வெள்ளி, 15 மே, 2026

SPECIAL TALKS - ORU KAALATHTHIL BUTTON PHONE NINAIVUGAL !


புளூடூத் ஆன் செய்யும்போது நம் போனுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும். அதில் தான் நம் பசங்களின் மொத்த கிரியேட்டிவிட்டியும் இருக்கும். 'Don', 'King of Hearts', 'Single Pasanga', 'உன் நெஞ்சில் தஞ்சமே' என விசித்திரமான பெயர்களை வைப்பார்கள். 

பக்கத்து வீட்டுப் பொண்ணு புளூடூத் ஆன் செய்திருக்கிறாளா என்று தேடிப் பார்த்து, அவளது போன் பெயரைப் பார்த்துவிட்டு மொட்டை மாடியில் நின்று சிரித்துக்கொள்ளும் அந்த வால்தனங்கள் இப்போதெல்லாம் சாத்தியமே இல்லை.

போர்வைக்குள் திருட்டுத்தனமான மெசேஜ்களும் இருந்த காலங்கள் மறக்க முடியாதது,  வீட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு, போர்வையைத் தலைப்பு வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு நட்பு வட்டாரம் எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பும் அந்தத் த்ரில் இருக்கிறதே... அப்பாடா! நோக்கியா போன்களில் மெசேஜ் டைப் செய்யும்போது 'குக்-குக்' அல்லது 'டக்-டக்' என்று ஒரு சிறிய பிளாஸ்டிக் சத்தம் கேட்கும்.

வீட்டில் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பட்டன்களை மிகவும் மென்மையாக, நகங்களால் அழுத்தாமல் விரல் நுனியால் அமுக்கி டைப் செய்த அந்த நொடிகள் நிஜமாகவே ஒரு பொக்கிஷமான காலகட்டம் என்றே சொல்லலாம் ! 

அப்போது ஒரிஜினல் சார்ஜர் ஒயர் கொஞ்ச நாளில் தேய்ந்து போய்விடும். போனில் சார்ஜ் போட வேண்டும் என்றால், பின்னை சொருகிவிட்டு சும்மா வைக்க முடியாது. ஒயரை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைத்து, அதன் மேல் ஒரு கனமான அகராதி புத்தகத்தையோ அல்லது ஒரு வாட்டர் பாட்டிலையோ தூக்கி வைக்க வேண்டும்.

அப்போதுதான் அந்தத் திரையில் 'Charging' என்று காட்டும். யாராவது தெரியாமல் அந்தப் பக்கமாகப் போய் காலை வைத்தால், சார்ஜ் கட் ஆகிவிடும். "டேய்! யாரும் அந்தப் பக்கம் போகாதீங்கடா, சார்ஜ் ஏறிட்டு இருக்கு" என்று போனுக்குக் காவல் காத்த நாட்கள் அவை

கருத்துகள் இல்லை:

GREAT STORIES IN TAMIL LANGUAGE ! - உங்களுடைய இளமையை நம்பி இருக்க வேண்டாம் !

TAMIL : இளமைப் பருவத்தில் நமது மூளையின் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' (Neuroplasticity - மூளை தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன்) ம...