வியாழன், 28 மே, 2026

LIFE TALKS - KETTALUM MENMAKKAL MENMAKKALEY ! #1

 


நல்லவர்களின் மனம் எப்போதும் ஒரு திறந்த புத்தகம் போலத்தான் இருக்கும். அதில் அன்பு, நேர்மை, மற்றவர்களுக்கு உதவும் குணம் போன்ற நல்ல கருத்துக்கள் மட்டுமே நிறைந்திருக்கும். அவர்கள் எல்லோரையும் தங்களைப்போலவே நல்லவர்களாகத்தான் பார்ப்பார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே நல்லவர்கள் சில கொடியவர்களாலோ அல்லது அவர்கள் சந்திக்கும் துரோகங்களாலோ காயப்படுத்தப்படும்போது, அவர்களிடம் இருக்கும் அந்தப் பழைய 'கருத்து புத்தகம்' மூடிவிடுகிறது. அதற்குப் பதிலாக, அவர்கள் சந்திக்கும் வலிகளும் ஏமாற்றங்களும் அவர்களை ஒரு 'இருள் நிறைந்த சட்டப்புத்தகமாக' மாற்றிவிடுகிறது

அதற்குப் பிறகு அவர்கள் எல்லோரையும் எளிதில் நம்புவதில்லை. தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள், யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யாரை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும்" என்ற கணக்குகளும் சட்டங்களும் அவர்களிடம் உருவாகிவிடுகின்றன

அளவுக்கு அதிகமாகக் காயப்பட்ட நல்லவனின் அன்பு, உடைந்த கண்ணாடியைப் போன்றது. அதுவரை பிம்பங்களின் அழகைக் காட்டிய அது, உடைந்த பின் நெருங்குபவர்களைக் காயப்படுத்தத் தொடங்கும்! இது இயற்கையின் எதார்த்தம் !

ஒரு நல்லவன் தன் இயல்பை இழக்கும்போது, அவன் வேண்டுமென்றே கெட்டவனாக மாறுவதில்லை; மாறாக, தன்னை உடைத்த உலகத்திடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு ஆயுதமாக அவனது குணம் மாறிவிடுகிறது, சமூகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் ! 

கருத்துகள் இல்லை:

LIFE TALKS - KETTALUM MENMAKKAL MENMAKKALEY ! #2

  மன்னிக்கத் தெரிந்த இதயம் ஒரு பெருங்கடல் போன்றது, எதையும் உள்வாங்கும். ஆனால், துரோகங்கள் என்னும் பனிப்புயல் தொடர்ந்து தாக்கும் போது, அந்த ம...