வியாழன், 14 மே, 2026

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.5

 ₹30 காலர் டியூன்: மாதம் முப்பது ரூபாய் செலவு செய்து பிடிதத பாட்டை வைப்பார்கள். காதலர்களுக்கிடையே சண்டை என்றால் உடனே சோகமான பாட்டை காலர் டியூனாக மாற்றி தன் 'ஸ்டேட்டஸை' வெளிப்படுத்துவார்கள்.

இசை ஒன்லி பாலிபோனிக் ரிங்டோன் பிரபலமாக இருந்தது , ஆரம்பக் காலங்களில் வந்த அந்த இசைக்கருவி சத்தம் மட்டும் கொண்ட ரிங்டோன்கள் இப்போதும் கேட்டால் அந்த நாட்களுக்கே கொண்டு போய்விடும்.

பெரிய மால் அல்லது தியேட்டருக்கு வெளியே ஒரு சின்னப் பெட்டிக்கடை இருக்கும். அங்கு ஒரு போர்டு தொங்கும்: "இங்கே மெமரி கார்டுகளுக்கு பாட்டுகள் மற்றும் வீடியோக்கள் ஏற்றித் தரப்படும்.

பாடல்கள் என்றால் கேஸட் தேய கேட்ட பாடல்கள் என்று நம்மிடம் ஏராளமாக இருந்த நாட்கள் அவை, அப்படி ஒரு பிரமாதமான ஆர்வம் என்பது அந்த நாட்களில் இருந்தது. ₹10 அல்லது ₹20 கொடுத்தால், புதுப் படப் பாடல்கள், வடிவேலு காமெடி மற்றும் 'Action' வீடியோக்களை ஏற்றித் தருவார்கள்

மெமரி கார்டில் இடம் பத்தாமல், எதை டெலீட் செய்வது என்று அரை மணி நேரம் யோசித்த காலமது. 1GB மெமரி கார்டு வைத்திருப்பவன் தான் அன்றைய 'டான்' என்றே சொல்லலாம், 

'பேலன்ஸ்' பரிமாற்றம் என்று ஒரு விஷயம் இருந்தது மக்களே , "டேய் மச்சான், ஒரு ரெண்டு ரூபாய் பேலன்ஸ் அனுப்புடா, ஒரு முக்கியமான கால் பண்ணனும்" - இது அன்றைய ஹாட் டயலாக். 

Balance Transfer: ஒரு நெட்வொர்க்கிலிருந்து இன்னொரு போனுக்கு ₹5 அல்லது ₹10 கடனாகவோ அல்லது மாற்றவோ முடியும். அப்போதே 20 பர்சண்ட் வட்டி , 100 ரூபாய்க்கு 20 ரூபாய் சார்ஜ் ஆகும் , 120 ரூபாய் செலவு ஆகும், 

அவசர காலத்திற்கு நெட்வொர்க்கே ₹5 அல்லது ₹10 'Loan' தரும் ஆனால்/ அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும்போது அதை வட்டியோடு பிடித்துக்கொள்வார்கள். இப்படி நிறைய பஞ்சயத்துக்கள் அந்த ஃபோன்களில் இருந்தது ! 



===



---

கருத்துகள் இல்லை:

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.13

சார்ஜர் தொலைத்துவிட்டு வெளியூர் பயணம் சென்று ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும் அந்த இடத்தில் கிடைக்கும் கடையில் சார்ஜ் போட்டு மொபைல் ஆன் ஆகும்போ...