இந்த காலத்து அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள், பிரிந்து இருக்கும் சின்ன சின்ன கூட்டங்களை ஆட்சி செய்து அதிகாரத்தில் கொண்டுவரலாம் ஆனால் மொத்தமாக நீங்களும் நானும் என்று மொத்த மக்களும் வேற்றுமைகள் இல்லாமல் சாதி - மதம் - இனம் - மொழிகளை தூக்கிப்போட்டு இணைந்துவிட்டால் எதுவுமே யாராலுமே அதிகார வர்க்கம் என்ற போதையில் செய்ய முடியாது. இந்த விஷயத்தை சாதிக்க வேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் அடிஸ்னலாக தேவை - மக்களுடைய இணைப்பு வேண்டும் - ஒவ்வொருவருடைய புதுமையான கருத்துக்களும் ஆராயப்பட வேண்டும் - நிறைய தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் , வேற்றுமைகள் தூக்கி எறியப்பட்டு மனிதனுடைய மனிததன்மை மட்டுமே நிலைநாட்டப்பட வேண்டும், உங்களுடைய தவறுகளை நீங்களாக அக்ஸப்ட செய்தால் மட்டும்தான் உங்களுக்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொண்ட மனிதராக இருக்க வேண்டும் - இல்லையென்றால் பாதையற்ற சமவெளியில் தறிகெட்டு பெட்ரோல் தீரும் வரை நகர்ந்துகொண்டு இருக்கும் கார் போலத்தான் உங்களுடைய வாழ்க்கை இருக்கும். இப்படி கிறுக்கத்தனமாக ஏதாவது செய்துகொண்டே இருந்தால் நமக்கான அதிர்ஷ்டம் நமக்கு எப்போதாவது கிடைத்துவிடும் வாழ்க்கை மொத்தமாக மாறிவிடும் என்ற குப்பை கருத்துக்களை வாழ்க்கையின் கொள்கைகளாக மாற அனுமதிக்க வேண்டாம் ! நம்முடைய வாழ்க்கையும் ஒரு அரசியல்தான் - சரியாக பயன்படுதிக்கொள்ள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக