வியாழன், 14 மே, 2026

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.6

 



ஒரு ரீசார்ஜ் கடையில் ஆரம்பிக்கும் காதல், உண்மையில் பலரது வாழ்க்கையில் ஒரு லேண்ட்மார்க். அப்போது ரீசார்ஜ் என்பது வெறும் பணம் கட்டுவது அல்ல; அது ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. 

இது நகர்புற காதல்களில் சாதாரணம் , கிராமத்து பொண்ணு காதல் என்றால் ஊருக்குள் நமது பொண்ணு வைத்திருக்கும் மொபைல் ஃபோன் உள்ளே ஒரு ஐ லவ் யு மெசேஜ் கிடைத்தால் போதும் 

அந்த சென்னை பையனை ஒரு பஸ் பிடித்து ஊருக்கு வரவைத்து போலீஸ் மற்றும் அரசியல் புள்ளிகளுடன் காதலை கட்ட பஞ்சயத்து பண்ணி வைத்த அளவுக்கு பிரச்சனைகள் அந்த காலத்தில் சென்றுக்கொண்டு இருந்தது 

ஒரு எஸ் எம் எஸ் , ஒரு ஃபோன் கால் என்பது எல்லாம் மிகவும் அவசரம் என்றால் மட்டுமே செலவு செய்யபடும் ஒரு கரன்சி போல பாரக்கபப்பட்டது, மெடிக்கல் எமர்ஜென்ஸி என்றால் டாக்டர் ஃபோன் பண்ண ஒரு ஃபோன் பேலன்ஸ் வைத்திருப்பது என்பது மிக அவசியமானது.

அந்த காலத்தில், பெரியவர்களிடம் கொடுக்கபடும் ஃபோன் தவறி உடையவோ தண்ணீர் படாமலோ பாத்துக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி காஸ்ட்லி ஃபோன்கள் கொடுக்கப்பட்ட காலங்கள் அவை ! 

50 அல்லது 100 மெசேஜ் வந்தாலே 'Inbox Full' என்று காட்டும். அதில் எதை டெலீட் செய்வது என்று பெரிய போரே நடக்கும். காதலி அனுப்பிய கவிதை மெசேஜ்களை மட்டும் டெலீட் செய்ய மனமில்லாமல், மற்ற எல்லா 'Service' மெசேஜ்களையும் தேடித் தேடி அழிப்போம்

இந்த சர்வீஸ் மெசேஜ்களை டெலீட் பண்ணுவதை குழந்தைகள் எல்லாம் கல்யாண மண்டபத்தில் ஒரு வீடியோ கேம் அசைன்மெண்ட் போல செய்துகொண்டு இருப்பார்கள் ஃபோன்களை கொடுத்தால்

பிரதிபலனாக அவர்களை போட்டோ எடுக்க வேண்டும், போட்டோ குவாலிட்டி என்பது குறைவுதான் ஆனால் நினைவுகள் அதிகமாக இருந்த நாட்களாக அவைகள் இருந்தது. 

சில முக்கியமான, கோபமான அல்லது உருக்கமான மெசேஜ்களை அனுப்பிவிடாமல் 'Drafts'-ல் சேமித்து வைக்கும் பழக்கம் அப்போது பலருக்கும் இருந்தது

---
HELLO

கருத்துகள் இல்லை:

GREAT STORIES IN TAMIL LANGUAGE ! - உங்களுடைய இளமையை நம்பி இருக்க வேண்டாம் !

TAMIL : இளமைப் பருவத்தில் நமது மூளையின் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' (Neuroplasticity - மூளை தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன்) ம...