Tata Docomo-வின் ஒரு செகண்ட் ஒரு பைசா: இதுதான் அன்றைய மிகப்பெரிய புரட்சி. அதற்கு முன் நிமிடம் கணக்கில் காசு போன நிலையில், செகண்ட் கணக்கில் காசு குறைவதைப் பார்த்து மக்கள் வியந்தனர் இதுவே குறைந்தபட்ச ஆப்பர் என்றால் அதிகபட்ச டாக்டைம் செலவு எவ்வளவு ஆகும் என்று பாருங்கள்.
ஃபோன் செலவை வங்கிக்கணைக்கில் இணைத்தவர்களுக்கு பணம் விரைவில் காணாமல் போனது, நிறைய பேர் வங்கிகளில் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்,
இன்று போல வாட்ஸ்அப் (WhatsApp) அப்போது பிரபலம் இல்லை. போனில் பேலன்ஸ் தீர்ந்துவிட்டால், எதிர்தரப்புக்கு 'மிஸ்டு கால்' கொடுத்துவிட்டு அவர்கள் திரும்பக் கூப்பிடும் வரை காத்திருப்பதே ஒரு தவம்
PRS / 2G: இன்டர்நெட் என்பது ஒரு எட்டாக்கனி. ₹5-க்கு ஒரு நாள் 'அன்லிமிடெட்' 2G டேட்டா போட்டால், அந்த 'E' சிம்பல் வருவதற்குள் உயிர் போய்விடும். ஒரு சின்னப் புகைப்படம் டவுன்லோட் ஆக 5 நிமிடங்கள் எடுக்கும்.
ஆனால் அந்த போட்டோ அளவே வெறும் 110 kb அதாவது 0.1 mb அளவே இருக்கும், wikipedia இணையம் ஃபேமஸ் நிலையில் இருந்த காலங்கள் அவை என்றே சொல்லலாம்.
நல்ல பாட்டுகள் அல்லது வீடியோக்கள் இருந்தால் 'ப்ளூடூத்' (Bluetooth) மூலம் போனை அருகில் வைத்து மாற்றிக்கொள்வார்கள் bluetooth இருக்கும் ஃபோன் வைத்திருந்தால் கெத்து , ரிங்டோன்கள் குட்டி வீடியோ கேம்கள் வால்பேப்பர் போன்றவைகளை மாற்றிக்கொள்ளலாம்,
இன்று நாம் 6 அங்குலத் திரைகளில் உலகம் பார்க்கிறோம். ஆனால் அப்போது Nokia 1100, 1600 மற்றும் Nokia 2700 classic தான் ராஜாக்கள் , விற்பனையில் சக்கை போடு போட்ட sony ericcson ஃபோன்கள் பணக்கார வீடு என்பதன் அடையாளமாக இருந்தது
வீட்டுக்குள் சிக்னல் கிடைக்காமல், மொட்டை மாடிக்கோ அல்லது ஜன்னல் ஓரத்திற்கோ ஓடிப் போய் கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு பேசும் அந்த அவஸ்தையான தருணங்கள் இப்போது நினைத்தாலும் சிரிப்பைத் தரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக