புதன், 13 மே, 2026

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.1



--- 
இன்று போல 'அன்லிமிடெட்' டேட்டா பேக்குகள் இல்லாத காலம் மக்களே, ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு பார்த்த அந்த நாட்களின் சுவாரஸ்யமான நினைவுகள் நிறைய இருக்கிறது மக்களே, 10 ரூபாய் , 20 ரூபாய் எல்லாம் பேலன்ஸ் என்று இருந்த நாட்கள் அவைகள். 

அப்போது ரீசார்ஜ் செய்வது என்பது ஒரு அதிசயமான பெருமையான விஷயம் போல இருந்தது. தெருமுனையில் இருக்கும் பெட்டிக்கடைகளிலும், செல்போன் கடைகளிலும் தொங்கவிடப்பட்டிருக்கும் பல வண்ண அட்டைகளில் (Aircel, Vodafone, Airtel, Tata Docomo) ரேட் சார்ட்களைப் பார்ப்பதே ஒரு கலை

வெறும் ஃபோன் ரீசார்ஜ் மற்றும் சிம் கார்டுகள் விற்பனைக்கு மட்டுமே சின்ன சின்ன கடைகள் சலூன் கடைகள் பக்கத்தில் இருந்தன, மாச சம்பளம் கஸ்ட்டமர் ஆக்ஸஸ் இருப்பது போல, கூடுதல் வசதியாக ஒரு ரூபாய் சிவப்பு டெலிஃபோன் இருந்தது, கடையில் பொருட்களை அவ்வளவுதான், இருந்தாலும் இலாபம் பார்க்க வேண்டும்

கடைக்காரரிடம் நமது எண்ணைச் சொல்லி, அவர் தனது 'லோக்கல்' சிம் மூலம் நமக்கு ரீசார்ஜ் செய்வார். இந்த லோக்கல் சிம் எனபது டி ஆக்டிவேட் ஆகாத சிம் கார்டு, இதனை அடைவது ஒரு பிரிவில்லேஜ் என்றே அந்த காலத்தில் இருந்தது. 

₹10, ₹20 விலையில் கிடைக்கும் கார்டுகளை நாணயத்தால் சுரண்டி, அந்த 16 இலக்க எண்ணை டைப் செய்து 'Top-up' செய்யும் சுகமே தனி. ₹10 ரீசார்ஜ் செய்தால் ₹7.30 தான் பேலன்ஸ் வரும் (Talktime), மீதி 'டாக்ஸ்' என்று போய்விடும்


---


கருத்துகள் இல்லை:

GREAT STORIES IN TAMIL LANGUAGE ! - உங்களுடைய இளமையை நம்பி இருக்க வேண்டாம் !

TAMIL : இளமைப் பருவத்தில் நமது மூளையின் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' (Neuroplasticity - மூளை தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன்) ம...