காதலர்கள் ஒரு 100 - 200 கூடுதல் ஆனாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட ஒரு நம்பர் மட்டும் கணக்கு இல்லாமல் அல்லது ரேட் கட்டரில் சேர்த்துக்கொள்ள பார்ப்பார்கள், உதாரணத்துக்கு ஃபோன் பண்ணி 70 ரூபாய் டாக் டைம் இருந்தால் ஒரு நிமிடத்துக்கு 40 பைசா மற்ற நம்பர்களுக்கு ஆனால் ஸ்பெஷல் குரூப் ரீசார்ஜ் பண்ணியவர்களுக்கு அந்த நம்பர் அழைத்தால் மட்டுமே ஒரு நிமிடத்துக்கு 4 பைசா மட்டுமே, அப்படி எல்லாம் பேசி எஸ்.எம்.எஸ் அனுப்பி வளர்த்த காதல் கதைகள் ஏராளம்,
அப்போதிருந்த வினோதமான ஆஃபர்கள்: ஒரு குறிப்பிட்ட குழுவிற்குள் மட்டும் இலவசமாகப் பேசிக்கொள்ளலாம். காதலர்கள் இதற்காகவே ஒரே நெட்வொர்க்கிற்கு மாறுவார்கள்.ஒரு சில முதலாளிகள் ஆபீஸ் நம்பர்க்கு இந்த ரொமான்ஸ் பேக் ரீசார்ஜ் செய்து சூப்பர்வைஸரை ஃபோன் மேல் ஃபோன் செய்து வேலை வாங்கியதெல்லாம் செம்ம காமெடி
இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பைசா செலவில்லாமல் பேசலாம். இதனால் அன்று பல இளைஞர்களுக்குத் தூக்கமே இருக்காது, காதல் கதைகளை பேசிக்கொண்டு ரொமான்ஸ் பேச்சுக்கள் மட்டுமே பல மணி நேரம் இருந்த நாட்கள் எல்லாம் இருந்தது. விடிந்ததும் ஆபீஸ் போனால் அங்கே சிஸ்டம் முன்னால் தூங்கி வழிந்து புரோகிராம் டிசைன் செய்துகொண்டு இருப்பார்கள் நமது இளைஞர்கள்
₹15-க்கு ரீசார்ஜ் செய்தால் மாதம் முழுக்க 10,000 எஸ்எம்எஸ் இலவசம். டைப் செய்து களைத்துப் போன விரல்கள் அன்றைய தலைமுறைக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும் - மாச கடைசியில் அத்தனை மெசேஜ்களையும் காலி செய்துவிட்டு ஒவ்வொன்றாக டெலீட் செய்ய மனதே வராது, அன்லிமிடெட் மெசேஜ் ஸ்டோரேஜ் அந்த ஃபோன்களில் இருந்தது இல்லை.
மாக்ஸிமம் 100 முதல் 300 மெசேஜ்கள் மட்டும்தான் ஃபோன் ஸ்டோரேஜ் பக்கம் இருந்துகொண்டு இருக்கும், காதலியிடம் பேசுவதற்காக தனி ஃபோன் வாங்கிய பெருமைகள் எல்லாம் IT வேலை இளைஞர்களை சாரும் ! டிஜிட்டல் மினி காமிராவில் ஒரு போட்டோ எடுத்து அதனை நெட் சென்டரில் கொடுத்து பின்னர் அதனை ஃபோன் ஸ்டோரேஜ் டிரான்ஸ்பர் செய்து வால்பேப்பர் பிக்சர் வைப்பார்கள் !
---

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக