திங்கள், 4 மே, 2026

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #9

𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆

"நாளை கல்லூரி தேர்வு என்று

ஜன்னலைச் சாத்திக்கொண்டு படிக்காதே!

உன் வீட்டு ஜன்னல் வழியாக 

வரும் வெளிச்சத்தை வைத்துத் தான்

தெருவோரத்துப் பூக்கள் எல்லாம்

விடிந்துவிட்டது என்று நினைத்து 

மலரக் காத்திருக்கின்றன..

நீ படிக்காவிட்டாலும் பரவாயில்லை,

எனக்காக ஒருமுறை அந்த 

சன்னல் திரையை மட்டும் விலக்கிவிடு!"

𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆

"அபார்ட்மெண்ட் 

மொட்டை மாடியில்

எல்லாரும் நடக்கும் 

சத்தம் எனக்குத் தெரியும்!

ஆனால் உன் காலடி  

சத்தம் மட்டும் தனி ரகம் 

அது என் இதயத் துடிப்போடு 

போட்டி போட்டுக் கொண்டு

ஒரு இசையை அமைக்கிறது!

நீ நடப்பது தரையில் அல்ல, 

என் இதயத்தின் நரம்புகளில்!"

𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆

"நம் அபார்ட்மெண்ட் வாசலில் இருக்கும்

அந்தப் பழைய டியூப்லைட் 

ஏன் அடிக்கடி சிமிட்டுகிறது தெரியுமா?

நீ அந்த வழியே கடந்து போகும் போதெல்லாம்

உன் அழகைப் பார்த்து அதற்கு 

கண் அடிக்கத் தோணுகிறது!

பாவம், அது ஒரு ஜடம் என்பதால் - தன்

மின்சாரத்தை வெளிச்சமாக மாற்றி

உன்னை ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கிறது!"

𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆

(\(\           /)/)
(‧ ‧`)        (  . .) <(...)
(ა૮ )o      (ა💌

(\(\           /)/)
(‧ ‧`)        (‧ ‧  ) 
(ა૮ )o      (ა💌

 (\(\    (\(\  
(,,0 0)(-  -,,)
(  ა૮💗૮   )o

𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆𝄞˚⋆. ♡‧₊˚‧⋆

கருத்துகள் இல்லை:

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #14

  " அபார்ட்மெண்ட் லிஃப்ட் கதவு  மூடும்போது ஒரு நொடி  என் இதயம் நின்று போகிறது!  உன்னை என்னிடமிருந்து  அது மறைப்பதாலோ என்னவோ..  அந்த இடை...