திங்கள், 8 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #4

 


கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே என்பது போல காதல் என்று வந்தால் நம்முடைய வாழ்க்கையே பெண்ணுக்கு அர்ப்பணிக்க முன்வருகிறோம்.  இருந்தாலுமே மிகைப்படுத்தபட்ட பெண்ணுரிமை இந்த காலத்தில் நிச்சயமாக காதல் செய்வோருக்கு பிரச்சனையாக அமைந்துள்ளது என்று ஆண்களுடைய கருத்து. இருந்தாலுமே சமூகம் வேகமாக வளர்ந்துவிட்டது. டெக்னாலஜி நிறைந்த உலகத்தில் எல்லோருக்குமே எல்லாமே ஆக்ஸஸ் இருக்கிறது. நாம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற கலாச்சார தூரமும் இந்த காலத்துடைய நவீனமயமாக்க செயல்பாட்டில் இருக்கிறது. இந்த காலத்தில் பெண்களை இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் நடக்கவேண்டும் என்பதை விட ஆண் என்றும் பெண் என்றும் பாராமல் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் எல்லோருமே மனிதர்கள்தான் என்று கருதி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் சரியான தீர்வாக சொல்லலாம் ! இதே சமயம் ஆண்கள் இருப்பதை கொண்டு போதும் என்று இல்லாமல் இன்னும் இன்னும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்கள் எடுக்கும் பின்னடைவான முடிவுகளும் பிற்போக்குத்தனமும் பெண்களோடு சேர்த்து பார்க்கும்போது நமது பரிமாணம் குறைவதை போல ஒரு தோற்றம் கொடுப்பதால் கவனமாக மேலே மேலே ஆண்கள் செல்லவேண்டும் என்பதை மனதில் பதிவு பண்ணிக்கொள்ள வேண்டும். இந்த வலைப்பூவுக்கு சப்ஸ்க்ரைப் செய்துவிடுங்கள். மறக்காமல் சந்தா பொத்தானை அழுத்துவதன் மூலம் ஃபாலோ பொத்தானை சொடுக்குவதன் மூலம் இந்த வலைப்பூவினை பின்தொடர்ந்து ஒரு பேராதரவு கொடுத்து ஒரு கமெர்ஷியல் படம் போல சூப்பர் ஹிட் கொண்டுவர வைக்குமாறு வலைப்பூ நிர்வாக கமிட்டியின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதை தெரிவித்துககொள்கிறோம்,   


கருத்துகள் இல்லை:

generation not loving music