வெள்ளி, 8 மே, 2026

VAAZHUM KALAI - தெளிவான சிந்தனைகள் தேவைப்படுகிறது மக்களே !




நீங்கள் யார் மீதாவது வெறுப்பு வைத்திருந்தால் ஜெயிக்கவே முடியாது மக்களே , மன்னித்தல் என்பது பலவீனம் அல்ல; அது நம் மன அமைதிக்காக நாம் நமக்கே கொடுத்து நம்மை முன்னேற வைக்கும் ஒரு காஸ்ட்லியான பரிசு. ஒருவரை மன்னிப்பதன் மூலம் நீங்கள் அவரை விடுவிக்கவில்லை, உங்களைச் சிறைபிடித்திருந்த கோபத்திலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்கிறீர்கள், கவனமாக யோசித்து பாருங்களேன், நதி ஓடும்போது சத்தம் போடுகிறது, ஆனால் அது கடலில் சேரும்போது மௌனமாகிறது. அறிவும் அதுபோலத்தான்; முழுமை பெற்ற அறிவு எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை, அது அமைதியான ஆழத்தைக் கொண்டிருக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் மனநிலை; நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கை. உலகத்தின் கண்ணாடி உங்களை அழகாகக் காட்டலாம், ஆனால் உங்கள் மனசாட்சியின் கண்ணாடி மட்டுமே உங்களை உண்மையாகக் காட்டும்.அதுக்காக நம்முடைய வாழ்க்கையில் நாம் போலியாக இருக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளே இருந்தாலும் உண்மைகள்தான் ஒரு கட்டத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணுகிறது, நம்பிக்கையை விடவேண்டாம் மக்களே ! தோல்வி என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு திசை திருப்பம். ஒரு கதவு மூடப்படும்போது, நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறந்திருக்கும் மறுபுறத்து ஜன்னலை கவனிக்கத் தவறிவிடுகிறோம் , யாரும் பார்க்காத போதும் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதே உங்கள் உண்மையான குணம். உலகம் புகழுக்காகக் காத்திருக்கலாம், ஆனால் சமத்தான மக்கள் எப்போதும் வேல்யூவை அதிகரிக்க மட்டுமே காத்திருப்பார்கள் ! இங்கே பெயரும் புகழும் நிரந்தரம் இல்லாதது, நமது வேலைகளே சொத்துக்களே நமக்காக நிலைக்கக்கூடியது ! 

1 கருத்து:

செல்வா சொன்னது…

ஒரு பக்கம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவுக்கு பின்னர் சரியான தலைமை தேடி என் மனம் தவித்தது .. மீண்டும் ஒரு எம்ஜிஆர் நமக்கு கிடைக்க மாட்டாரா என்று என் மனம் ஏங்கியது.. அந்த ஏக்கத்தை தவிப்பை போக்கிய மாபெரும் தலைவர் தலைவர் நம் முன்னால் அமர்ந்து இருக்கும் வாழும் எம்ஜிஆர் மக்களின் மகத்தான தலைவர் தான் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்கள்.. சட்டப்பேரவைல அண்ணன எலிவேஷன் பண்ணிட்டு இருக்காங்க! காமராஜ் அவர்கள் வேற லெவல் எதிர்க்கட்சியை செய்துவிட்டார் தமிழக மக்களைக் காப்பாற்றும் முதலமைச்சர் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா என்ன? ( சிரிப்பு அலையில் சட்டப்பேரவை ) திருச்சியில் ரௌடிகள் தானாக வந்து சரண் அடைந்து விட்டார்கள் என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சுகிறார்கள் கஞ்சா வித்தவர்கள் கள்ள கடத்தல் செய்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள் . எனது ஆதரவை தமிழக வெற்றி கழகத்திற்கு அளிக்கிறேன் . முதல்வர் அவர்கள் எனக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் - காமராஜ் MLA , விஜயை GOD MODE ல வைத்து தமிழ்நாட்டை வழிச்சு சாப்பிட இப்படி ஒரு நரித்தந்திர கூட்டம் இருக்கிறது, தமிழ் மக்கள் பொழைப்பார்களா ?

GREAT STORIES IN TAMIL LANGUAGE ! - உங்களுடைய இளமையை நம்பி இருக்க வேண்டாம் !

TAMIL : இளமைப் பருவத்தில் நமது மூளையின் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' (Neuroplasticity - மூளை தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன்) ம...