இந்த காலத்தில் விவசாயம் கொடுத்த மண்ணின் வாசனை மாறிவிட்டது, கான்கிரீட் கட்டமைப்புகள் பணத்தை கொட்டும்போது விவசாயம் மற்றும் சமூக மனித மதிப்பின் வாசல் மூடிவிட்டது , லஞ்சத்துக்கு விலைபோன அதிகாரிகளால் மனித நேயம் விற்பனைக்கு வந்தபோது எதிர்த்து கேள்வி கேட்க கூடாத ஒரு பயத்தில் உருவாகும் மௌனம் தான் சட்டமாயிற்று. பழமொழிகள் பஞ்சாயத்தாய் இருந்த நாட்களில் மக்கள் பள்ளிக்கூடம் வரை சாதியை கொண்டு போனதால் பழி தீர்க்கும் நீதியும் அதன் வேலையை காட்ட சண்டைகளுக்கு மத்தியில் முன்னேற்றம் பஞ்சமாயிற்று. பழி தீர்க்கும் விஷயங்களை இப்போது பணம் வெகுவாக ஊக்குவிப்பு செய்கிறது. அரசின் கையொப்பமிட்ட காகிதங்கள் மிகைப்படுத்தி ஒரு சாரருக்கு மட்டும் சப்போர்ட் பண்ணும் கடவுளின் பெயரால் களவாடப்படும் இந்த காலத்தில் சட்டம் ஒரு நாடக மேடை அதிகாரிகள் ஒரு அரைநடிப்பு ஆட்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை மற்றவர்களுக்கு கிடைக்கிறது என்று பொறாமை மட்டுமே பேசும் அரசியல். கல்வி ஒரு மதிப்பீடு என்பதை தவிர சமூகத்தை குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுப்பது இல்லை. மனப்பாடம் செய்த தேர்வுகளுக்கு கொடுத்த மதிப்பெண்கள் மதிப்பீடு ஒரு மதிப்பில்லாத கணக்கு மக்களுடையமனசாட்சி தூங்கும் நகரத்தில மனித உரிமை வேறும் ஒரு கனவாகும் இவைகளை எல்லாம் மாற்றவேண்டும் ஆனால் பேசிக்காக ஆயிரம் விவேக் சார் காமெடி காட்சிகள் வந்தாலும் மக்கள் கொஞ்சமாகத்தான் கருத்துக்களை புரிந்துகொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக