நம்ம வாழ்க்கையை இயந்திரங்களால் மாற்ற முடியும், சரியான நேரத்தில் சரியான கருவிகளும் இயந்திரங்களும் கைகளில் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் வாழ்க்கையே இழந்து நின்றவர்களை எல்லாரையுமே பார்த்து இருக்கின்றேன். இந்த இயந்திரங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது ! ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக மாறும் அளவுக்கு உங்களுடைய பொருளாதாரம் மட்டம் அடைந்துவிடும், நடுக்கடலில் விழுந்த கப்பலை மேலே எடுப்பது எப்படி ஆழமான பகுதியில் சாத்தியம் இல்லையோ அதே போல பணம் சம்பாதிப்பதும் சாத்தியமற்றதாக உங்களுடைய கடன்கள் மாற்றிவிடும் - வாழ்க்கை பணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது அல்ல. சந்தோஷங்களையுமே அடிப்படையாக கொண்டது. சந்தோஷம் இல்லையென்றால் காசை தாறுமாறாக சேர்த்துவைத்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருந்தால் கடைசியில் அனுபவிக்க உடம்பு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு சிக்கி தவிக்க வேண்டியதாக இருக்கும் ! நிறுத்தி நிதானமாக யோசித்து சில முடிவுகள் எடுக்க வேண்டும் , வேகமாக முடிவுகளையும் சில நேரம் எடுக்கவேண்டும் - வாழ்க்கையில் இயந்திரங்கள் இருந்தால் நீங்கள் இந்த முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள். இதற்காக இந்த இயந்திரத்தை அமைப்பது மிக அவசியமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக