இங்கே வெறும் எழுத்து துறையை தவிர வேறு எந்த வகையிலும் உங்களை முன்னேற்றம் செய்யாமல் விட்டுவிடாதீர்கள். உங்களுக்கு வேறு எந்த வகையிலும் வருமானம் வரும் விஷயங்களை தவறவிட்டு விடாதீர்கள், எழுத்து கதை சொல்லல் - திரைத்துறை எல்லாம் க்ரியேட்டிவிட்டி தேவைப்படும் விஷயம். இந்த உலகத்தில் க்ரியேட்டிவிட்டி மிகவும் விலைமதிப்பு மிக்க கற்பனையான விஷயம், சாதாரண அளவிலான கிரியேடிவிட்டிக்கு கூட 1000 முதல் 10000000 வரை செலவு செய்து ஒரு லெட்டர் முதல் ஒரு திரைப்படம் வரை ப்ராஜக்ட்கள் அமைவதை பார்க்கலாம், இந்த துறையில் இன்னும் தேடல்கள் இருந்துகொண்டே இருக்கிறது. போலியான விஷயங்களுக்குள்ளே உண்மையான விஷயங்களை தேடுவது என்பது மிக மிக கடினமான விஷயமாக இந்த துறையில் இருக்கும். பொய்களும் போலிகளும் மட்டுமே இந்த துறையில் கொண்டாடப்பட்டு உண்மையை கொடுக்கும் மக்கள் புறக்கணிக்கப்பட்டு போதைக்கு சென்று காணாமல் போவதை கண்களால் பார்த்துக்கொண்டும் இந்த துறை பாதுக்காகப்பான துறை என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஒரு நாள் தீபாவளி சந்தோஷம் போல வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதி எழுத்து என்று நீங்கள் முடிவு பண்ணிக்கொள்ளுங்கள். முழுமையாக இந்த துறையை தேர்ந்தெடுத்தால் எல்லாமே வெற்றியை சாதாரணமான வகையில் அடைய முடியாமல் மிக மோசமான வகையில் அடைவது எப்படி என்று பார்க்க முடியும் அதிசயத்தை இந்த துறையின் ஒரு புள்ளியில் உணர்வீர்கள். இந்த துறையின் வெற்றி வாய்ப்பு 0.01 சதவீதம், ஆயிரத்தில் ஒருவர்தான் இந்த துறையில் ஜெயிக்க முடியும் ! கவனமாக இருங்கள் மக்களே, இனி வருங்காலம் எழுத்தை சார்ந்து இல்லை. இனிமேல் எல்லாமே இன்டர்நெட்தான். மக்கள் காணொளிகள் பக்கம் சென்றுவிட்டார்கள். எழுத்துக்களை படிக்க கூட ஆட்கள் இல்லை.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே இது என்ன முதலா ? முடிவா ? இனி எந்தன் உயிரும் உனதா ? புது இன்பம் தாலாட்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக