வியாழன், 28 மே, 2026

GENERAL TALKS - இந்த வாழ்க்கை நமக்கு நிறைய விஷயங்கள் சொல்கிறது !



கடினமான விஷயங்களை செய்ய வேண்டும் மக்களே ! எந்த ஒரு வலியும் இல்லாமல், மென்மையாகக் வருடிக் கொடுக்கும் காற்றால் ஒரு பாறையைச் சிலையாக மாற்ற முடியாது. 

உளியின் கடுமையான அடிகளைத் தாங்கும் பாறைதான் ஒருநாள் கோவிலில் சிலையாக நிமிர்ந்து நிற்கிறது, நிரந்தரமான வரலாற்று கல்வெட்டுக்களை நாம் பார்க்கிறோம், 

வாழ்க்கை நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறது மக்களே ! வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் அடிகள் நம்மை சிதைப்பதற்காக அல்ல, நம்மை ஒரு முழுமையான மனிதனாகச் செதுக்குவதற்காகவே, இன்னும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நாம் பார்த்துக்கொள்ளலாம், 

கடின உழைப்பாலும், வலிகளாலும் ஒரு மனிதன் பக்குவப்படும் போது அவனது பேச்சிலும் எழுத்திலும் ஒரு தனித்துவம் இருக்கும், கவனமாக இருக்க வேண்டும், ஒரு சின்ன அளவுக்கு தவறுகளை நடக்க அனுமதித்தால் கூட பின்னாட்களில் பிரச்சனைகள் அதிகமாகிவிடும்

வாழ்க்கை எந்தவித உராய்வும் (முரண்பாடுகளும்) இன்றி மிக எளிதாக நகரும் போது, அது ஒரு பலவீனமான, மேலோட்டமான வாழ்வையே உருவாக்குகிறது. அங்கே நன்றியுணர்வு, சகிப்புத்தன்மை, பிறர்நிலை உணர்தல் (Empathy) போன்ற நற்பண்புகள் வெறும் அகராதி வார்த்தைகளாகவே நிற்குமே தவிர, அவை வாழ்ந்து உணர்ந்த எதார்த்தங்களாக மாறுவதில்லை. 

தடைகளற்ற ஒரு சுலபமான பாதை, எல்லாமே எப்போதும் சீராகவே இருக்கும் என்ற ஒரு தற்காலிக மாயையை உருவாக்குகிறது. இது மனித வாழ்வின் அடித்தளத்திலிருக்கும் வாழ்வாதாரப் போராட்டங்களை ஒருவருக்குப் புரியாமல் செய்து, மிகச் சிறிய ஒரு அலைக்கழிப்பைக் கூடத் தாங்க முடியாத அளவுக்கு அவரைப் பலவீனமாக்கிவிடுகிறது. 

ஆனால், சோதனைகள் வந்து இந்த வசதியான, போலியான அடுக்குகளைத் தீவிரமாக உதிர்க்கும் போதுதான், வாழ்க்கையின் உண்மையான கட்டமைப்பு என்னவென்பது கண்ணுக்குப் புலப்படுகிறது. 

திடீரென வரும் கஷ்டங்கள் என்பவை பிரபஞ்சம் நமக்குத் தரும் ஏதோ ஒரு கொடூரமான தண்டனை அல்ல, மாறாக அவை நம் அக விழிப்புணர்விற்கான ஒரு உந்துதல். அது ஒரு மனிதனைத் தன் எல்லைகளைத் தானே எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறது. 

அவனது அப்பாவியான உலகப் பார்வையை உடனடியாக உடைத்தெறிந்துவிட்டு, இந்த உலகம் உண்மையில் எப்படி இயங்குகிறது என்ற உறுதியான, அசைக்க முடியாத எதார்த்தப் புரிதலை அங்கே விதைக்கிறது

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - JUNE 2026 - மோட்டிவேஷன் சரியாக பயன்பட வேண்டும் !

மோட்டிவேஷன் மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கையில் குதித்துவிட்டால் நாளைல இருந்து விடியற்காலை 4 மணிக்கு எந்திரிக்கிறோம், ஓடுறோம், ஜிம்முக்கு போற...