திங்கள், 4 மே, 2026

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #13


 "மொட்டை மாடித் தொட்டியில் 
தண்ணீர் பிடிக்கும்போது 
வேண்டுமென்றே கைகளால் 
தண்ணீரைச் சிதறடிக்கிறேன்! 
உன் மேலாவது சில துளிகள் 
பட்டுத் தெறிக்காதா என்று.. 
அந்தச் சில துளிகள் உன் 
கன்னத்தில் படும்போது 
நீ கோபமாக என்னைப் பார்ப்பாயே 
அந்தப் பார்வைக்குத் தான் 
நான் தினமும் தண்ணீர் பிடிக்க வருகிறேன்!"

.☘︎ ݁˖.☘︎ ݁˖.☘︎ ݁˖

"பழைய காலண்டர் தாள்களை 
எல்லாம் அம்மா கிழித்து போட்டுவிட்டார்கள்.. 
ஆனால் உன் பிறந்தநாள் வந்த 
அந்தத் தாளை மட்டும் நான் 
ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறேன்! 
வருடங்கள் ஓடி  வந்தாலும் 
என் மனதுக்குள் இன்றும் 
நீ 2013-ன் அதே சுட்டிப் பெண் தான்!"

.☘︎ ݁˖.☘︎ ݁˖.☘︎ ݁˖

"உன் 'எக்ஸாம் பேடு' பின்னால் 
நான் கிறுக்கி வைத்த அந்த  
சின்ன இதயம்.. நீ தேர்வு எழுதும்போது 
உனக்குத் துணையாக இருக்கட்டும்! 
விடைகள் தெரியாமல் நீ பேனாவை 
டெஸ்க்கில் வைக்கும்போது, 
அதைத் திருட்டுத்தனமாக 
ரசித்துக் கொண்டிருப்பது 
அந்த இதயமும், அதை வரைந்த நானும் தான்!"

(\(\           /)/)
(‧ ‧`)        (  . .) <(...)
(ა૮ )o      (ა💌

(\(\           /)/)
(‧ ‧`)        (‧ ‧  ) 
(ა૮ )o      (ა💌

 (\(\    (\(\  
(,,0 0)(-  -,,)
(  ა૮💗૮   )o

கருத்துகள் இல்லை:

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #14

  " அபார்ட்மெண்ட் லிஃப்ட் கதவு  மூடும்போது ஒரு நொடி  என் இதயம் நின்று போகிறது!  உன்னை என்னிடமிருந்து  அது மறைப்பதாலோ என்னவோ..  அந்த இடை...