திங்கள், 15 செப்டம்பர், 2025

MUSIC TALKS - APRIL MAYILE PASUMAIYE ILLAI KAANCHU POCHU DAA.. INDHA OORUM PIDIKKALE ULAGAM PIDIKKALE BORE..BORE.. DAA !- TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே 
காஞ்சு போச்சுடா 

இந்த ஊரும் புடிக்கலே 
உலகம் புடிக்கலே
போரு போருடா

இது தேவையா ?
அட போங்கையா
ஜூன் ஜூலையா

பட்டாம் பூச்சிகள்
பறக்குது பறக்குது 
கண்ணாமூச்சிகள் 
நடக்குது நடக்குது


பச்சைப் பசுமைகள் 
தெரியுது தெரியுது 
அழகு கிளிகள் 
நமது விழியில் 
வலம் வருதே

குர்தா மேக்சியும்
சல்வார் கமீசும் 
சுமந்த பெண்களே !!

எங்கே என்றுதான் 
இங்கே இன்றுதான் 
வருந்தும் கண்களே !!


வீட்டில் நிற்குற
காவல் காரரும் 
மொறச்சு பாக்குறார் 

சோலைக் கொள்ளையின்
பொம்மை போலவே
வெறச்சு போகிறார்


டிரைவ் இன் 
ஹோட்டலும் 
சாந்தோம் பீச்சும் 
டல்லாய் தோன்றுதே

பாருங்கள் 
பன்னீர் பூக்களை
பார்க்காதின்று 
கண்ணீர்
வார்க்கிறோம் 
நாங்கள்

நெஞ்சம் தாங்குமா ?
கண்கள் தூங்குமா ?
துன்பம் நீங்குமா ?

காலேஜ் அழகியும்
கான்வெண்ட் குமரியும்
தியேட்டர் போகுறார்

டாக்சி டிரைவரும்
பார்த்து பார்த்து தான்
மீட்டர் போடுவார்

காலை மாலைதான் 
வேலை பார்ப்பவர்
மகிழ்ச்சி கொள்கிறார்

வாலைக் குமரிகள்
சாலை கடக்கையில்
வாயை பிளக்குறார்

ஸ்டெல்லா மேரிசும்
குயின் மேரிசும் 
தென்றல் வீசிடும் 
பூந்தோட்டம் 
வஞ்சி பாவைகள் 
தோன்றும்போது
நெஞ்சம் போடுதே 
ஆட்டம்

எங்கள் பாடுதான்
சக்கப் போடுதான்
படா ஜோருதான்

1 கருத்து:

ரவி மோகன் சொன்னது…

விழா ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா "நான் காப்புரிமை கேட்கக் கூடாது என முடிவு செய்ததற்கு காரணம் இருக்கிறது. ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். 90-களில் நான் இசையமைத்த நிறையப் பாடல்கள் இப்போது வைரலாகின்றன. 1992-ல் இசையமைத்த கரு கரு கருப்பாயி பாடல் மீண்டும் ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்டு வைரலானது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
சமீபத்தில் ஒரு பொருள் வாங்குவதற்காக மாலுக்குச் சென்றிருந்தேன். அப்போது சிறுவன் ஒருவன் அவனுடைய அப்பாவுடன் வந்திருந்தான். அப்போது அந்த தந்தை என்னைக் காண்பித்து, ``உனக்கு பிடிச்ச கரு கரு கருப்பாயி பாட்டுக்கு மியூசிக் போட்டது இவங்கதான்' னு என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த சிறுவன், அப்படியானு "சூப்பர் அங்கிள்" எனக் கை கொடுத்தான். 'நான் அங்கிள் இல்லடா தாத்தா' எனக் கூறி அவனிடம் பேசினேன். நான் எப்போதோ இசையமைத்த ஒரு பாடல் இந்த தலைமுறைக்கும் சென்று சேர்கிறது. அதுவும் நான்தான் இசையமைப்பாளர் என்பதும் தெரிகிறது. இந்த திருப்தி போதும்." என்று கூறினார்.

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...