பணத்தை சேகரிக்கவோ முதலீடு செய்யவோ பெரும்பாலான நேரங்களில் மக்களில் யாருக்குமே நம்பிக்கை இருப்பது இல்லை. இதற்கு காரணம் பணம் வெகுவாக கன்வேர்ட் செய்யப்பட வேண்டிய ஒரு காரணி, உங்களுக்கு மகிழச்சி தரும் ஒரு பொருள் வாங்க வேண்டுமா ? மேற்கொண்டு பணத்தை சேர்க்க இயந்திரங்கள் வாங்க வேண்டுமா ? உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் உங்களை காப்பாற்ற உங்களுக்கு பணம் வேண்டும் அல்லவா ? அடிப்படையில் இதனை பற்றி யாருமே யோசிப்பது இல்லை. பணம் கிடைத்தவுடன் அதனுடைய வேல்யூ பொருட்கள் , தகவல்கள் , சேவைகள் போன்ற விஷயங்களால் மாற்றப்படுகிறது. உங்களுடைய வங்கிக்கணக்கின் எண்கள் உங்களுக்கான மரியாதை என்று சொல்லபடுகிறது. உங்களுடைய வங்கிக்கணக்கு குறைந்தால் உங்கள் வாழ்க்கையில் நிஜமான நரகத்தை நீங்கள் வாழ கடமைப்பட்டு உள்ளீர்கள். இங்கே பணம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை திறம்பட பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு பொதுவாக ஏற்கப்படும் ஊடகமாக செயல்படுகிறது. இது பொருட்களுக்கு மதிப்பை அளிக்கிறது, ஏனெனில் அவை பணத்திற்குப் பரிமாற்றமாக கிடைக்க முடியும். பொருட்களை வீட்டில் குவிப்பதற்கு பதிலாக பணத்தை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். பணம் என்பது காலப்போக்கில் வாங்கும் சக்தியை வைத்திருக்கும். நீங்கள் இன்று சம்பாதித்து நாளை பயன்படுத்தலாம். இது உங்கள் உழைப்பு, நேரம் மற்றும் வளங்களுக்கு மதிப்பை அளிக்கிறது. சேமிப்பு, முதலீடு மற்றும் எதிர்காலத் திட்டமிடலுக்கு இது அடிப்படை சேமிப்பு. இனிமேல் பணத்தை பற்றி இன்னும் அதிகமாக படித்து கவனமாக செயல்படுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக