சனி, 23 மே, 2026

LOVE TALKS - நமது சமூக அமைப்புகளை கடந்து வென்று காட்டுதல் !

 



மனிதன் ஒரு சமூக அமைப்பு என்ற இடத்தில் ஒரு பகுதி. அவனுக்கு உணவும் இருப்பிடமும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தார்மீக ரீதியான ஒரு பிடிமானம். ஒருவரை நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் ஏன் அவசியம் என்றால் மனரீதியான பாதுகாப்பு என்ற விஷயம்தான் !

மனரீதியான பாதுகாப்பு  உலகம் முழுவதும் நம்மை எதிர்த்தாலும், "எனக்காக ஒரு உயிர் இருக்கிறது, என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள ஒரு இதயம் இருக்கிறது" என்ற எண்ணமே மனிதனுக்கு மிகப்பெரிய மனவலிமையைத் தருகிறது. இது மனிதனுடைய வளர்ச்சியின் அடைப்படையான ஒரு பகுதி

சுயநலத்தை போக்கும் ஆயுதம் என்று காதல் ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. "நான், எனது" என்ற சுயநலத்திலிருந்து மாறி, "நமக்கு, நமது" என்று இன்னொரு உயிருக்காக வாழக் கற்றுக்கொடுப்பது காதல் மட்டும்தான். சுயநலமாக இருந்தவர்கள் தன்னை சார்ந்தவர்களை காப்பாற்ற முயற்சிப்பது இங்கே நடக்கிறது

வாழ்க்கையின் அர்த்தம்: எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் இயந்திரத்தனமாக ஓடும் வாழ்க்கைக்கு, சுவையையும் அர்த்தத்தையும் கொடுப்பது அன்புதான். ஒருவரை நேசிக்கும் போதுதான் நம்மிடம் இருக்கும் சிறந்த குணங்கள் (மன்னிப்பு, பொறுமை, அரவணைப்பு) வெளியே வருகின்றன.

காதல் என்பது திருமணத்திற்கு முன்னால் மட்டும்தான் வர வேண்டும் என்ற விதியெல்லாம் கிடையாது. அது எந்தக் காலகட்டத்திலும், யாருக்கு வேண்டுமானாலும் மலரலாம். 

திருமணத்திற்கு முன்னால் தோற்றவர்கள், தங்களின் உண்மையான அன்பையும் அர்ப்பணிப்பையும் திருமணத்திற்குப் பின் தன் துணையிடம் காட்டும் போது, அங்கும் காதல் பிரம்மாண்டமாக ஜெயித்து விடுகிறது. நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் இந்த பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த விதி!

1 கருத்து:

குரு சொன்னது…

கொடுத்து வச்சவன் அந்த ஜிம் மாஸ்ட்டர் , இந்த அக்கா வேற கியூட்டா இருக்கு, நல்லா இருங்கடா ரெண்டு பேரும், எனக்கு வேற எதுனா செட்டானாலும் ஆவுதானே பாக்கறன்

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...