நம்ம வாழ்க்கையில் நிறைய குறைகளை நாம் சந்திக்கலாம் ஆனால் இந்த குறைகளுக்கு பழகிப்போவதாலோ அல்லது இந்த குறைகளை கடைசிவரையில் சரி செய்யாமல் விடுவதாலோ நமது வாழ்க்கை முழுமை ஆவதை நாமே தடுக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும் !
இன்றைய தேதிக்கு என்ன நிலை இருக்கிறதோ இந்த நிலை கடைசி வரையில் மாறாமல் இருக்க போகிறது என்று கற்பனை செய்துகொண்டு நமது நிலையை மாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் அதனை நழுவ விடுவது என்பது எந்த அர்த்தமும் இல்லாதது,
நம்முடைய வாழ்க்கையில் மனிதர்களுக்கு அறம் அல்லது வன்முறை என்று இருவகை பாதைகள் மட்டுமே இருப்பதை காணலாம், இந்த இரண்டு பாதைகளில் ஒரு பாதையை தேர்ந்தெடுத்தால் இன்னொரு பாதையை கைவிடுவதை தடுக்க முடியாது
நம்முடைய வாழ்க்கை மாயாஜாலாமான பயணம் என்று எடுத்துக்கொள்ளுங்கள் இங்கே நன்மை செய்யும் மாயாஜாலம் மட்டுமே இருக்கும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல, மோசமான மாயாஜாலங்களும் இருக்கதான் செய்கிறது !
நம்முடைய செயல்கள் நூறு சதவீதம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் அந்த கட்டுபாட்டை நாம்தான் கொண்டுவர வேண்டும், இந்த விஷயங்களில் நிறைய பேசலாம் மக்களே தொடர்ந்து நமது வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் மக்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக