செவ்வாய், 5 மே, 2026

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #18

 




"2014-ல் உன் கதவு இடுக்கில் 
செருகப்பட்ட அந்தப் பெயர் இல்லாத 
கவிதைக் கடிதம் யார் எழுதியது 
என்று நீ இன்னும் தேடிக்கொண்டிருக்கலாம்! 
பக்கத்து வீட்டுப் பையனின் 
கையெழுத்து போல வேண்டுமென்றே 
மாற்றி எழுதிய அந்த வலியில் 
என் பத்து வருடக் காதலும், 
பதினாராவது பிளாட் ரகசியமும் 
இன்றும் வாழ்கிறது!"


"காற்றாடி விடும் சாக்கில் 
மொட்டை மாடிக்கு வந்து நிற்கிறேன் 
என் பட்டத்தின் நூல் 
அறுந்து போனாலும் கவலையில்லை! 
உன் வீட்டு பால்கனிப் பக்கம் 
அது தள்ளாடி விழும் போது
அதை எடுக்க நீ வரும் அந்த 
ஒரு நொடிக்காக நூறு முறை 
என் இதயத்தையே வழங்கி கொள்ளத் தயார்!"


"உன் வீட்டு லேண்ட்லைன் 
எண்ணுக்கு போன் செய்துவிட்டு 
உன் அப்பா எடுத்ததும் 
பயத்தில் வைத்த அந்த நாட்கள்! 
'யாரது?' என்று அவர் கேட்கும் போது 
மறுமுனையில் மௌனமாக 
நான் தெரு டெலிஃபோன் பக்கம்  நின்றாலும் 
என் மூச்சுக்காற்றின் வேகமே 
உனக்குச் சொல்லியிருக்கும், 
அது உன் வீட்டு வாசலில் 
நிற்கும் என் இதயம் என்று!"


"அபார்ட்மெண்ட் லிஃப்ட் கண்ணாடியில் 
நான் என் தலைமுடியைச் சீவுவது 
உன்னைப் பார்க்க அல்ல! 
நீ உள்ளே நுழையும்போது
உன் பிம்பம் அந்தக் கண்ணாடியில் 
பட்டுத் தெறிப்பதை நேருக்கு நேராக 
பார்க்கத் துணிவில்லாமல் 
ரகசியமாக ரசிப்பதற்காக மட்டுமே!"


"உன் வீட்டு வாசலை
கடக்கும்போது வேண்டுமென்றே 
என் சைக்கிள் பெல் அடிக்கிறேன்! 
உன்னை வெளியே வர சொல்ல அல்ல 
என் இதயம் உன்னைப் பார்த்ததும் 
சத்தம் போட்டு அலறுகிறது 
என்பதை உனக்குத் தெரிவிப்பதற்காக!"

2 கருத்துகள்:

@thenameisaadhi சொன்னது…

அவள் அழகைப்பற்றி

கவிதை எழுதினேன்

எழுதிய கவிதையும்

அழகானது அவளைப்போல.



✨️✨️✨️

@thenameisaadhi சொன்னது…

"அவளின் சந்தேகம்!"

"அவள் கேட்கிறாள்...
இவ்வளவு ரசிக்கின்றாய்!
நான் மெய்யிலே...
அவ்வளவு அழகா? - என்று!"

"அவன் சொல்கிறான்...
எவ்வளவோ ரசித்து விட்டேன்! பொய்யில் கூட...
நீ மட்டும்தான் அழகு! - என்று!"

ரசனை தெரிந்தவன் மாயக் காதலன்!

GENERAL TALKS - JUNE 2026 - மோட்டிவேஷன் சரியாக பயன்பட வேண்டும் !

மோட்டிவேஷன் மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கையில் குதித்துவிட்டால் நாளைல இருந்து விடியற்காலை 4 மணிக்கு எந்திரிக்கிறோம், ஓடுறோம், ஜிம்முக்கு போற...