ஒரு சில நேரங்களில் மிக அதிகமான தனிமையை உணர்ந்துகொள்ள வேண்டியது இருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்த விஷயங்கள் நமக்கே எதிராக வந்து நிற்கும் என்று என்னும்போது நம்மால் சமாளிக்கவே முடியாமல் போகிறது. நிறைய நேரங்களில் மனிதர்களை நம்புகிறோம் ஆனால் கிடைப்பது என்னவென்றால் வெறுமையும் ஏமாற்றமும்தான். மனது ஒரு கடினமான பாதையை தேர்ந்தெடுத்து செல்லும்போது இன்னொருவரின் மேலே நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் கண்டிப்பாக நிறைய முறைய யோசித்து இருந்திருக்க வேண்டும். ஒரு ஒரு முறையுமே காயப்படுவது கடைசியில் நாமாகத்தான் இருக்கிறோம். இந்த காலம் நம்பிக்கை வைக்க சரியான காலமாக கருதப்பட முடியாத நாட்களை கொண்டு இருக்கிறது. மறுபடியும் வாழ்க்கை ஒரு கொடூரமான தனிமையை கொண்டுவந்து சேர்த்துவைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த விஷயங்களை செல்லம் பணம் சரிசெய்துவிடும் பணத்தால் மட்டுமே சரிசெய்துவிட முடியும் பணம் ஒரு மனிதனை கடவுளாக மாற்றும் சக்திகளை கொண்டு இருக்கிறது ஆனால் மனிதனோ பணத்துக்கு சரியான புரிதல் கொண்டு நடந்துகொள்வது இல்லை. ஒரு குட்டி பையன் ஒரு ரிமோட் கார் மேலே ஆசைப்படுகிறான். அவனுக்கு அந்த ரிமோட் கார் வாங்கி கொடுக்க யாருக்கும் வசதி வாய்ப்பு இல்லை என்னும்போது எங்கோ இருந்து ஒருவர் பணத்தை கொண்டு வந்து அந்த காஸ்ட்லியான ரிமோட் காரை வாங்கிகொடுக்க முடியும் என்றால் அந்த மனிதர் செய்த செயல் ஒரு கடவுள் செய்யும் மாயாஜாலத்துக்கு சமமானது ஆகும். இது போன்ற விஷயங்களை மிக கவனமாக முடிவெடுத்து செய்ய வேண்டும். கொஞ்சம் சோதப்பினாலும் பலன்கள் கிடைப்பது உங்களுக்கு கேள்விக்குறி ஆகும் என்ற அளவுக்கு ரிஸ்க் இப்படி நல்ல வகையில் பணத்தை செலவு செய்வது என்ற காரியத்துக்குள்ளே இருக்கிறது. நல்ல வகையில் பணத்தை செலவு செய்வது மற்றவர்களுக்கு நல்ல சந்தோஷத்தை கொடுக்கும் ஆனால் சரியான இணைப்பை அந்த விஷயம் கொடுக்கிறதா என்று கேட்டால் அது உங்களுடைய சாமர்த்தியத்தை பொறுத்தே அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக