வெள்ளி, 15 மே, 2026

LOVE TALKS - காதல் என்பதின் உண்மைத்தன்மை ! #2

 


நேசத்தைக் கொட்டுவது என்பது வார்த்தைகளில் கவிதைகள் பேசுவதோ, பரிசுகளை அள்ளித் தருவதோ அல்ல; "நான் உன்னோடு இருக்கிறேன்" என்ற அசைக்க முடியாத பாதுகாப்பை நம்மை நம்பியவர்களுக்குத் தருவதே ஆகும்.

ஒரு துன்பத்தில் உங்களோடு உடன் இருக்காத காதல் சந்தோஷம் என்று வரும்போது மட்டும் உங்களோடு இருக்கிறது என்றால் அது ஒரு போலி காதல் என்று சொல்லப்படுகிறது, தற்காலிகமாக உங்களோடு வலிமையாக இருந்தாலும் நிரந்தரமாக நிலைக்குமா என்றால் கேள்விக்குறிதானே ?

காதலின் உண்மையான பரிணாமம், 'காப்பாற்றுதல்' என்ற உன்னதப் பொறுப்பில் அடங்கியுள்ளது. இங்கு காப்பாற்றுதல் என்பது வெறும் உடல்ரீதியான பாதுகாப்பு மட்டுமல்ல; அவர்களின் சுயமரியாதை, கனவுகள், மகிழ்ச்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றை எந்தச் சூழலிலும் சிதையாமல் காப்பதாகும். 

வாழ்க்கை எப்போதும் சீராக இருப்பதில்லை; சோதனைகளும், சவால்களும், வீழ்ச்சிகளும் வரும்போது, "பிடிக்கவில்லை" என்று கைகளைக் உதறிவிட்டு ஓடாமல், கைகளைப் பிடித்துக் கொண்டு கரையேற்றுவதே உண்மையான துணைக்கு அழகு. இறுதி மூச்சு வரை அந்தப் பிடி தளராமல் இருப்பதே காதலின் உச்சகட்ட முதிர்ச்சி.

காதல் என்பது ஒரு வசதிக்கான ஏற்பாடு அல்ல; அது ஒரு வாழ்நாள் கடமை. உணர்ச்சிகளின் அலைகள் ஓய்ந்த பிறகும் எஞ்சி நிற்கும் பாசமும், 'நம்மை நம்பியவரை எக்காலத்திலும் கைவிடக் கூடாது' என்ற தார்மீகப் பொறுப்புமே காதலைப் புனிதமாக்குகிறது. 

கண்மூடித்தனமான ஈர்ப்புகள் காலப்போக்கில் கரைந்துவிடும், ஆனால் நம்பிக்கையின் மீது கட்டப்படும் பேரன்பு காலத்தைக் கடந்து வாழும். நம்மை நம்பியவர்களின் வாழ்க்கையை இறுதிவரை அரணாக நின்று காப்பதே காதலின் உண்மையான இலக்கணம் மற்றும் மனித வாழ்வின் ஆகச்சிறந்த அர்த்தம் ஆகும்



கருத்துகள் இல்லை:

SPECIAL TALKS - BUTTON PHONE SMS காலத்து கதைகள் !

  ப்ளூடூத்" அனுப்பும்போது அசையாமல் நிற்கும் காலங்கள் உங்களுக்கு தெரியுமா மக்களே ,  இன்று 'ShareIt' அல்லது 'Quick Share'...