ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #1

 


இந்த உலகில் உள்ள அனைவரும் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும். மரணம் அனைவரையும் சமநிலைப்படுத்துகிறது. நீங்கள் வளமாக வாழலாம் அல்லது ஏழையாகலாம். நாம் மனிதர்கள் என்ற போர்வையில் விலங்குகளாக வாழ்வது போல. நம் சமூகத்தில் நாம் எத்தனை பாவங்களைச் செய்தாலும், மரணம் எல்லாவற்றையும் சமநிலைப்படுத்துகிறது. இந்த உலகில் மிக வேகமாக காரியங்களைச் செய்பவர்கள் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். மரணம் வருவதற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கும்படி தங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் அது எங்கே முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் காரணங்கள் உள்ளன. அவர்கள் செய்யும் அனைத்தும் சரி, மற்றவர்கள் செய்யும் அனைத்தும் தவறு என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட மனம் சொல்வதை மட்டுமே பின்பற்றுகிறார்கள். காரணம் சரி என்றால், மரணத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்? அவர்கள் கடவுளின் நிலையை அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நிறைய நேரங்களில் கர்ம பலன்கள்  பற்றிய குறைவான மதிப்பீட்டை மட்டுமே நாம் வைத்திருந்தோம். ஆனால் கர்ம பலன்கள் என்பது இந்த உலகத்தின் மிகவும்.அழுத்தம் திருத்தமான ஒரு மறைந்திருக்கக்கூடிய ஒரு சட்டம் நாம் எதனை செய்தாலும் அதனை அனைத்துமே திரும்ப நமக்கு கிடைத்து விடும் என்பது போல ஒரு கடினமான செயலை அமல்படுத்தினாலும் இன்னொரு பக்கம் ஏதோ ஒரு கற்பனை கொடியவர்களை பாதுகாத்து கொண்டிருக்கிறதா? நல்லவர்களை பாதித்து கொண்டிருக்கிறதா என்பதை இந்த சிஸ்டம் தான் முடிவு செய்து கொண்டு இருக்கிறது. மாற்றவேண்டும் என்று நினைத்தால் இந்த சட்டத்தையே மாற்ற வேண்டும். முன்னதாக இந்த வலைப்பூவின் பதிவில் சொன்னது போல ஒரு வியாபாரிக்கு அதிகமான செலவுகள் கொடுக்கப்படும்போது மக்கள் ஏழைகளாக இருக்கும் போது ஏழைகளாகவே இருக்க வேண்டும். மக்கள் பணக்காரர்களாக மாறக்கூடாது என்றுதான் அந்த வியாபாரி யோசிப்பார் ஏன் என்றால் அனைவருமே பணக்காரனாக மாறிவிட்ட பின்னால் வியாபாரம் என்பது சலித்துப் போய்விடும் வியாபாரத்தை உடைய பொருட்களின் மீதாக குறையுள்ள பொருட்கள் கொடுக்கும் பொழுது அந்த பொருட்களுக்கான கம்ப்ளைன்ட் தான் அதிகமாகும்.அதுவே மக்களை பணக்காரர்கள் அடையவிடாமல் தடுத்து விட்டால்.யாராலும் தரமற்ற பொருட்களை அதிகமான விலைக்கு விற்றால் கூட எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற ஒரு சூழ்நிலை அமைந்து விடும். இதனை இன்னொரு புரிதலின் அடிப்படையில் பார்க்க வேண்டும் !

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...