அப்போது மார்க்கெட்டில் 'G-Five', 'Lemon', 'Micromax' போன்ற பிராண்டுகள் புகுந்து விளையாடிய காலம். பிரம்மாண்ட ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட ஒரு சின்ன சைனா போனில் நான்கு ஸ்பீக்கர்கள் இருக்கும். தெருவில் போகும்போதே பாட்டு அலறும்.
Antenna போன்கள்: சில போன்களில் டிவியைப் போல அன்டெனா இருக்கும். அதை இழுத்து விட்டு 'Live TV' பார்க்க முயற்சிப்போம் (ஒழுங்காகத் தெரியாது என்பது வேறு விஷயம்!).
நோக்கியாவே ஒற்றை சிம் போட்டுக்கொண்டிருந்த காலத்தில், இரண்டு சிம் கார்டுகளைப் போட்டு 'கெத்து' காட்டியது இந்த சைனா போன்கள்தான்.
இந்த வரலாற்றில் சைனா ஃபோன்களை மறக்கவே முடியாது, தோடு திரை டச் ஃபோன்கள் நோக்கியா , சாம்சங் போன்றவை உலக அளவில் லாஞ்ச் பண்ணிய நாட்களுக்கு ஒரு வருடம் முன்னதாகவே நம்ம ஆளு டச் ஸ்கிரீன் ஃபோன் வைத்து இருப்பார்.
நகத்தை வைத்து டச் செய்வது , டச் பேனா என்று பல இன்புட்கள் அவைகளில் இருந்தது, pdf என்னதான் அமெரிக்கா கண்டுபிடித்தாலும் . txt ஃபார்மட்டில் ebook படிக்கும் வசதியை சைனா ஃபோன் தயாரிப்பு நிறுவனமே கண்டுபிடித்தது
Full Talk time ஆஃபர்: ₹100 ரீசார்ஜ் செய்தால் அதே ₹100 பேலன்ஸ் கிடைக்கும். இது ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். பொதுவாக ₹100-க்கு ₹82 தான் கிடைக்கும் - இந்த ஆப்பர் மெசேஜ் கிடைப்பது ஒரு lottery டிக்கெட் ஜெயிப்பதை போன்றது
பேச காசு இருந்தாலும், 'வேலிடிட்டி' முடிந்துவிட்டால் அவுட்கோயிங் கட் ஆகிவிடும். அந்த வேலிடிட்டியை நீட்டிக்கவே ஒரு ₹10-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
வாட்ஸ்அப்பில் ஒரு போட்டோவை சாதாரணமாக அனுப்புகிறோம். ஆனால் அன்று ஒரு போட்டோவை அனுப்ப ₹5 முதல் ₹10 வரை செலவாகும். போட்டோ அனுப்பிய பிறகு, அது போய்ச் சேர நீண்ட நேரம் எடுக்கும். இடையில் சிக்னல் போனால் காசு மட்டும் காலியாகும், போட்டோ போகாது. இந்த கொடுமை MMS மெசேஜ் என்று அழைக்கப்பட்டது !
அப்போது "புளூடூத்" தான் நமக்கான இலவச ஷேரிங் ஆப். இரண்டு போன்களையும் ஒட்டி வைத்துக்கொண்டு பாட்டு மாற்றுவது ஒரு தனி ஸ்டைல்
PLAY
VID- 0:00:00

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக