தெரியாமல் எதாவது ஒரு எண்ணை அழுத்திவிட்டால், இருக்கும் பத்து ரூபாய் பேலன்ஸும் 'Value Added Service' என்ற பெயரில் அபேஸ் ஆகிவிடும். அப்புறம் கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டு சண்டை போடுவது ஒரு தனி கதை.
அப்போது போனில் தவறுதலாக அந்த 'Internet' பட்டனை அழுத்திவிட்டால் போதும், ரத்தம் உறைந்துவிடும், இன்டர்நெட் ரீசார்ஜ் பண்ணாமல் இன்டர்நெட் பயன்படுத்தினால் மொத்த காசும் காலி !
ஏனென்றால் 'டேட்டா பேக்' போடாமல் இன்டர்நெட் போனால், ஒரு கேபி-க்கு (KB) இவ்வளவு பைசா என்று கணக்கு போட்டு, 100 ரூபாய் மெயின் பேலன்ஸை ஐந்தே நிமிடத்தில் ஜீரோ ஆக்கிவிடுவார்கள் தவறுதலாக பிரவுசர் ஓப்பனாகியிருந்தால், போனை ஏதோ வெடிகுண்டு போல பயந்து போய் 'Switch Off' செய்த நாட்களும் உண்டு - அந்த பிரவுசர் வேறு வெளியே வர நினைத்தாலும் குளோஸ் ஆகாது
அந்தக் காலத்து போன்களில் ரேடியோ கேட்க வேண்டும் என்றால், கண்டிப்பாக ஒயர்டு ஹெட்போனை மாட்ட வேண்டும். அதுதான் 'Antenna'-வாகச் செயல்படும். ஹெட்போன் மற்றும் 'FM Radio' - இன்று போல வயர்லெஸ் எல்லாம் கிடையாது.
இரவு நேரங்களில் 'ஹலோ எப்.எம்' அல்லது 'ரேடியோ மிர்ச்சி'-யில் வரும் நேயர் விருப்பப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவது ஒரு சுகமான அனுபவம்,
ஸ்மார்ட்போன்கள் போல அன்று 'In-built' பேட்டரி கிடையாது. போன் எதாவது ஒரு மெசேஜ் படிக்கும்போது 'ஹேங்' ஆகிவிட்டால், ஒரே தீர்வுதான் - பின்னாடி இருக்கும் கவரைத் திறந்து, பேட்டரியை ஒருமுறை கழட்டி மாட்டிவிட்டு ஆன் செய்வது. அதுதான் அன்றைய 'Restart
அந்த 2011-ல், ஒரு சிறிய 2-இன்ச் திரைக்குள் நம் மொத்த உலகமும் அடங்கியிருந்தது. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் "நான் கிளம்பிட்டேன்", இரண்டு மிஸ்டு கால் கொடுத்தால் "நான் வீட்டுக்கு வந்துட்டேன்" என நமக்கென்று ஒரு ரகசிய சிக்னல் மொழியே இருந்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக