திங்கள், 4 மே, 2026

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #11

 



"இந்த மாதம் நம் அபார்ட்மெண்டிற்கு கரண்ட் பில் அதிகமாக வரும் என்று நினைக்கிறேன்! நீ பால்கனியில் வந்து நிற்கும் போதெல்லாம் - உன் முகத்தின் வெளிச்சத்தில் தெருவிளக்குகள் எல்லாம் மங்கிப் போகின்றன! அரசுக்குத் தெரியாது.. அந்த வெளிச்சத்திற்குச் சொந்தக்காரி நீ தான் என்று!"
 
ଘ(੭ˊᵕˋ)੭* ੈ( ˘͈ ᵕ ˘͈♡)

"2011 வேர்ல்டு கப் மேட்ச் நடந்த போது கூட என் கவனம் அந்த டிவியின் மேல் இல்லை! சிக்ஸர் அடிக்கும் போதெல்லாம் எல்லாரும் கத்த - நான் மட்டும் ஜன்னல் வழியாக உன்னைப் பார்த்தேன்.. எனை பார்த்து நீ சிரிக்கும் அந்த ஒரு நொடி தான் - என் வாழ்க்கையின் மிகப்பெரிய 'வெற்றி' என்று!"

ଘ(੭ˊᵕˋ)੭* ੈ( ˘͈ ᵕ ˘͈♡)

"உன் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறது! நீ சோகமாக இருக்கும்போது உன் முகத்தை தாங்கிக் கொள்கிறது.. சந்தோஷமாக இருக்கும்போது உன் விரல்கள் அதோடு விளையாடுகின்றன! அந்த இரும்புக் கம்பியாக நான் இருந்திருந்தால் காலத்திற்கும் துருப்பிடிக்காமல் வாழ்ந்திருப்பேன்!"

ଘ(੭ˊᵕˋ)੭* ੈ( ˘͈ ᵕ ˘͈♡)


கருத்துகள் இல்லை:

LOVE TALKS - உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை !

  உறவுகள் ஒரு நாளில் அல்லது ஒரு பெரிய சண்டையால் முறிந்துவிடுவதில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் காட்டும் அலட்சியமே அதற்குக் காரணம். உளவியலில் ...