திங்கள், 15 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #17

 


நீங்கள் தொழில் துறையை தேர்ந்தெடுக்கும் ஆளாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அளந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வளர்ச்சிக்கான அளவீட்டை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் வளர்ச்சி அடைவதாக நினைத்துக்கொண்டு தேய்மானத்தை அடைந்துகொண்டு இருப்பீர்கள். இப்போதே உங்களுடைய குறைகள் உங்கள் வாழ்க்கையை பாதிப்பதை தடுத்து நிறுத்துங்கள் - ஒரு களை செடியினை களைவது போல உங்கள் குறைகளை கடினமான வகையில் செயல்களை செய்து நீக்குங்கள், உங்களுக்கு நீங்களே தண்டனைகள் கொடுத்துக்கொள்ளுங்கள். இப்போதே வெற்றிகளை நீங்கள் சேகரித்து வைத்தால்தான் வயதான நாட்களில் உங்களுக்கு கைகொடுக்கும். சம்பளதாரர்கள் வயதான பின்னால் குடும்பத்தால் மதிக்கப்பட மாட்டார்கள். தொழில் செய்யும் அதிபர்கள்தான் குடும்பத்தை தங்களுடைய கட்டுப்பட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள். சம்பளம் எப்போது நிற்கிறதோ உடல்நிலை எப்போது குறைகிறதோ அப்போதே சம்பளதாரர்களின் கதை முடிவதை நீங்கள் பார்க்கலாம் ! உங்களுடைய பிரச்சனைகளும் போட்டிகளும் எல்லோருக்கும் வந்த விஷயங்கள்தான் இணையத்தில் இதே பிரச்சனையை எப்படி மற்றவர்கள் சரிசெய்து இருக்கிறார்கள் என்பதை தேடுங்கள் எல்லாமே சந்தோஷமாக முடியும் ! 

கருத்துகள் இல்லை:

generation not loving music