வியாழன், 14 மே, 2026

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.11

 



அப்போது போனில் இருக்கும் மெமரி கார்டுகள் மிகச்சிறியதாக இருக்கும் (Micro SD). அதை கணினியில் போட வேண்டும் என்றால், ஒரு பெரிய கார்டு போன்ற 'Adapter'-க்குள் சொருக வேண்டும். 

அந்த அடாப்டர் தொலைந்து போனால் அல்லது அதில் இருக்கும் அந்தச் சிறிய 'Lock' பட்டன் நகர்ந்துவிட்டால், பாட்டு ஏற்ற முடியாது. கடைக்காரர் அந்த அடாப்டரை எடுத்து, கார்டை வாயால் ஊதி (Dust போக வேண்டுமாம்!), உள்ளே சொருகும் அந்த ஸ்டைலே தனி

"Phone Memory" vs "SIM Memory" ஒரு நம்பரைச் சேமிக்கும்போது பெரிய போராட்டமே நடக்கும். சிம் கார்டில் 250 நம்பர் தான் சேமிக்க முடியும். அது நிறைந்தவுடன், "Delete some entries" என்று மெசேஜ் வரும்.

முக்கியமான நண்பர்களின் பெயர்களைச் சேமிக்கும்போது இடப்பற்றாக்குறையினால் 'Suresh College', 'Ramesh Airtel' என விசித்திரமாகப் பெயர்களைச் சுருக்கி வைப்போம்.

புது போன் வாங்கினால், அதன் 'Keypad' தேய்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு தடிமனான பிளாஸ்டிக் அல்லது சிலிகான் கவர் போடுவார்கள். கொஞ்ச நாள் கழித்து அந்த கவர் மஞ்சளாக மாறிவிடும், உள்ளே அழுக்கு சேர்ந்துவிடும். ஆனாலும் அதை கழட்ட மாட்டார்கள்.

மெசேஜ் டைப் செய்யும்போது அந்த பிளாஸ்டிக் கவர் கொடுக்கும் ஒரு 'சத்தமே' தனி சுகம்

பேலன்ஸ் எதாவது கட் ஆகிவிட்டால், கஸ்டமர் கேருக்கு (121 அல்லது 198) கால் செய்வோம்.

"உங்கள் அழைப்பு எமது வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கு இணைக்கப்படும் வரை காத்திருக்கவும்" என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டைப் போடுவார்கள்.

அந்தப் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும், யாரும் எடுக்க மாட்டார்கள். பேலன்ஸ் இல்லாத கவலையை விட, அந்த மியூசிக்கைக் கேட்டு வரும் கடுப்புதான் அதிகமாக இருக்கும்

இன்று எல்லாமே MP4. அன்று அப்படி இல்லை.3GP மற்றும் AVI தான் ராஜாக்கள். ஒரு வீடியோவை இன்னொரு போனுக்கு அனுப்பினால், "File format not supported" என்று வரும்.

அதற்காகவே கணினியில் 'Format Factory' அல்லது 'Total Video Converter' வைத்து வீடியோவின் தரத்தைக் குறைத்து (Resolution), போனுக்கு ஏற்றார் போல மாற்றி ஏற்றுவோம். அந்தத் தரம் குறைவான மங்கலான வீடியோவையே உலக அதிசயம் போலப் பார்ப்போம்

உன்கிட்ட நோக்கியா 'குண்டு பின்' சார்ஜர் இருக்கா? இல்ல 'சின்ன பின்' சார்ஜரா?" - இதுதான் அப்போதைய பொதுவான கேள்வி.

நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், சார்ஜர் பின் பொருந்தாமல் போவது ஒரு பெரிய சோகம். சில போன்களுக்கு சார்ஜர் பின்னை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைத்து வைத்தால் தான் சார்ஜ் ஏறும்.

அந்த 2011 காலகட்டத்தில், தொழில்நுட்பம் நம்மை விட ஒரு அடி பின்னால் தான் இருந்தது, ஆனால் அதன் மீது நமக்கு இருந்த ஆர்வம் இப்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு அதிகம்

---
SYSTEM_THERMAL: STABLE

கருத்துகள் இல்லை: