வெள்ளி, 8 மே, 2026

VAAZHUM KALAI - நமது வாழ்க்கை நமது முன்னேற்றம் !!


நமது சிறப்பான வாழ்க்கைக்காக கொஞ்சம் அட்வைஸ் மக்களே : எப்போதும் கோபத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள், மகிழ்ச்சியில் இருக்கும்போது வாக்குறுதி அளிக்காதீர்கள். உணர்ச்சிகள் அடங்கிய பின் சிந்திப்பதே ஒரு முதிர்ச்சியான மனிதருக்கு சரியான அறிவுத்திறனாக இருக்கிறது, அதிகமாகப் பேசுவதை விட, ஆழமாகக் கவனிப்பதே ஒருவரைப் பேரறிஞனாக்கும். பிறர் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பது, அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிக உயரிய மரியாதை, செல்வம் என்பது சேர்த்து வைப்பதில் இல்லை, தகுதியுள்ளவர்களுக்குக் கொடுத்து மற்றவர்களோடு சேர்ந்து இன்னும் அதிகமாக சம்பாதித்து மகிழ்வதிலேயே இருக்கிறது. நாம் பிறருக்குக் கொடுக்கும் ஆதரவே, நாளை நாளை நமக்குத் தேவையாகும்போது திரும்பி வரும், சமூக பொருளாதார கட்டமைப்பு வெறும் சுயநலத்தால் மட்டுமே உருவாகாது, இருளைத் திட்டுவதை விட, ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது. அதுபோல, மற்றவர் குறைகளைப் பேசுவதை விட, அவர்களிடம் உள்ள ஒரு நற்பண்பைப் பாராட்டுவது சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்கும் ஆகவே மற்றவர் மீது குறைகூறும் முன், நம்மிடம் உள்ள சிறு தவறுகளையும் சரிசெய்ய முன்வருவோம். உலகைத் திருத்த முயல்வதை விட, நம்மை நாமே செதுக்கிக் கொள்வதே அறம் என்று சொல்லப்படுகிறது, ஒரு மரத்தின் கிளைகள் வானத்தைத் தொட வேண்டுமானால், அதன் வேர்கள் இருண்ட ஆழமான மண்ணைத் தழுவியிருக்க வேண்டும். நம் வாழ்வின் உயர்வும் அத்தகையதே; புகழை உலகம் காணட்டும், ஆனால் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைதியான ஆழத்தில் இருக்கட்டும். நமது வேர்களை வெளிப்படுத்தாமல் இருக்கும் வகையில் நம்முடைய வாழ்க்கை பிரகசமானதாக இருக்கும் ! கடலில் தாகத்திற்காக அலைபவனை விட, ஒரு துளி மழையைச் சேகரிப்பவனே புத்திசாலி. வாய்ப்புகள் ஏராளமாக இருக்கலாம், ஆனால் எது உங்களுக்குத் தேவையோ அதை மட்டும் தேர்ந்தெடுப்பதே வாழ்வின் நிம்மதி, சரியான முடிவு என்ன என்பதை நாம்தான் கண்டறிந்து செயல்பட வேண்டும் மக்களே !! 

கருத்துகள் இல்லை:

GREAT STORIES IN TAMIL LANGUAGE ! - உங்களுடைய இளமையை நம்பி இருக்க வேண்டாம் !

TAMIL : இளமைப் பருவத்தில் நமது மூளையின் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' (Neuroplasticity - மூளை தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன்) ம...