"
அபார்ட்மெண்ட் லிஃப்ட் கதவு
மூடும்போது ஒரு நொடி
என் இதயம் நின்று போகிறது!
உன்னை என்னிடமிருந்து
அது மறைப்பதாலோ என்னவோ..
அந்த இடைவெளியில் நீ தரும்
அந்தச் சின்னப் புன்னகை போதும்
நான் மொட்டை மாடி வரை
மூச்சிறைக்கத் தேடி வர!
"
"
2013-ல் உன் கையில் இருந்த
அந்த 'செலோ கிரிப்பர்'
பேனாவாக நான் இருக்கக் கூடாதா?
உன் விரல்கள் என்னை இறுக
பிடித்திருக்கும் போதெல்லாம்
உன் எண்ணங்கள் மையாக
மாறி என் வழியே காகிதத்தில்
கவிதையாக இறங்குவதை
நான் ரகசியமாக ரசித்திருப்பேன்!
"
"
நமது இளமை காலத்தில்
நமது இளமை காலத்தில்
அபார்ட்மென்டு கிரவுண்ட்டில்
நாம் விளையாடிய அந்தப் பழைய
பிளாஸ்டிக் பேட் உடைந்து போனது..
ஆனால், நீ பேட்டிங் செய்யும்போது
அவுட் ஆகக்கூடாது என்பதற்காக
வேண்டுமென்றே நான் வீசிய
அந்த மெதுவான பந்துகள்
இன்றும் என் நினைவுகளில் \
ஓடிக்கொண்டிருக்கின்றன!
"
( ˶˘ ³˘(⋆❛ ہ ❛⋆)!♡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக