செவ்வாய், 9 செப்டம்பர், 2025

MUSIC TALKS - PURIYAVILLAI IDHU PURIYAVILLAI - MUDHAL MUDHALAI MANAM KARAIVADHU YEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



˚∧_∧   +        —̳͟͞͞💗
(  •‿• )つ  —̳͟͞͞ 💗         —̳͟͞͞💗 +
(つ  <                —̳͟͞͞💗
|  _つ      +  —̳͟͞͞💗         —̳͟͞͞💗 ˚
`し´

புரியவில்லை 
இது புரியவில்லை
இது புரியவில்லை

முதல்முதலாய் 
மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை

உனது ஞாபகம் 
மறையவில்லை
அதை மறைக்க 
என்னிடம் 
திறமை இல்லை

விழியில் பார்க்கிறேன் 
வானவில்லை
அதில் விழுந்த 
காரணம் தோன்றவில்லை
இதுபோல் 
இதுவரை 
ஆனதில்லை

காலை எழுந்தவுடன்
என் கனவுகள் 
முடிவதில்லை
மாலை மறைந்தாலும்
பள்ளிக்கூடம் 
மறப்பதில்லை

தோழி துணையை 
விரும்பவில்லை
தோழன் நீயும் 
மாறவில்லை
பேச்சில் பழைய 
வேகம் இல்லை
பேச ஏதும் 
வார்த்தைகள் இல்லை

சாரல் மழையினிலே
உடல் ஈரம் 
உணரவில்லை
சாலை மரங்களிலே
இன்று ஏனோ 
நிழல்கள் இல்லை

கால்கள் இரண்டும் 
தரையில் இல்லை
காலம் நேரம் 
மாறவில்லை
காற்றில் எதுவும் 
அசையவில்லை
காதல் போல 
கொடுமை இல்லை

கருத்துகள் இல்லை:

generation not loving music