செவ்வாய், 12 மே, 2026

LIFE TALKS - நமது வாழ்க்கைக்கு தேவை ஒரு நிரந்தர மனமாற்றம் !


===

நம்ம வாழ்க்கையில் எந்த ஒரு கட்டத்திலும் நமக்கு ஒரு நிரந்தர மனமாற்றம் தேவை என்பதை உணரும் ஒரு தருணம் அமையும். வாழ்க்கை என்பது ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் பயணம் அல்ல; அது பல திருப்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் கொண்டது. 

ஏதோ ஒரு கட்டத்தில், நாம் இன்றுவரை வாழ்ந்து வந்த முறை, நாம் கொண்டிருந்த நம்பிக்கைகள், மற்றும் நம் அன்றாடச் செயல்பாடுகள் எல்லாமே ஒரு சலிப்பைத் தரத் தொடங்கும். குறிப்பாக நமது பிரச்சனைகளை சரிசெய்ய முடியாத நிலை 

அப்படி ஒரு நிலையில் சலிப்பு நேர்ந்தால் நம்மை பிரச்சனைகளில் இருந்து நாம் வெளியே கொண்டுவரும் வரை அந்த சலிப்பு போகாது, மனம் மெல்ல கிசுகிசுக்கும்: "நமக்கு ஒரு நிரந்தர மனமாற்றம் தேவை."

பொதுவாக ஒரு சோர்வு ஏற்படும்போது நாம் ஒரு சுற்றுலா செல்கிறோம் அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம். ஆனால், இவை யாவும் தற்காலிகமான 'நிவாரணங்கள்' மட்டுமே. பிரச்சனைகளை சரிசெய்ய என்ன முடிவை எடுக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது, 

முடிவு எடுப்பதோடு அதனை வருடக்கணக்கில் சேர்த்து வைத்து வெற்றியடைய வெப்பதும் கடினமான காரியமாக கருதாப்படுகிறது, ஒரு பாடல் வரியில் இடம்பெறுவது போல உலகத்தின் கடைசி நாள் இன்றுதான் என்பது போல ஒரு மன நிறைவு இல்லாத வாழ்க்கை, நம்ம எதிர்காலத்துக்காக ஒரு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை என்பது அடிப்படையில் கடினமானது ! 

உண்மையான மாற்றம் என்பது வெளிப்புறச் சூழலை மாற்றுவது அல்ல; நம் மனதை கட்டுப்படுத்தி பார்ப்பது. எண்ணங்களின் போக்கை மாற்றுவதும், பழைய கசப்புகளைக் களைவதும், புதியதொரு புரிதலோடு உலகை அணுகுவதுமே அந்த "நிரந்தர மனமாற்றம் !

இந்த மானமாற்றத்தை செய்து முடித்தாலும் வாழ்க்கை கடினமானதாக சோகமாக இருந்தாலும் நம்மால் ஜெயிக்க முடியும் மக்களே ! அந்த வகையில் இது வாழ்க்கையின் அடிப்படை செயல்முறை ! 




 

TAKE CARE AND BE WELL!

கருத்துகள் இல்லை:

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.4

---  ---