"நாம் எப்போதுமே நம்மை ஒரு பெரிய மனிதராகவோ அல்லது குறையே இல்லாதவராகவோ கருதிவிடக் கூடாது. ஏனெனில், உலகில் குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை வாழ்வில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு:
வெற்றியாளர்கள்: தன்னிடம் உள்ள குறைகளை உணர்ந்து, அவற்றைச் சரியாகத் திருத்திக் கொண்டு முன்னேறுபவர்கள். ஆனால் தோல்வியாளர்கள்: எப்போதும் தனது குறைகளைப் பற்றியே சிந்தித்து, வருத்தப்பட்டுக்கொண்டு காலத்தை வீணடிப்பவர்கள்."
அடுத்தவன் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் நாம் செய்யும் முதல் தவறு. அவன் கையில் இருப்பது தங்கம் என்பதால் உன் கையில் இருக்கும் வெள்ளி மதிப்பு இல்லாமல் போய்விடாது. நம்மிடம் இருப்பதை நேசிக்கத் தொடங்கினால், மற்றவர்களின் வளர்ச்சி நம் கண்ணை உறுத்தாது. அதுதான் வாழ்க்கை!
ஜெயித்தவன் எல்லாரும் திறமைசாலி கிடையாது, தோற்றவன் எல்லாரும் முட்டாளும் கிடையாது. விழுந்த போதெல்லாம் எவன் ஒருவன் 'பரவாயில்லை பாத்துக்கலாம்' என்று மீண்டும் எழுந்தானோ, அவனே இன்று மேடையில் நிற்கிறான். மற்றவர்கள் வெறும் கைதட்டலோடு நின்றுவிடுகிறார்கள்
யாரோ ஒருவன் உங்களை கல்லால் எறிந்தால், அதைத் திருப்பி எறியாதீர்கள். அந்த கற்களைச் சேகரித்து ஒரு உயர்ந்த கட்டிடமாக மாற்றுங்கள். நீங்கள் உயரத்தில் நின்றால், கீழே இருப்பவன் எறியும் கல் உங்களை வந்து அடையாது; அது அவன் கையைத்தான் வலிக்கும்.
நமக்குச் சரி என்று தோன்றுவது மற்றவருக்குத் தவறாகத் தோன்றலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. மற்றவர் கருத்துக்கு மதிப்பு அளிப்பதன் மூலமே நாம் மேன்மையானவர்களாக மாறுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக