ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

CINEMA TALKS - THE BAD GUYS 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




பிக்ஸார் ஸ்டுடியோஸ் போல வெறும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் படம் எடுப்பது என்ற பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, புத்தம் புதிய படத்தை வெளியிடுவதற்கு மக்களின் ஆதரவு மட்டுமே முக்கியம் என்பதை டிரீம்வொர்க்ஸ் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. அதனால்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு பெரிய பட்ஜெட்டைச் செலவழித்து, அதற்கு ஒரு பெரிய கதைக்களத்தைக் கொடுத்து மக்களின் பொழுதுபோக்கை அதிகரித்துள்ளனர். WOLF - TARANTULA - SNAKE - SHARK - PIRANHA என்ற மக்களின் அபிமானம் கொண்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு BAD GUYS இப்பொழுது திருந்தி நல்லவர்களாக வாழ முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு ஸ்பெஷல் LEVEL TECH-ஐ அபகரித்து அதன் மூலமாக உலகத்தில் இருக்கும் அனைத்து தங்கத்தையுமே கொள்ளையடிக்கக்கூடிய இன்னொரு வில்லன் குழுவிடம் இவர்கள் பணயக் கைதிகளாக மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். எப்படி அந்த வில்லன் குழுவில் இணைந்து வேலை பார்த்தாலும் அவர்களுடைய திட்டங்களை முறியடித்து நாசுக்காக வெளியே வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்துல தொடக்கக் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் காட்சி வரைக்கும் ஒரு தரமான ஆக்ஷன் அட்வெஞ்சர் படத்துக்கான விறுவிறுப்பையும், கலகலப்பையும் அடித்து நொறுக்கி ஒரு அற்புதமான அனிமேஷன் படமாக கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. DREAMWORKS கடைசியாக வெளியிட்ட PUSS IN BOOTS  படத்தின்  மக்களுடைய ஆதரவை மிக சரியானதாக புரிந்து கொண்டே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பை சேர்த்து கதையில் குறைவு. குறையில்லாமல் காட்சியமைப்பும் குறைவில்லாமல் மிகவும் தரமாக அமைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்களை மக்கள் சப்போர்ட் செய்து அதிகப்படியான வெற்றியை அடைய வேண்டும் வைக்க வேண்டும் என்று வலைப்பூவின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். !

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...