செவ்வாய், 9 செப்டம்பர், 2025

GENERAL TALKS - வாழ்க்கை உடையும்போது நமக்காக யாருமே இல்லாதபோது !

 


இங்கே இந்த உலகத்துக்கு எவ்வளவு கொடுத்தாலுமே பத்தாது. எப்போது நாம் கொடுப்பதை நிறுத்துகிறோமோ அப்போதே நம்மை தூக்கி குப்பை போல எறிந்துவிடும் நம்மை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். இருக்கிறார்களா இறந்துவிட்டார்களா என்று கூட யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். எல்லாமே காசு பணம் பண்ணும் மாயம், தன்னை உயர்வாக நினைக்காதவன் யாருமே மற்ற உயிர்களை தாழ்வாக நினைக்க மாட்டான் சாதியும் பேதமும் பார்க்கவும் மாட்டான். இந்த உலகம் கெட்டவர்களுக்கு சொந்தமானது. இப்போது பிரச்சனை என்னவென்றால் கெட்டவராக இருந்து இந்த உலகதத்தை ஆட்சி செய்ய வேண்டும் அல்லது நல்லவராக இருந்து உலகத்தின் ஏதேனும் ஒரு மூலையில் அமைதியாக ஒரு சாமியார் போல இருந்துவிட்டு சாகவேண்டும், இந்த முரண்பாடு எல்லா இடங்களிலும் இருக்கிறது. புத்தகம் மற்றும் படிப்பு இந்த முரண்பாடை அவ்வளவு எளிதாக தூக்கிப்போட முடியாது. பணக்காரன் சொல்வதுதான் சட்டம் என்று இந்த உலகத்தின் போக்கு இருப்பதால் இந்த உலகத்தை மாற்றவேண்டும் என்றால் கூட கெட்ட விஷயங்களுக்கு இடையில் இணைந்து முன்னேற்றம் அடைந்தால் மட்டும்தான் நமக்கான விஷயத்தை நம்மால் படைக்க முடியும். நம்மால் ஏதோ சின்ன அளவுக்கு ஒரு உதவி தேவைப்பட்டால் மட்டுமே நம்மை பயன்படுத்திக்கொண்டு பசை மிட்டாய் (பபுல் கம்) போல மென்று துப்பிவிடுவார்கள், நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். சரியானது எதுவேன்றும் தவறானது எதுவேன்றும் பார்க்காது எல்லா செயல்களையும் செய்ய வேண்டும். நினைவிருக்கட்டும் வாழ்க்கை எப்பொழுதுமே விக்ரமன் சார் படம் போல எல்லோரும் நல்லவர்கள் என்ற தொனியில் இருக்காது. 

-


கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...