வியாழன், 4 செப்டம்பர், 2025

GENERAL TALKS - EPISODE 1 - கமேர்சியல் படம்னா சும்மாவா ? #1




தமிழ்நாட்டில் ஒரு படம் வெளியானால் அது வணிகப் படமாக மட்டுமே இருக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. அது ஒரு வெகுவான ஆராய்ச்சிக்கு உரிய சாதாரணமான கதைகளை கொண்ட படமாகவோ மற்றும் குறைவான பொழுதுபோக்கு வேல்யூக்கள் கொடுத்தாலும் கதைக்காக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு படமாக இருக்க முடியாது. 

இதற்குக் காரணம், அந்தக் காலத்தில் வணிகப் படங்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தது. மேலும், வணிகப் படங்கள் என்பது நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள், அதிரடி காட்சிகள் மற்றும் பயமுறுத்தும் வசனங்களை கலந்து வேகமான, பொழுதுபோக்கு கதையைத் தரும் படங்களாகும். ஆனால் இப்போது, ​​தமிழ் சினிமாவாக தமிழ்நாட்டில் வெளியிடக்கூடிய பல படங்கள் நல்ல கதைக்களங்களைக் கொண்ட வாழ்க்கை தொடர்பான படங்களாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மிக சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2016 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த நிறைய படங்கள்.கமர்ஷியல் தாக்கங்களை மட்டுமே கொண்டிருக்காமல் உண்மையான கதைக்காக முக்கியத்துவம் கொடுத்து கதை சார்ந்த கொள்ளும் கேரக்டர்களை கொடுத்து வாழ்வியலை.கொடுக்கக்கூடிய படமாகத்தான் இருந்தது. இந்த மாதிரியான படங்களுக்காக மக்களுடைய வரவேற்பை இந்த காலத்தில் தான் பெற முடிந்தது. ஒரு காலத்தில் வெளிவந்த கற்றது தமிழ் போன்ற படங்கள் போதுமான கமர்ஷியல் சாயம் பூசப்படாததால் தோல்வி அடைந்ததை நமக்கான முடியும். 

ஆனால் கமர்சியல் சாயம் பூசப்படாத படங்களுக்கான.தேவைகள் அப்போது தமிழகத்தில் இருந்ததா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அந்த காலத்தை பொறுத்தவரையில் தமிழர்கள் தங்களுக்கான ஒரு கதாநாயகரை தேர்ந்தெடுத்து தங்களுக்காகவே ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ஒரு ரசனையை கொடுத்த விஷயமாக சினிமாவை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த காலத்தில்.சினிமா என்பது வெறும் ரசனை மட்டும் அடிப்படையானது அல்ல. அது வாழ்வியல் சார்ந்த விஷயம் என்பதை புரிந்து கொள்ள இத்தனை நாட்கள் தேவைப் பட்டது நம்ம ஆட்களுக்கு.

இந்த தலைப்பைப் பற்றி மேலும் பேசலாம். இந்த வலைப்பூவோடு இணைந்து சந்தாதாரராகுங்கள்.


கருத்துகள் இல்லை:

generation not loving music