட்டிவ்வில் இருப்பவர்களுக்கு பணம் இருப்பதால் பாயிண்ட்ஸ் தாராளம். இவர்கள் பாசிட்டிவ்வில் இருப்பதால் கேம் தொடங்கும்போதே வெற்றியாளராக இருப்பார்கள். இவர்கள் செய்ய வேண்டியது எல்லாமே கேம் முடியும் வரைக்கும் காத்திருந்து இவர்களின் பாயிண்ட் பேக்கேஜ்களை அக்கவுண்ட்டில் சேர்த்துக்கொள்வது மட்டும்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? பாசிட்டிவ்வில் இருப்பவர்களுக்கு பெரும்பாலான பிரச்சனைகள் இல்லை என்றாலும் நெகட்டிவ்வில் இருப்பவர்கள் போதுமான அறிவுத்திறன் கொண்டு பாசிட்டிவ்வில் இருப்பவர்களை மொத்தமாக தெரிந்து வைத்து இருப்பார்கள் (நெகட்டிவ்வில் விளையாடுபவர்களுக்கு எப்படியாவது பாசிட்டிவ்வில் விளையாட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கும், இது எப்படி சொல்லலாம் என்றால் தெருவில் ஆடும் கிரிக்கெட்டுக்கும் , ஸ்டேடியம் புரஃபஷனல் மேட்ச்சுக்கும் இருக்கும் வேறுபாடுகளை போன்றது) , கர்மா விளைவுகளின் தாக்கம் நெகட்டிவ்வில் இருப்பவர்களை பாதிக்கிறது, ஆனால் பாசிட்டிவ்வில் இருப்பவர்களை அது எதுவுமே பண்ணுவதே இல்லை. இதுவுமே ரொம்ப ஸ்டிரேஞ்ச் ஆன விஷயம்தான். கர்மா எதனால் பாசிட்டிவ்வில் விளையாடுபவர்களிடன் இடங்களில் கரைந்தே போய்விடுகிறது ஆனால் நெகட்டிவ்வில் இருப்பவர்களுக்கு கொடூர பாரமாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையை இப்படி பண்ணுகிறது என்று தெரியவில்லை. இந்த விஷயத்தை பற்றி மட்டுமே பேசினால் நிறைய பேசிக்கொண்டு போகலாம் , இன்னும் சொல்லப்போனால் பெரிய புத்தகமே எழுதலாம். நெகட்டிவ்வில் இருப்பவர்கள் மிகவுமே கவனமாக இருக்க வேண்டும், நெகட்டிவ் இரத்ததை கொடுத்து மரணத்தோடு விளையாடும் விளையாட்டு. நெகட்டிவ்வில் இருப்பவர்கள் ரொம்ப ரொம்ப அதிகமான கவனத்தில் இருக்க வேண்டும். ஆனால் பாசிட்டிவ் அப்படிப்பட்டது அல்ல. பாசிட்டிவ் ஒரு பாதுகாப்பு நிறைந்த குறைகள் ஒரு துளியும் இல்லாத சந்தோஷ பயணம். பாசிட்டிவ்ல கவலை இல்லை , சிரமம் இல்லை , இது ஒரு பிரபஞ்ச அதிசயமான அதிர்ஷ்டம் என்றுதான் நான் சொல்லுவேன்.
GENERAL TALKS - CLIMATE CHANGE - என்னுடைய கருத்து !
இந்த உலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஒரு மெக்கானிக்கல் பேலன்ஸ் இருக்கிறது ஆனால் அந்த பேலன்ஸ் உடைந்து போனால் என்ன ஆகும் ? அதுதான் கிளைமேட் சேஞ்ச் என்ற இந்த ப்ராப்ளம். இந்த பிரச்சனையை நிரந்தரமான முறையில் சரிபண்ண முடியுமா ? அதுக்கு நிறைய பணம் தேவை , இன்னும் கொஞ்சம் சயின்ஸ் தேவை ! உண்மையை சொல்லப்போனால் இந்த பிரச்சனையை அடிப்படையில் இருந்து சரிபண்ண வேண்டும் என்றால் அதிகமாக முயற்சிகளை பண்ண வேண்டும் , அரசாங்க அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் உதவி பண்ணினால் மட்டும்தான் இந்த பிரச்சனையை சரிபண்ண முடியும் , பல வருடங்கள் இந்த பிரச்சனைக்காக தேவைப்படும். இல்லைன்னா பண்ணிய கிளைமேட் சேஞ்ச் நம்ம செய்த செயல்களின் கர்மா (கர்ம பலன்) என்ற அளவில் இன்பினிட்டி என்ற அளவுக்கு பாவக்கணக்கு எழுதிவிடும். நாம் எத்தனை புண்ணியம் பண்ணினாலும் பூமிக்கு நாம் பண்ணிய பாவத்தை நம்மால் மன்னிக்கவே முடியாது. கிளைமேட் சேஞ்ச்சை தடுக்க வேண்டும் என்று ஒரு முயற்சியை எடுத்தால் அதனை இன்னைக்கே எடுக்க வேண்டும், இந்த நொடியே எடுக்க வேண்டும், ஒரு நொடி தாமத்திப்பதும் வேஸ்ட் ஆனது. நான் இந்த வார்த்தைகளை மோட்டிவேஷன்க்காக சொல்லவில்லை. ஒரு செகண்ட் , வெறும் ஒரு செகண்ட்டில் உலக அளவில் குறைந்தது 1000 கிலோ கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆவது மக்களால் பூமியில் போடப்பட்டு இருக்கும். நாளைய நாள் என்பது ஒரு பொய்யான விஷயம். இன்னைக்கு இருக்கும் நாள்தான் நிரந்தரமானது. அதனால் கிளைமேட் சேஞ்ச்சை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்றால் இன்னைக்கே எடுக்க வேண்டும். இங்கே எல்லோருமே கிளைமேட் சேஞ்ச் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். இன்னமும் கிளைமேட் மாறும் பிரச்சனைகள் எல்லாமே நம்ம கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத்தான் கற்பனை பண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா ? வானிலை மாற்றம் இப்போதே அதனுடைய அதிகபட்ச மோசமான நிலையில் உள்ளது. புயலால் வீடுகள் பாதிக்கப்படுகிறது. பருவ மழை இல்லாமல் விவசாயம் மற்றும் தானிய உற்பத்தி குறைகிறது. இப்படி விவசாயமே அடி வாங்கினால் சாப்பாட்டின் தயாரிப்பு விலை ரொம்பவே அதிகமாக மாறிவிடும். பெரிய கம்பெனிகள் இலாபம் அடைந்து நன்றாக இருக்கிறது ஆனால் சின்ன கம்பெனிகள் மற்றும் பொது மக்கள் கடங்களில் விழுந்து நஷ்டம் அடைவார்கள். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆவார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆவார்கள். வானிலை என்பது ஒரு மிகப்பெரிய நெகட்டிவ் இம்பாக்டை இந்த உலகத்தில் உருவாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரு விஷயம். இருக்கும் உலகத்தையே அழித்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காது. நம்ம எதிர்காலம் அழிவை நோக்கி பயணிக்கிறது. வயதான காலத்தில் சந்தோஷமாக இருந்துவிட முடியுமா ? எல்லோருமே எல்லோர் மேலும் வெறுப்பில் இருப்பார்கள் காரணம் என்னவென்றால் உலகம் மொத்தமும் கடுமையான உணவு பஞ்சம் தண்ணீர் பஞ்சம் வந்துவிடும். உணவும் தண்ணீரும் கொடூரமான விலைக்கு விற்கப்படும். சாப்பாடு இல்லாதவர்கள் எதையுமே சாப்பிட முடியாமல் சாப்பாட்டை கொள்ளை அடிக்கும் நிலைக்கு இந்த உலகம் மாறிவிடும். இந்த நேரத்தில் இந்த டெக்ஸ்ட்டை யாராவது படித்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இது ஒரு பெரிய பிரச்சனை !
TAGS : TAM,IL REVIEW , TAMIL ANALYSIS , TAMIL CINEMA , HOLLYWOOD CINEMA TAMIL DUBBED , TAMIL MOVIES , FILM GEEK , TECH , RANDOM TAMIL , GENERAL TAMIL , TAMIL TALKIES , SIMPLE TAMIL , TAMIL BLOG , TAMIL WEBSITE , TAMIL SONGS , VALAIPOO , TAMIL OLD MOVIES , BEST TAMIL , NICE TAMIL , TAMIL SEARCH ENGINE , TAMIL CONTENT , SUPPORT TAMIL , TAMIL VAAZHGA , TAMIL VIBES , TAMILAN VIBES , BEST OF TAMIL SONGS , ISAIMINI , ISAI TAMIL , TAMIL ARTICLE , KATTURAI , VINVELI , ULAGAM , YOSANAIRANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 008 - TAMIL MAGAZINE
இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் எடுத்துவிட்டால்தான் என்ன ? அடிப்படையில் இது அவ்வளவாக வேலை செய்யாத யோசனை என்று சொல்லப்படுகிறது. காரணம் என்னவென்றால் நிபந்தனைகள் இல்லாத விளையாட்டு கடைசியில் புஜபல பராக்கிரமத்தை காட்டும் சண்டையாக மட்டும்தான் மாறிப்போகும். காலத்துக்கு என்று ஒரு அட்வாண்டேஜ் இருக்கிறது, அது ஒரு அதிர்ஷ்டம் போன்றது. எல்லா நேரங்களிலும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு சப்போர்ட் பண்ணாது. நம்ம வாழ்க்கையில் வெற்றியும் அடையனும். தோல்வியும் அடையனும் ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் தலைக்கு உள்ளே போகக்கூடாது. ஒரு சில குறிப்பிட்ட சம்பவங்கள் நடக்கும்போது உயிரை கொடுத்து போராடினாலும் வெற்றி அடைய முடியாது ஆனால் போதுமான சயின்ஸ் அண்ட் டெக்னோலஜி இருந்தால் கண்டிப்பாக வெற்றியை அடைந்துவிடலாம். இதனால்தான் பொருள் சேர்க்காமல் வெறும் அன்பு மட்டுமே சேர்த்து வாழ்வது பயன் இல்லாதது. நான் நிறைய நேரங்களில் ஒரு நிறுவனத்தை தொடங்க நிறைய வேலைகளை செய்து பணம் சம்பாதிக்க முயற்சி பண்ணி காலத்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறேன். நான் முன்னதாக சொன்னது போல காலத்தின் அட்வாண்டேஜ் எனக்கு உதவி பண்ணவில்லை. காலத்தின் அட்வாண்டேஜ் என்பது ஒரு சில நேரங்களில் கடவுள் செயலாகவோ இல்லையென்றால் விதியின் செயலாகவோ ஒரு அட்வாண்டேஜ் நமக்கு கிடைக்கும். அந்த காலத்தில் மட்டும் நாம் செய்யும் வேலைகள் எல்லாமே ஒரு இனம் புரியாத அதிர்ஷ்டமாக ரொம்ப வெற்றிகரமாக முடியும். இங்கே என்னுடைய இலட்சியம் மற்றும் கனவுகள் ரொம்பவுமே பெரியது. ஆயிரக்கணக்காக பக்கங்களில் எழுதிவைத்த என்னுடைய கான்செப்ட்களை ஒரு புத்தகமாக பப்ளிஷ் பண்ண நிறைய நாட்கள் முயற்சி பண்ணி இருக்கிறேன் ஆனால் கடைசியில் வலைப்பூவில் பதிவு பண்ணவேண்டிய நிலையில் இருக்கிறேன். இப்படியே பேச்சு மாற வேண்டாம் நாம் கான்செப்ட்க்குள் சென்றுவிடுவோம். காலத்தின் அட்வாண்டேஜ் / ஒரு தனியார் நிறுவனம் - ஒரு நிறுவனம் என்பது அந்த நிறுவனத்தின் லேபர்களின் கடைசி கட்ட உழைப்பு வரைக்கும் கொடுத்தால்தான் வெற்றியை அடைய முடியும் என்ற அவசியம் இல்லை. ஆனால் லேபர்கள் என்று வரும்போது டேடிகேஷன் அதாவது அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இங்கே எல்லோருமே வொர்க்கை சரியாக பண்ண வேண்டும் மேலும் எடுக்கக்கூடிய ஒரு ஒரு முடிவும் ரொம்ப அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும். போதுமான அறிவுப்பூர்வமான கான்செப்ட்கள் இல்லை என்றால் நாம் காப்பாத்த வேண்டும் என்று ஒரு விஷயத்தை நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. இந்த உலகம் எப்படிப்பட்டது என்றால் உங்களை உண்மையாகவும் ஆசைகள் இல்லாதவராகவும் இருக்க வைக்கும் ஆனால் அப்படி இருந்தால் உங்களுக்கு கடைசி வரைக்குமே எதுவுமே கிடைக்காது. உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு என்று சக்திகளை உள்ள விஷயங்களை நீங்கள் இழந்துவிட்டால் மறுபடியும் அந்த சக்திகளை பெறுவது உங்களால் முடியாதது என்பதால் பயிற்சிகளை பண்ணி உங்களுக்கு தேவையான பொருட்களை சம்பாதித்துக்கொள்ளும் அளவுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். பணம் விஷயத்தில் யாரையுமே நீங்கள் நம்ப வேண்டாம். பார்ட்யூன் ஃபேவர்ஸ் ஃபூல்ஸ் என்று ஒரு வாக்கியம் இருக்கிறது. பணம் என்னைக்குமே அந்த பணத்துக்கு தகுதி இல்லாதவர்களிடம்தான் அதிகமாக கொட்டிக்கிடக்கும். பொதுவாக பணம் விஷயத்தில் யாரையும் நம்பவே கூடாது. இங்கே நியாயமாக இன்வெஸ்ட்மேன்ட்டை கைகளுக்குள் போட்டுக்கொண்டு நான் பணத்தை எதிர்பார்த்த இடத்தில் முட்டாள்தனமாக முடிவு எடுப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த பணம் நியாயமாக என்னுடைய வங்கிக்கணக்கில் சேர்ந்து இருக்க வேண்டிய பணம் ஆனால் நான் இந்த பணத்தை பற்றி எத்தனை முறை படித்து படித்து குழந்தைக்கு சொன்னது போல சொல்லி புரியவைத்தாலும் கடைசியில் ரொம்பவுமே சுயநலமாக அவர்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்று முட்டாள் அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை மொத்தமாக அள்ளிவிட்டார்கள். அதாவது ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு அவர்களால் அந்த பணத்தை பயன்படுத்த முடியாது ஆனால் உடல்நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக்கொண்டு பின்னாட்களில் நிறைய முட்டாள்தனமான செலவுகளுக்கு வந்து அந்த பணத்தை பயன்படுத்தலாம். இதுதான் இங்கே இவர்களுடைய திட்டம். இத்தனை விஷயங்களையும் கேட்கப்போனால் பணத்தின் சக்தியை வைத்து தொழில் தொடங்கி வீடு வாசல் என்று நன்றாக இருக்க அவர்களுக்கு ஆசை இல்லை. பணம் வெறும் பயன்படுத்தப்படாத சமையல் பொருட்கள் போல காலாவதி ஆகவேண்டும் என்றாலும் பரவாயில்லை ஆனால் இன்னொருவருக்கு பிரயோஜனமாக இருக்க கூடாது என்று ஒரு மனநிலையில் இவர்கள் இருக்கிறார்கள். இப்படி வாழ்ந்துகொண்டு இருந்தால் கடவுள்தான் இவர்களுக்கு சொல்ல வரும் விஷயத்தை புரிய வைக்க வேண்டும். நம்பிக்கை இருப்பவன் கோடலியை வைத்து மரங்களை நடுகிறான். நம்பிக்கை இல்லாதவன் அதே கோடாலியை வைத்து அவனுக்கான சவக்குழியை தோண்டிக்கொள்கிறான்.
GENERAL TALKS - உணவும் உடல்நலமும் ! - BE CAREFUL ON EATING PROCESS
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தாலும் சரி , இல்லையென்றால் வீடியோ கேம்கள் விளையாடி அவைகளை ஸ்ட்ரீம் பண்ணி பணம் சம்பாதித்தாலும் சரி , உங்கள் உடல் நலத்துக்கு அக்கறையோடு எப்போது சாப்பிட்டு இருக்கிறீர்கள். இங்கே எனக்கு தெரிந்து நிஜ வாழ்க்கையில் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்துபவர்கள் இருக்கிறார்கள். அடிப்படையில் இது ஒரு தப்பான டேஸிஷன். சரியான முடிவு எடுப்பவர்கள் உடல் நலத்தில் அக்கறை வைத்து வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு சிறப்பாக இருக்கிறார்கள். நன்றாக சாப்பிடுபவர்கள் மட்டும்தான் வெற்றியை அடைகிறார்கள். அதுவுமே தரமான உணவை சாப்பிட வேண்டும். உணவுடைய சத்துக்கள் மற்றும் இரசாயன கலப்பு இம்பாக்ட் என்பது தனியாக இன்னொரு பெரிய கான்செப்ட் அதை நான் இன்னொரு போஸ்ட்டில் சொல்கிறேன். தரமான உணவை சாப்பிட வேண்டும் தரமற்ற ஃபேன்ஸி உணவுகளை சாப்பிட கூடாது என்ற கான்செப்ட் ஒன்றும் இந்த காலத்து கான்செப்ட் இல்லையே. காலகாலமாக இருக்கும் கான்சேப்ட் தானே அதில் என்ன புதுமை என்றால் இந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட நச்சு உணவுகள் இருக்கிறது. இவைகளை நாம் உடலுக்குள் சேர்த்துக்கொண்டால் ஃபேன் வோடவில்லை என்று காப்பர் காயில்லில் தேங்காய் எண்ணையை விட்ட கதைதான் நடக்கும். உடம்பு பழுது ஆகிவிடும். இந்த உலகத்தில் நம்ம உடம்பு மட்டும்தான் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காத ஒரு அருமையான மெஷின் . அதனால் காசு இருக்கிறது என்பதற்காக கண்டதை வாங்கி சாப்பிட வேண்டாம். அப்படியே இயற்கை உணவு என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இயற்கை உணவு என்ன பண்ணப்போகிறது என்று கேட்டால் ஒரு உதாரணத்துக்கு வேகவைத்த உருளைக்கிழங்குகளை உப்பு அதிகமாக போட்டு ஒரு கால் கிலோ சாப்பிட்டு பாருங்கள். உங்கள் பெருங்குடல் உப்பிப்போவதால் கார்பன் டை ஆக்ஸைட் வாயுக்களை உருளைக்கிழங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால் இயற்கை உணவும் ஒரு அளவுக்குதான் சாப்பிட வேண்டும். கேரட்டை பச்சையாக சாப்பிட கூடாது. காரணம் என்னவென்றால் கேரட் ஒரு கிழங்கு வகை தாவரம். பச்சையாக சாப்பிடும்போது மண்ணுக்கடியில் புதைந்து இருந்த காரணத்தால் கேரட்டில் வேர் வகை பாக்டீரியாக்கள் இருப்பதால் இவைகள் உடல்நலத்துக்கு ஆபத்தானது. இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கிறது. RO குடிநீர் பயன்படுத்தாமல் சாதாரண குடிநீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கணிசமான கிடைக்கும் மேலும் ஜின்க் , கால்சியம், மெக்னிஷியம் போன்ற மினரல்ஸ் சத்துக்களும் நம்முடைய உடலுக்கு கிடைக்கும். உங்களுடைய உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளுக்கும் உடல் நலத்துக்கு தேவையான பொருட்கள் இருக்கும் உணவுகளுக்கும் மட்டுமே முக்கியம் கொடுக்க வேண்டும். உணவு என்பது என்னைக்குமே விளையாட்டான விஷயம் இல்லை மக்களே. அது உங்களுடைய உடலை பழுதுபார்த்துக்கொள்ள உள்ளுறுப்புகளுக்கு நீங்கள் கொடுக்கப்போகும் சக்தி. உங்களுடைய வயிற்றுக்குள் என்ன போகிறது என்பதில் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் !
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 008 - TAMIL MAGAZINE
காலத்தின் அட்வாண்டேஜ் - நம்ம செய்ய வேண்டிய செயல்களுக்கான சரியான காலகட்டம் வரும்போது போதுமான பணம் இருப்பவர்களால் மட்டும்தான் அட்வாண்டேஜ்ஜை பயன்படுத்த முடியும், உங்களுக்கு தமிழ் வலைப்பூக்களின் பொற்காலம் பற்றி தெரியுமா ? பொதுவாக இன்டர்நெட் எல்லாம் ஃபோன்களில் பயன்படுத்த முடியும் என்ற வசதிகள் உலகம் முழுக்க இருக்கும் ஃபோன்களில் வந்த காலம் 2007 ம் வருடத்தில் இருந்துதான். 2007 முதல் 2014 வரைக்கும் இன்டர்நெட் காலத்தின் பொற்காலம். அப்போது எல்லாம் பிளாக்ல என்ன போட்டாலும் நிறைய வியூக்கள் கிடைக்கும். காரணம் என்னவென்றால நிறைய பேர் இன்ஃபர்மேஷன் வேண்டும் என்ற காரணத்துக்காக இன்டேர்நெட்டின் கடலுக்குள் குதிக்கும்போது அவர்களுக்கு தேவையான விஷயம் வலைப்பூக்கள்லில் இருந்தது. பிளாக் கம்யூனிட்டி அப்போது டாப் ரேங்க்கிங்கில் இருந்த காலம். அப்போது விளம்பரங்களை கொடுத்து பணம் சம்பாதித்தவர்கள் கொஞ்சம் மாதங்களில் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். அப்போது கம்ப்யூட்டர் , காமிரா , கன்டன்ட் இருப்பவர்களை எல்லாம் போட்டியே இல்லாத அந்த காலகட்டம் ரொம்ப பெரிய அட்வாண்டேஜ் இருப்பவர்களாக மாற்றி இருந்தது. அதுவுமே ஒரு பிளஸ் பாயிண்ட்தான். 14 கிலோ பைட் பெர் செகண்ட் (14 KBPS) என்பது ரொம்ப மட்டமான ஸ்பீட்தான் ஆனால் அந்த ஸ்பீட்டில் கருத்துக்களை வலைப்பூவில் போட்டவர்கள் வெள்ளி தட்டில் வெள்ளி ஸ்பூன்னில் சாப்பிடும் அளவுக்கு பணக்காரர்களாக மாறிவிட்டார்கள். அப்போது போதுமான பணம் இல்லாமல் இப்படி ஒரு அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணியவர்கள் ஒரு சில பேர் இப்போது அன்னாடும் காய்ச்சிகளாக இருக்கிறார்கள் (என்னைத்தான் சொல்கிறேன்). அதனால்தான் மக்களே வாய்ப்புக்காக காத்திருங்கள். பணத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம். உங்களுக்கு சரியான நேரம் இதுதான் என்று தெரிந்தால் இன்வெஸ்ட் பண்ணுங்கள். உங்களுடைய இன்வெஸ்ட்மேன்ட் உங்களை வெற்றி அடைய வைக்கும். இங்கே 5 பர்சென்டேஜ் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக 95 சதவீத நக்கல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த மட்டமான பிரச்சனை இயற்கையின் நியதி கிடையாது. ஒரு பெரிய விஷயத்துடைய அபரிமிதமான வளர்ச்சியானது எப்படி நடக்கிறது என்றால் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து சக்திகளை உறிஞ்சிக்கொள்வதால்தான் என்ற கான்செப்ட் இருக்கிறதோ அதுதான் இங்கே நடக்கிறது.
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 007 - TAMIL MAGAZINE
இன்னொவேஷன் நிறைந்து தொடங்கும் எந்த ஒரு ஸ்டார்ட் அப் விஷயமும் கடைசியில் காணாமல் போக காரணம் என்ன ? வணிக முயற்சிகளை பொறுத்த வரைக்கும் சரியான நிலைப்பாடு இல்லாமல் களத்தில் இறங்க கூடாது. நம்ம கதாநாயகர் வங்கியில் நண்பர் கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு பின்னாட்களில் நண்பர் கடனை கட்டவில்லை என்றால் ரொம்ப சிரமத்தில் அடிபட்டு இருப்பார். காசு செலவு பண்ணலாம் ஆனால் சம்பாதிக்க முடியாது. இத்தனைக்கும் வணிகம் என்பது அதிக அளவு காசு பணம் சேர வேண்டிய ஒரு விஷயம். அடுத்த 3-4 வருடங்களுக்கு என்ன பண்ண போகிறீர்கள் என்று இப்போதே முடிவு பண்ணி எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எப்போதுமே PLAN 1 உடன் PLAN 2 மற்றும் PLAN 3 என்று மூன்று திட்டங்களை எடுத்து வையுங்கள். சந்தரப்பமும் சூழ்நிலையும் எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம். கப்பல் ஏறும் முன்னால் எதிர்கால கடல் புயலுக்கும் சூறாவளிகளுக்கும் தேவையான அனைத்து திட்டங்களையும் செயல் அமைப்புகளையும் பண்ணிவைத்துவிட வேண்டும். கப்பலை நடுக்கடலுக்குள் செலுத்திக்கொண்டு இருக்கும்போது புயலை பார்த்து நடுங்கினால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நான் சமீபத்தில் பார்த்த நண்பர் சுமாராக ஐம்பது இலட்சம் ரூபாய் முதிர்வு தொகைக்கு ஆக்சிடென்ட்டல் டெத் இன்சூரன்ஸ் போடுவது பற்றிய யோசனையை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். இத்தனைக்கும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.ஸியில்தான் போடப்போகிறார் அது வேறு விஷயம் (அரசியல் வேண்டாமே !) , இங்கே அவர் அடுத்த நொடிக்கு துணிந்து தயாராக இருக்கிறார். அவர் இல்லை என்றாலும் அவருடைய குடும்பத்துக்கு போதுமான பெரிய தொகை கிடைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் இந்த மாதிரி முடிவுகள்தான் ஒரு வணிக நிறுவனத்துக்குமே தேவையான ஒரு விஷயம் என்று சொல்லலாம். உங்களுடைய சரியான நிலைப்பாடு என்ன ? அடுத்து அடுத்து செய்ய வேண்டிய 100 செயல்களின் பட்டியல் என்ன ? எல்லாமே முன்கூட்டி திட்டமிட்டுதான் இறங்க வேண்டும். ஒரு தப்பான முடிவு கூட டைட்டனிக் கப்பலை கடலுக்குள் கவிழ்ந்து போக வைத்தது போல நிறுவனத்தை கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கடித்துவிடும். இதனால்தான் வணிக முயற்சி செய்து தொழில் ஆரம்பித்து சம்பாதிக்க வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப பின்னணியில் வொர்க் பண்ணி செய்ய வேண்டிய விஷயம். ஒரு கம்பெனி நடத்துவது குழந்தைகள் விளையாடும் சொப்பு விளையாட்டு போல இருக்காது. உண்மையில் ரொம்ப அதிகமாகவே கஷ்டப்பட வேண்டும் ?
GENERAL TALKS - மரணத்தை கண்டு பயம் ! - காரணம் என்ன ?
ஒரு மனுஷன் எதுக்காக மரணத்தை பார்த்து பயப்படுகிறான். பொதுவாக நான் இந்த கருத்தை பற்றி நிறைய நாட்கள் ரொம்ப ஆழமாக யோசித்து இருக்கிறேன். இது ஒண்ணும் பெரிய அறிவியல் நிறைந்த சிக்கலான இன்ஜினியரிங் கான்செப்ட் இல்லையே. நம்ம உடல் நல்ல நிலையில் இருக்கும்போது எல்லாம் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஆனால் வயது ஆக ஆக உடலுடைய உள்ளுறுப்பு செயல்பாடுகள் குறைந்து போவதால் உடல் என்ற இயந்திரம் நிரந்தரமான பழுதுகளுக்கு உட்படுகிறது அதனால் கடைசியில் மரணம் ! இப்போ உங்களுக்கு ஒரு கேக் கொடுக்கிறோம் என்றால் அதனை சாப்பிடும் முன்னாலே மறுபடியும் பிடுங்கிக்கொண்டு உங்களுக்கு இந்த கேக் இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் ? அதேதான் நம்ம வாழ்க்கையும் மனிதனுடைய உடம்புக்கு பண்ணுகிறது. மனிதன் அவனுடைய வாழ்க்கையில் நிறைய வசதி வாய்ப்புகளையும் நிறைய சந்தோஷங்களையும் எதிரபார்க்கிறான். ஒரு சில அதிர்ஷ்டம் உள்ள மக்களுக்கு போன தலைமுறை சொத்துக்கள் இருப்பதால் அவர்கள் எதிர்பார்த்த சந்தோஷம் மற்றும் வசதி வாய்ப்புகள் கிடைப்பதால் உணவு , உடை , இருப்பிடம் , பாதுகாப்பு என்ற நான்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி பண்ணிவிட்டு சந்தோஷமான ஒரு மன நிறைவு உள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போகிறார்கள். இன்னொரு பக்கம் காசு இல்லாமல் மற்றவர்களை பார்த்து எனக்கும் அவர்களை போலவே வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு எப்போதுமே பணம் கிடைத்து விடுவது இல்லை. அவர்களுடைய ஆசை சொந்தமாக காமிரா வாங்க வேண்டும் என்ற அளவுக்கு இருந்தாலும் அவர்களால் அவர்களுடைய சக்திக்கு வெறும் போட்டோ ஸ்டுடியோவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோதான் எடுக்க முடியும். இப்படிப்பட்ட ஆட்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) நிறைய ஆசைகளை கடவுள் நிறைவேற்ற மறுத்ததால் மரணம் என்ற முடிவை ஏற்றுக்கொள்ள தயாராக முடியாது. ஒரு சூப்பர் கதை உள்ள சினிமா படம் - ஒரு மொக்கை கதை உள்ள சினிமா படம். இந்த இரண்டு படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது ? ஒரு படம் என்று வந்தால் கூட சிறப்பான சம்பவங்கள் நடந்த வாழ்க்கையை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம் , சாதாரணமான சலிப்பு மட்டுமே கொண்ட மொக்கையான சம்பவங்களை கதையில் கூட நாம் பார்க்க தயாராக இல்லை. இப்படி வாழ்க்கை மொத்தத்தையும் வெறுமனே சலிப்பான விஷயங்களை மட்டுமே கொடுத்து இருப்பதால் தீராத ஆசைகளுடன் இறந்து போகும் இவர்களின் ஆன்மா ஆசைகள் நிறைவேறாத ப்ரேதாத்மாவாக மாறிவிட்டு.. (டேய் டேய் எங்கடா போற ?) , மன்னிக்கவும் நான் கான்செப்ட் மாறிவிட்டேன். மரணத்தை பார்த்தால் ஒரே பயம் , நடுக்கம் வருவது , இது ஒரு நியாயமற்ற செயல் என்று தோன்றுவது வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும். கடவுள் எதனால் ஒரு சிலருக்கு நிலம் போல செழிப்பான வாழ்க்கையின் சந்தோஷத்தையும் , இன்னொரு பக்கம் மற்ற அனைவருக்கும் கடல் போன்ற உப்பான வாழ்க்கையின் ஆதரவையும் கொடுக்கிறார் என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. ஒரு மனிதனுக்கு கடைசி நாட்கள் எண்ணப்படுகிறது என்றால் அப்போது இந்த உலகமே மிகவும் வித்தியாசமாக இருக்கும், வாழ்நாளை முடிவுக்கு கொண்டுவரும் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள பணம் கேட்டு அலையும்போதுதான் இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் இல்லை என்ற உண்மை நன்றாக புரிகிறது, அவனுடைய மனதுக்குள் இனிமேல் என்ன நடந்தால் எனக்கு என்ன என்று வாழ்க்கையில் ஒரு வெறுமை, அந்த வெறுமை கொடுக்கும் அமைதியும் நிம்மதியும் ஒரு புதிய ரகமானது. கடைசி நாட்களில் மட்டுமே இந்த உலகத்தின் காட்சிகளுடனும் மனிதர்களின் பேசும் வார்த்தைகளுடனும் ஒரு புதிய விதமான மொழி அவனுக்கு புரிகிறது, அதுதான் கடைசி நாட்களின் மொழி. இந்த நாட்கள் கொஞ்சம் கடினமானதுதான் ஆனால் கடந்து வந்துதான் ஆக வேண்டும், அகிலன் பயமெல்லாம் எதுவுமே இல்லை என்று சந்தோஷமாகவே இருக்கிறான், அவனுடைய உடல்நிலை சரியாகும் என்று பூரண மனநிலையில் இருக்கிறான், அவனுக்கு ஒரு சிறிய அளவில் லோக்கல் பேக்கரியில் கிடைக்கும் சுவையான கேக் கூட கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து உண்ணவேண்டும் என்று தோன்றுகிறது, இன்னமும் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவில்லை ஆனால் பைக்கில் செல்லும்போது செல்லும் இடங்களை எல்லாம் முடிந்த வரையில் நினைவில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான், அவன் இப்போது எல்லாம் எந்த ஒரு இடத்துக்கு சென்றாலும் மறுபடியும் இன்னோரு முறை வருவதற்கு வாழ்நாள் இருக்குமா என்று யோசிக்க தோணுகிறது, பொதுவாக ஏழையாக இருப்பவர்களுக்காக சிகிச்சை பணத்துக்கு கடன்கள் கொடுப்பவர்களை அவர்களுக்குமே தெரியும் ஆனால் அவர்கள் அவ்வளவு பாதுகாப்பான மனிதர்கள் இல்லை, இது ஒரு தொல்லையான விஷயம், பணம் என்று வரும்போது நிறைய பேர் காசு இல்லை என்று சொல்லும்போது ஒரு தர்மசங்கடமான நிலை அங்கே உருவாகிறது, என்னவோ தெரியவில்லை கடைசி நாட்களில் கொஞ்சம் தனிமையை எதிரபார்க்கிறான், இப்படித்தான் ஒரு சில விஷயங்களில் மரணம் ரொம்பவுமே மேலானது என்று முடிவு எடுக்கிறான். வாழ்க்கை என்ற இண்டரெஸ்ட்டிங்கான கதை கொஞ்சம் நாட்களில் ஒரு சலித்துப்போன நரகவேதனையாக மாறுகிறது. இந்த மரண பயம் அதிகமாக இருக்க காரணம் நம்ம மக்கள்தான்.
Sunday, November 26, 2023
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 006 - TAMIL MAGAZINE
இந்த உலகத்தில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் நம்முடைய பாதை ஒரு நேரான நேர்க்கோட்டில் செல்லும் அம்பு போல இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் ஆனால் இங்கே இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. மனித வாழ்க்கையின் உண்மை என்னவென்றால் இந்த வாழ்க்கை என்பது துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது. மனக்கசப்புகளை கடந்து அனைவரிடமும் அன்பை கொடுக்க வேண்டும். தேவைகள் இருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வாழும் வாழ்க்கையே ஒரு சிறப்பான வாழ்க்கை என்று சொல்லலாம். ஆனால் போதுமான பணம் இல்லாததால்- உடல்நலம் சார்ந்த குறைபாடுகளால்- மோசமான சூழ்நிலைகள் என நிறைய காரணங்கள் இருக்கலாம். இந்த உலகத்தில் வெற்றியாளர்களை மட்டுமே எல்லோருமே கொண்டாடுகிறார்கள். தோல்வி அடைந்த மனிதர்களுக்கு அந்த தோல்விக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அந்த காரணங்களை பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை. தோல்வி அடைந்தவர்களை கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குறைகள், பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட நிறைய விஷயங்கள்தான் அந்த தோல்விக்கு காரணமாக இருக்கும். வாழ்க்கை ஒரு போராட்டம்தான் - வாழ்வே ஒரு வியாபரம்தான் என்ற வார்த்தைகளை போல இந்த உலகமே மிகவும் மோசமானது. இதனால் ஒரு ஒரு தனிப்பட்ட மனிதரும் வெற்றியை அடைவதற்காக போராட வேண்டும். ஒரு திரைப்படம் அதனுடைய கதைக்களத்தில் மிகப்பெரிய அளவில் ஒரு கற்பனையான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதுபோலவே கடவுள் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். கடவுள் இருக்கிறார். அவரே எல்லோரையும் காப்பாற்றுவார். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. கான்செர் போன்ற உயிரை கொல்லும் நோய்கள் இருக்கும்போது இந்த உலகமே வெறுப்பாக இருக்கும், அடுத்த நாள் காலை கண்கள் விழிக்கும்போது வாழ்க்கை நரகமாக இருக்கும், அடுத்த நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம், பணம் இல்லாமல் நோயை குணப்படுத்த முடியாத நிலையில் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த கடவுளின் சோதனைக்கூடமா ? எல்லோருமே கடவுளின் சோதனை எலிகளா ? கடவுள் எல்லோருக்கும் இவ்வளவு கஷ்டத்தையும் வலிகளையும் கொடுக்க காரணம் என்ன ? மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, என்னுடைய மனது பேசக்கூடிய மொழியை இந்த எழுத்துக்களால் மொத்தமாக சொல்லிவிட முடியுமா என்று எனக்கு புரியவில்லை. இல்லை இந்த எழுத்துக்களால் என்னுடைய கடினமான வாழ்க்கையை சொல்ல முடியாது. இங்கே பெர்சனல்லாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையின் ஒரு ஒரு நொடிக்கும் என்னுடைய இரத்ததை கொடுத்து போராடி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒரு விஷயம். இங்கே அதிகபட்சத்துக்கு போகாமல் நான் அடங்க மாட்டேன். நான் ஒரு போர் வீரன். எனக்கு தோல்வி இருக்கிறது. என்னுடைய அறிவுத்திறனை கொண்டு மட்டுமே பிரச்சனைகளை சரிசெய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். ஆனால் நான் யாருக்குமே பாதிப்பு உருவாக்காமல் பண்ணவேண்டும் என்றால் என்னுடைய அறிவுத்திறன்னை மட்டுமே பயன்படுத்தி எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். உங்களுக்கு யாராவது பிரச்சனை கொடுத்தால் அவர்கள் உங்களால் அடிக்கப்பட வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். தயக்கம் வேண்டாம் அவர்களின் ஆசைப்படி சிறப்பாக செய்துவிடுங்கள்.
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 005 - TAMIL MAGAZINE
இந்த உலகமே யாருக்குமே கட்டுப்படாமல் மிகவும் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது இல்லையா ? இந்த உலகத்தில் காடுகள் மற்றும் மரங்கள் எல்லாமே மிகவும் முக்கியமானது. நம்ம மனித வாழ்க்கைக்கு அவசியமானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கமால் கொஞ்சம் வெளியே வாருங்கள், இந்த ஏ சி காற்று கொடுக்கும் செயற்கையான குளிரை விடவும் இயற்கையான தூய்மையான மரங்கள் கொடுக்கும் அன்பு நிறைந்த நிழல் வேறு எங்கு கிடைக்கும். ஹோட்டல் சாப்பாட்டுக்கும் வீட்டில் செய்யும் சாப்பாட்டுக்கும் இருக்கும் வித்தியாசம் போலதான் செயற்கையான விஷயங்களில் பணம் இருக்கும் ஆனால் இயற்கையான விஷயங்களில் அன்பு மட்டும்தான் இருக்கும். மாதாந்திர தொகையாக மரம் என்னைக்குமே பணம் வசூல் செய்வது இல்லை, மரங்கள் எல்லாமே இந்த உலகத்துடைய மாயாஜாலம் மட்டுமே. உண்மையான ஒரு க்ரேட் ஆன மாயாஜாலம். என்றைக்கக்காவது மரங்களை பார்த்தால் எல்லா மரத்துக்கும் ஒரு சின்ன தாங்க்ஸ் சொல்லுங்க.. காரணம் என்னவென்றால் இனிமேலும் உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இன்னமும் 200 ஆண்டுகள் கடந்த பின்னால் கிடைக்காமலே போகலாம். மரங்கள் என்னைக்குமே உங்களுடைய நட்பு வட்டாரங்கள் போலதான். உங்களுக்கு எப்போதுமே சப்போர்ட் பண்ணும், இங்கே மரங்களை கடந்து வேறு ஏதேனும் சிறப்பான விஷயங்கள் தரமான விஷயங்கள் உங்களுடைய கண்களுக்கு பட்டால் நிச்சயமாக நீங்கள் கொடுக்க வேண்டிய விலையும் அதிகமாகவே இருக்கும்,
நானும் வாழ்க்கைல நம்ம தமிழ் படம் சிவா சார் மாதிரி ஒரே பாட்டு போட்டு ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவேன் அப்படின்னு பார்த்தா முடியலையே ? அப்படின்னு நினைக்கறவங்களுக்கு ஒரு சின்ன நினைவுபடுத்தல்.. லைஃப்ல சக்ஸஸ் இல்லையா ? பிரச்சனையை விடுங்க.. மிஸ்டேக் உங்க மேலையே இல்லை.. அப்புறம் எதுக்கு கவலைப்படனும்.. ஒரு குட்டி கதை.. ஒரு அரசியல் கட்சியில் மிகப்பெரிய தலைவர் ஒரு பள்ளிக்கூடத்துக்கு சுதந்திர தின விழாவுக்காக வருகிறார். பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேடையில் பேசும்போது தலைவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பையன் இப்படி கேள்வி கேட்டான் "வணக்கம் சார், நான் இங்கே அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து படிக்க வருகிறேன்.. உங்ககிட்ட நான் கேட்கணும் அப்படின்னு நினைக்கற கேள்வி என்னவென்றால் 'நான் வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கி ஒரு சிறந்த மனிதராக இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.. அதனால வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்ன செய்யனும்.." அப்படின்னு கேட்டான்.
ஒரு அரசியல் தலைவராக எப்போதுமே பிரச்சனைகளை நேருக்கு நேராக சந்தித்து அனுபவம் பெற்று இன்றைக்கு பிரச்சனைகளை கடந்து நல்ல நிலையில் இருக்கும் அரசியல் தலைவர் இவ்வாறாக பதில் சொன்னார்.. "வாழ்க்கையில் வெற்றி அடையனும் என்றால் ஒரு சின்ன விஷயத்தை புரிஞ்சுக்கணும்.. மாணவர்களே. நீங்க புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா , இந்த உலகத்தில் வெற்றியும் தோல்வியும் நம்மலே உருவாக்கிக்கொண்ட விஷயங்கள்தான், ஒருவாரால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்ய முடிஞ்சா இன்னும் சொல்லப்போனா அவரோடு மற்றவர்களை கம்பேர் செய்யும்போது அதாவது ஒப்பிட்டு பார்க்கும்போது சிறப்பாக செய்து முதன்மையானவர்களா இருந்தாங்கன்னா அவர்களை வெற்றியாளர்கள் என்று சொல்கிறோம், உண்மையில் ஒரு துறையில் சிறப்பாக செயல்படுபவர்களை அந்த துறையில் வெற்றியாளராக அறிமுகப்படுத்துகிறோம், ஆனால் வாழ்க்கையில் முக்கியமானது வெற்றி அடைவதும் முதல் மதிப்பெண் எடுப்பதும் அல்ல, இப்போ யாராவது நமக்கு தெரிஞ்சவங்களை சந்திக்கும்போது முதலில் என்ன கேட்கிறோம் ? நீங்க வெற்றி அடைஞ்சச்சா ? உங்க குடும்பத்தில இருக்கறவங்க எல்லோரும் வெற்றிகரமா தோல்விகளை இல்லாம இருக்காங்களா ? அப்படினா கேட்போம் ? நல்லா இருக்கீங்களா அப்படின்னுதானே கேட்போம், இங்கதான் இருக்கு எதார்த்தமான ஒரு உண்மை, இங்கே உடல் நலமும் மன நலமும் மட்டும்தான் ரொம்பவுமே முக்கியம், அதனால்தான் முடிந்த வரைக்கும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மைகளை செய்யணும், முடிந்தால் கஷ்டப்படும் யாராக இருந்தாலும் அவங்களுக்கும் நன்மைகளை செய்யணும், இந்த உலகம் என்னைக்குமே போட்டியும் பொறாமையும் நிறைஞ்சது, உங்க எதிர்கால வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவ அறிவு இந்த உலகத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி பொறாமை எல்லாம் உள்ள மனிதர்களை கடந்து வந்தால் மட்டும்தான் முடியும் அப்படிங்கற ஒரு உண்மையை உங்களுக்கு புரியவேக்கும், இங்கே மனதை பொறுத்தவரைக்கும் எப்போதுமே நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும், இங்கே எங்கே ஒரு மனிதருக்கு கஷ்டமாக இருந்தாலும் கடைசியில் அந்த கஷ்டத்துக்கு காரணமாக இருப்பது அறியாமே என்ற விஷயம்தான். அதனாலதான் அனைவருக்கும் கல்வி என்பது ரொம்பவுமே அவசியமானது, ஒரு மனிதன் நிஜமாகவே ஜெயிக்க விரும்பினால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்தால் மட்டும்தான் முடியும், வெறும் பேச்சு மட்டும் வெற்றிகளை கொடுக்காது, அதனால் வாழ்க்கையில் வெற்றியானது அறிவுப்பூர்வமான முடிவுகளும் அனுபவம் நிறைந்த செயல்களிலும் இருக்கிறது என்பதுதான் நான் இங்கே முன் வைக்கும் கருத்து" என்று சொன்னார்.
இதுதாங்க வாழ்க்கையுடைய எதார்த்தம், இந்த உலகத்தில் தோல்வி அடைஞ்சவங்க எல்லோருக்கும் உடனடியாக வங்கிக்கணக்கில் நிறைய பணத்தை பரிசாக கொடுத்தால் வெற்றியை விட தோல்விக்கு மதிப்பு அதிகமாகும் இல்லையா ? ஆக ஒரு விஷயத்தி வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் நாமே உருவாக்கிக்கொண்டு இருக்கும் விஷயங்கள்தான், உண்மையாகவே நமக்கு தேவைப்படுவது நலம் மட்டும்தான், உடல் நலம், மன நலம். சுற்றுச்சூழல் நலம், இந்த விஷயங்கள் எல்லாமே இருந்தால் வாழ்க்கை ரொம்பவுமே சிறப்பாகவும் தரமாகவும் இருக்கும் என்பதுதான் ஒரு சிறந்த கருத்து.
CINEMA TALKS - PIRIYAMUDAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - KADHAL MANNAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த படத்தில் எக்ஸிக்யூஷன் ரொம்பவே பிரமாதமாக இருக்கிறது. கமர்ஷியல் படம்தான் ஆனால் காதல் கதையை காமெடிக்காக பயன்படுத்தாமல் ஒரு உண்மையான காதலாக ரொம்ப சீரியஸ்ஸாகவே சொல்லி இருக்கிறார்கள். காதல் மன்னன் கண்டிப்பாக வெளிவந்த நாட்களில் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மிகவும் புதுமையான எக்ஸ்பிரியன்ஸ்ஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. இப்போ நீங்கள் இந்த படத்தின் கதையை ஒரு நோட்புக்கில் எழுதி பார்த்தால் கூட மற்ற கமர்ஷியல் படங்களின் கதையை விட ரொம்பவுமே தனித்து இருக்கும். ஒரு பக்கம் மிடில் கிளாஸ்ஸில் மேன்ஷன்னில் தங்கி மெக்கானிக்காக வேலை பார்க்கும் சிவா எப்போது நிச்சயதார்த்ததில் திலோத்தமாவை பார்த்தாரோ அப்போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த காதலை அழிக்க வேண்டும் என்பதே ஒரே வேலையாக பண்ணிக்கொண்டு இருக்கும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத வில்லனாக பெரிய இடத்து பையன் ரஞ்சித். கொஞ்சம் கொஞ்சமாக கதை நகரும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட கதையில் பெரிய பெரிய மாற்றங்களை கொண்டுவந்து விடுவதை படத்தில் பார்க்கலாம். திரைக்கதையில் அவ்வளவு புதுமை , அவ்வளவு கிரியேடிவிட்டி, கமர்ஷியல் படங்களில் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்த்தாலுமே கிளைமாக்ஸ் வரைக்கும் வழக்கமான அனைத்து கதைகளின் ஸ்டைல்லையும் விட்டுவிட்டு புதுமையாக ஒரு ஸ்டைல் இந்த படத்தின் திரைக்கதைக்கு கொடுத்து இருப்பதால் கதை வேகமாக மற்றும் ஸ்வாரஸ்யமாக நகர்கிறது. கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.
Friday, November 24, 2023
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 004 - TAMIL MAGAZINE
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE 003 - TAMIL MAGAZINE
CINEMA TALKS - BLEACH - 2018 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - ONE PIECE - SEASON ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - VISWASAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - E002 - TAMIL MAGAZINE
RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - E001 - TAMIL MAGAZINE
CINEMA TALKS - VARALARU MUKKIYAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
Thursday, November 23, 2023
CINEMA TALKS - KATHI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - GAME NIGHT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - SIX UNDERGROUND - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
Wednesday, November 22, 2023
CINEMA TALKS - THE MAGNIFICENT SEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - AARAMBAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - SEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
CINEMA TALKS - BOOKSMART - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
HEADSET போட்டு பாட்டு கேட்பது நல்ல விஷயமா ? - ஒரு கட்டுரை !!
ஹெட்செட்களைப் பயன்படுத்துவது ரொம்ப டேன்ஜர் ! இன்னைக்கு நான் 150/- க்கு ஒரு ஹெட்செட் வாங்கினேன் ஆனால் ஒரு வாரத்தில் வேலை செய்யவே இல்லை. கடைக்கு போனாலும் காசை திரும்ப கொடுக்க மாட்டார்கள் ! காசு வீணாக போகிறது ! 150/- என்பது தின கூலி இல்லையா ? அப்போதான் புரிந்துகொண்டேன் ஹெட்செட் ஒரு மட்டமான விஷயம் ! கொடுக்கும் காசுக்கு வோர்த் இல்லை. காரணம் என்னன்னு சொல்கிறேன் ! இங்கே ஹெட்ஃபோன் சவுண்ட் வெச்சு கேட்டால் ரொம்ப காலத்திற்கு ஹெட்ஃபோன்கள் கேட்டதால் நிரந்தரமா காது கேட்காமல் போக வாய்ப்பு உள்ளது. காது நோய்த்தொற்றுகள்: நீண்ட காலத்திற்கு ஹெட்செட்களை அணிவது காதில் ஒரு சூடான மற்றும் ஈரமான சூழலை உருவாக்கிரும், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று அபாயம் வேற இருக்கு ! காது ஓரத்தில் இருக்கும் தேவையற்ற தூசு துணுக்குகளை காதுக்கு உள்ளே கொண்டு போய்விடும் ! இந்த வயர்கள் ரொம்ப எளிமையாகவே டேமேஜ் பண்ணிவிடும் என்பதால் ஸ்பீக்கர் வாங்கினால் ஆவது காசு மிச்சம் என்று நினைத்துக்கொள்ளலாம். நீண்ட காலத்திற்கு ஹெட்செட்களை அணிவது காதுகள் மற்றும் தலையைச் சுற்றி பிரஷர் அல்லது வலியை ஏற்படுத்தும். ஹெட்செட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களான பிளாஸ்டிக் சேராமல் போனால் அலர்ஜி நிறைய வரும் !. கவனச்சிதறல் மற்றும் குறைக்கப்பட்ட விழிப்புணர்வு: நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது ஹெட்செட்களை அணிவது சூழ்நிலை இன்னும் மோசம் ! பைக் விபத்துக்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஹெட்செட்களின் அதிகப்படியான பயன்பாடு நம்ம நண்பர்களை பேச விடாமல் பண்ணிவிடும். மோசமான ஆடியோ தரம் இருக்கற ஹெட்ஃபோன்களை என்னவென்று சொல்ல ! இருக்கும் காசுக்கு 450/- ரூபாய் என்றாலும் வீட்டுக்கு ஒரு சேர் வாங்கலாம் !! 1000/- ரூபாய் இருந்தால் தோசைக்கல் வாங்கலாம் குறைந்த தரமான ஹெட்செட்டுகள் அதிகமா காசு போட்டு வாங்கினாலும் நன்றாக இருக்காது, இது இசை, திரைப்படங்கள் பார்க்கும் சந்தோஷத்தை குறைக்கிறது. இங்கேயும் சில ஹெட்செட்டுகள் எல்லா சாதனங்களுடனும் இணக்கமாக இருக்காது, இது இணைப்பு அல்லது செயல்பாட்டு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இப்படி ஒரு மட்டமான ப்ராடக்ட்டை பத்து முறைக்கு மேலே நான் கம்மி விலை என்பதற்காக வாங்கியுள்ளேன் என்பதே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இனிமேல் ஹெட்செட் வேண்டாம் ஆண்டவரே ! இல்லங்க நானும் நினைக்கிறேன் அன்னைக்கு ஹெட்செட் வாங்க நான் சேர்த்த காசு எல்லாமே எவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த காசு !! வெறும் மூன்று நாட்களில் காலி ஆவதுக்கா நான் சேர்த்தேன் ! இருந்தாலும் இதுவுமே ஒரு நன்மைக்குதான் என்று நினைத்துக்கொள்வேன் ஒரு தரமான ப்ராடக்ட் வாங்குவது எவ்வளவு முக்கியமான விஷயம் என்று இந்த ஒரு விஷயத்தில்தான் நான் புரிந்துகொண்டேன் !
கால கணிப்பு மேல் நம்பிக்கை இருக்கிறதா ? - ஒரு கட்டுரை !
காலத்தை கணிப்பது பிறந்த தேதியை கொண்டு உருவான ஜாதகத்தால் கணித்து சொல்ல முடியுமா ? ரொம்ப நாட்களாக என்னுடய மனதுக்குள் இருக்கும் கேள்வி !
இங்கே 12 ராசிகள் இருக்கிறது :
1.மேஷம் – Aries
2.ரிஷபம் – Taurus
3.மிதுனம் – Gemini
4.கடகம் – Cancer
5.சிம்மம் – Leo
6. கன்னி – Virgo
7. துலாம் – Libra
8. விருச்சிகம் – Scorpio
9. தனுசு – Sagittarius
10. மகரம் – Capricorn
11. கும்பம் – Aquarius
12. மீனம் – Pisces
இங்கே 27 நட்சத்திரங்களின் பலன்களும் இருக்கிறது !
1. அஸ்வினி
2. பரணி
3. கிருத்திகை
4. ரோஹிணி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
இங்கே தினசரி நாள் கணிப்பு , மாத நாள் கணிப்பு , ஆண்டு பலன் இந்த விஷயத்தில் எல்லாமே எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சில விஷயங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டு நடந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது ஆனால் நிறைய பேருடைய நம்பிக்கையை மறுத்து சொல்ல கூடாது என்ற காரணமும் எனக்கு இருக்கிறது. கால கணிப்பு நிஜமாகவே வேலை செய்யுமா ? உங்களுக்கு ஏதாவது பதில் தெரிந்தால் ஒரு கமெண்ட் கொடுக்கவும் !!
WHEN I ASK QUESTION OF WHY THIS ? - E2 - ONE TIME WATCHABLES ! - TAMIL REVIEW
ஒரு படத்துடைய முதல் காட்சி நன்றாக இருக்கிறதே என்று படத்தை பார்க்க ஆரம்பித்துவிடுவோம் ஆனால் படம் நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனும்போது ரொம்பவுமே டிஸப்பாய்ன்ட்மெண்ட்டாக இருக்கும். அந்த வகையில் ஒரு சில படங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த படத்தின் பெயர் YEAR 2067 - இந்த படத்தின் பெயரை கண்டுபிடிக்கவே கூகிள்லில் இருக்கும் எல்லா வருடங்களையும் போட்டு சர்ச் பட்டன் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. பின்னால் படத்தின் ஹீரோ பெயரை போட்டு படத்தின் ஹிஸ்டரி எடுத்து நான் இந்த கருத்தை பதிவு பண்ணுகிறேன். ஒரு சில படங்கள் எழுதும்போது ரொம்ப சாலிட்டாக இருக்கும் ஆனால் படமாக பார்த்தால் ரொம்பவுமே குழப்பமாக இருக்கும். அப்படிப்பட்ட படம்தான் இந்த YEAR 2067! கோடி ஸ்மித் மேக்பி இந்த படத்தில் ரொம்பவுமே பிரமாதமாக நடித்து கொடுத்து இருப்பார். இந்த படம் நினைவில் நிற்கும் அளவுக்கு படம் இல்லை காரணம் என்னவென்றால் கதை அவ்வளவு குழப்பமாக இருக்கும் ஆனால் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
இந்த படத்துடைய பெயர் SECRETLY , GREATLY , ஒரு சில படங்கள் பார்க்க ரொம்ப இண்டரெஸ்ட்டாக இருக்கும் ஆனால் கிளைமாக்ஸ் வரும்போது மனதுக்கு ரொம்ப பாரமாக முடித்து இருப்பார்கள் , தன்னுடைய நாட்டுக்காக எதிரி நாட்டில் உளவு பார்க்கப்போன அதிகாரிகளுக்கு சொந்த நாடே தற்கொலை பண்ணிக்கொள்ளுங்கள் என்று மெசேஜ் அனுப்பிவிடுகிறது. இங்கே நம்ம ஹீரோ எந்த ஆர்டருமே கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி முட்டாள் போல நடித்து ஊர் மக்களுக்கு சந்தேகமே வராமல் இருந்து இருப்பார். இன்னொரு நண்பர் பள்ளி மாணவராக , கடை உரிமையாளராக என்று வேறு வேறு வேஷத்தில் இருக்கிறார்கள் , ஆனால் மெசேஜ் கிடைத்ததும் உயிரை விட வேண்டும் என்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று யோசித்து பாருங்களேன் ! இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் நன்றாக இருக்கும்.
CINEMA TALKS - VALIMAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இன்னைக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடிச்சு இருக்கிறேன் !
இந்த வாழ்க்கை ரொம்பவுமே கஷ்டமான ஒரு கேம். இங்கே ஜெயிக்கறது நடக்காத காரியம் ! - வெயிட் ! ஜெய்க்கறது நடக்காத காரியமா ? இந்த வார்த்தையை உங்களுடைய மனசுக்குள்ள விதைத்தது யாரு ? இங்கே நீங்கள் என்ன முயற்சி பண்ணினாலும் தோற்றுப்போவது போல ஒரு பின்னணி புரோகிராம் இயங்குவதாக உங்களுக்கு தோன்றுகிறதா ? இன்னைக்கு வரைக்கும் கிட்டதட்ட 240 நிமிஷம் இல்லைன்னா அதுக்குமே மேல நான் டைப் பண்ணி வைத்து இருந்த ஆவணங்கள் எப்படியோ டெலீட் ஆகிவிடுகிறது. இதுக்கு காரணமாக நான் கடவுளை சந்தேகப்படனுமா ? அடிப்படையில் இங்கே எங்கேயோ ஒரு தப்பான பேட்டர்ன் இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த ஒரு விஷயத்துல எனக்கு கோபம்தான் ! உண்மையை சொல்லப்போனால் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும்மே எனக்கு கோபம்தான். இந்த வாழ்க்கை நிறைய பாரபட்சம் நிறைந்தது. இங்கே ஜெயிக்கவில்லை என்றால் கண்டிப்பா ரொம்பவுமே கீழ்த்தரமான முறையில் நடத்துவார்கள். ஆனால் நடந்த இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். அடிப்படையில் இது ஒரு மிஷன் ஃபால்ட். ரொம்ப மேலோட்டமான முறையில் பார்த்தால் இது ஒரு மிஷன் ஃபால்ட்டாக மட்டும்தான் இருக்கும் ஆனால் உண்மையில் கடவுள் பின்னணியில் வேலையை காட்டி என்னை வேண்டுமென்றே தோற்கடித்து அவமானப்படுத்தி இருக்கிறார். இந்த ஒரு நொடி என்னை இன்னமும் அதிகமாக பாதித்த ஒரு நொடி. நான் தனியாக இருக்கிறேன் என்பதற்காக கடவுள் இவ்வளவு கொடுமைகளை எனக்கு பண்ணுவதை என்னால் அனுமதிக்க முடியாது. இங்கே எல்லோருமே விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது என்னை மட்டுமே வெறும் தட்டை நக்கிக்கொண்டு போகவேண்டும் என்று கடவுள் இப்படி பண்ணுவது நியாயமே இல்லாதது. என்னுடைய வாழ்க்கையில் நானும் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டேன் ஆனால் எல்லா விஷயத்திலும் கடவுள் என்னை நேருக்கு நேராக அவமானப்படுத்தி இருக்கிறார். கடவுள் தன்னை மேல்மட்டத்தில் இருப்பவர் என்று சொல்லிக்கொண்டாலும் அடிமட்டத்தில் இருப்பவர்கள் யாரையுமே கடவுள் கொடுமைக்கு உள்ளாக்குவதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த உலகம் எனக்கானது. வெறும் கையோடு நான் சாகமாட்டேன். வாழ்க்கையை கஷ்டமாக மாற்றுகின்ற விஷயங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி பண்ணி கொன்றுவிட்டால் வாழ்க்கை ரொம்பவுமே சுலபமாக மாறிவிடும். வாழ்க்கை நன்றாக இருக்கும். நான் நிறைய கஷ்டங்களை பட்டுட்டேன். எனக்கு கஷ்டம் கொடுத்தவங்க எல்லோருமே நல்லா இருக்கிறார்கள் ஆனால் நான் இனிமேலும் கஷ்டப்பட வேண்டும் அதாவது வெறும் தட்டை நக்கவேண்டும் என்றால் அது நடக்காது. இந்த மாதிரியான அடக்குமுறையை என் மேலே செலுத்தி கடவுள் என்னை அடக்குவது எனக்கு பிடிக்கவில்லை. இங்கே ஆரம்பத்தில் இருந்து எனக்கு எதுவுமே கிடைக்க கூடாது என்று கடவுள் நுணுக்கமான திட்டங்களோடு சின்ன சின்ன செயல்களை பண்ணுவதோடு பெரிய செயல்களையும் பண்ணுகிறார். இங்கே நானும் நிறையவே இழந்துவிட்டேன். நான் கெஞ்சினாலும் என்னை கடவுள் மன்னிக்கப்போவது இல்லை என்றும் நான் தவறே செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்றும் கடவுள் நியாயமற்ற காரணங்களை சொல்கிறார். இந்த டெலீட் ஆன பதிவுகளை போட்டு நான் பிளாக்கில் சம்பாத்தித்து இருந்தால் கிடைக்கும் 50 ரூபாய்யில் ஏதாவது பொருட்களையாவது வாங்கி இருப்பேன் ஆனால் கடவுள் 50 ரூபாய் மற்றும் 5 மணி நேரம் என்னுடைய வாழ்க்கையில் வீணாக போகவேண்டும் என்றே பண்ணிவைத்துவிட்டார். நான் ஒன்றும் பொழுது போகவில்லை என்று பிளாக் வைத்து நடத்தவில்லை. எனக்கு பணம் வேண்டும். நானும் நிறைய சம்பாதித்து கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் பிளாக்-களை நடத்திக்கொண்டு இருக்கிறேன். கடவுள் என்னை முட்டாள் என்று சொல்லி கடவுள் எனக்கு பண்ணுகிற வஞ்சகமான விஷமான நடவடிக்கைகளை மறைக்க கூடாது. நீங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என்றால் அடுத்தவர்களை தாழ்வாக நடத்த கூடாது. நான் யாராக இருக்கிறேன். நான் என்ன பண்னினேன். நான் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறேன். நான் என்ன பண்ணப்போகிறேன் எல்லாமே எனக்கு தெரியும். நான் முடிவு பண்ணிய வகையில் நடந்தால்தான் எல்லாருக்குமே நல்லது. இங்கே நீங்கள்தான் புத்திசாலி என்றால் எனக்கு தேவையான விஷயங்கள் கிடைக்காமல் நான் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்ற கேவலமான எண்ணத்தை விட்டுவிடுங்கள். நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன். எனக்கான சம்பளம் வருவதை தடுக்க வேண்டாம். இங்கே என்னுடைய கோபம் ரொம்பவுமே அதிகமான அளவுக்கு உள்ளது. நான் என்றால் நான் ஒருவன் மட்டுமே என்று கிடையாது எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் விதி சந்தோஷமாக இருப்பதே பின்னால் எதுக்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும் ! கடவுள் பின்னும் இந்த நரம்பு வலையில் நான் மாட்டிக்கொண்டு இருக்கலாம் ஆனால் என்னுடைய கோபம் இந்த நரம்பு வலையை எரித்துவிடும் என்று நான் நம்புகிறேன். இந்த விளையாட்டில் நான் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்னுடைய கோபம் அதனுடைய அதிகபட்சத்துக்கு போகவேண்டும். கடவுளுடைய அனைத்து செயல்களையும் அந்த கோபம் எரிக்க வேண்டும். இதைத்தான் நான் கண்டுபிடித்து இருக்கிறேன். கோபம்தான் பாதுகாப்பு. கோபம் இல்லை என்றால் அடித்து அவமானப்படுத்தப்படுவார்கள். கோபம் இருந்தால் கடவுளால் கூட எதுவுமே பண்ண முடியாது.
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...